ன்பதாவது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரும், நார்வேயை சேர்ந்தவருமான மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜூன் உட்பட 10 வீரர்கள் பங்கேற் றுள்ளனர். இந்த செஸ் தொடரானது, போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டி, அமெரிக்காவில் இரண்டு போட் டிகள் என மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். 5 போட்டிகளின் இறுதியில் முன்னிலை பெறு பவர் கோப்பையை வெல்வார். வெற்றிபெறும் வீரருக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாகக் கிடைக்கும்.

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியாக போலந்தில் நடைபெறும் சூப்பர்பெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், ஏழாவது சுற்றில், 18 வயது பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் கார்ல்சனை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, அவரை எளிதாக வீழ்த்தி அசத்தினார். தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கார்ல்சன், "எனது நரம்பு மண்டலம் திடீரென மொத்தமாக செயலிழந்ததுபோல் சரியாக விளையாட முடியவில்லை" என்று தெரிவித்தார்.

cc

பிரக்ஞானந்தாவிடம் வீழ்ந்தபோதும், தொடர்ச்சியாக மற்ற வீரர்களுடன் விரைவாக விளையாடி வெற்றிகளைப் பெற்ற கார்ல்சன், இந்த போட்டியில் 25.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த சீன வீரர் வெய் யியை முந்தி, 26 புள்ளி களுடன் முதலிடத்தை பிடித்தார். பிரக்ஞானந்தா 19 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், மற்றொரு வீரர் அர்ஜூன் 18 புள்ளிகளுடன் ஐந்தா வது இடத்தையும், குகேஷ் 12.5 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்தனர். உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ள இந்திய வீரர் குகேஷ் தற்போது பின்னடைவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டித்தொடரில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருப்பதை அனைவரும் பாராட்டிவருகிறார்கள். பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தனது எக்ஸ் தளத்தில், 'செஸ் ஆட்டமென்பது சிம்மாசனத்துக்கான விளை யாட்டு என்றால், அந்த சிம்மாசனத்தில் அமர்வ தற்கு 18 வயதான புதியவர் வரக்கூடும்' என்று பிரக்ஞானந்தாவை குறிப்பிட்டுள்ளார். அதுவும், பிரக்ஞானந்தாவின் வெற்றியை பெருமையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டில்தான் செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இளம் வயதில் எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தமிழக வீரரான பிரக்ஞானந்தா. மேலும், செஸ் உலகக்கோப்பை வரலாற்றில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு வந்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். பிரக்ஞானந்தாவின் நம்பிக்கையான பயணம் இந்த ஆண்டிலும் தொடரட்டும்.

Advertisment