Advertisment

பிரபீர் விடுதலை! ஜனநாயகம் துளிர்க்கும் இடம் -வன்னி அரசு

vv

ந்தியா ஒரு கொடூரமான காலகட்டத்தில் இருக்கிறது. அதற்கு ஆவணங்களாக மோடி ஆட்சியின் இந்த பத்து ஆண்டு காலத்தில் பல சம்பவங்களை இந்தியா கண்டுவிட்டது. மோடி தனது அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் இன்றைய நாளில், கடந்த காலங்களில் மோடி செய்த அத்தனை வரலாற்றுப் பிழைகளுக்கும் விடை கிடைத்துக்கொண்டிருக்கின்றது. அரசியல்ரீதியாக ஒரு பாசிஸ்ட் தனது வரலாற்றுச் சறுக்கல்களைத் தொடங்கிவிட்டார் என்பதைத்தான் மோடியின் அந்திமக்கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Advertisment

ராகுல்காந்தியின் நாடாளுமன்ற பதவிப் பறிப்புக்கு நீதிமன்றம் நெத்தியடி கொடுத்தது போலவே பிரபீர் புர்கயஸ்தா வழக்கிலும் மோடியின் அரசியல் தந்திர சூழ்ச்சிக்கு வரலாற்று மரண அடி விழுந்துள்ளது. பிரபீர் வழக்கின் மூலமாக இரண்டு உண்மைகள் வெளிப்பட்டு வந்துள்ளன.

vv

மோடி - அமித்ஷா - சங்பரிவார் கும்பல், பத்திரிகை யாளர்கள், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த எதிர்ப்பு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்கு வதற்காக பயன்படுத்தும் விமர்சனங்கள் கேள்விக்குள் ளாகியுள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராகப் பேசுபவர்களை நகர்ப்புற நக்சல்கள், சீனா - பாகிஸ்தான் கைக்கூலிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சித்தரித்து கருத்துருக்களை மக்கள் மத்தியில் உலவவிட்டு பாசிசத்தனத்தை கட்டமைத்தார்கள். பா.ஜ.க. - மோடி - சங்பரிவார் கும்பலின் இந்த போலி பிரச்சாரத்தை பிரபீர் விடுதலை இந்திய மக்களுக்கு அம்பலப்படுத்தி யுள்ளது.

Advertisment

இன்னும் உடைத்துப் பேச வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யில், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம்

ந்தியா ஒரு கொடூரமான காலகட்டத்தில் இருக்கிறது. அதற்கு ஆவணங்களாக மோடி ஆட்சியின் இந்த பத்து ஆண்டு காலத்தில் பல சம்பவங்களை இந்தியா கண்டுவிட்டது. மோடி தனது அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் இன்றைய நாளில், கடந்த காலங்களில் மோடி செய்த அத்தனை வரலாற்றுப் பிழைகளுக்கும் விடை கிடைத்துக்கொண்டிருக்கின்றது. அரசியல்ரீதியாக ஒரு பாசிஸ்ட் தனது வரலாற்றுச் சறுக்கல்களைத் தொடங்கிவிட்டார் என்பதைத்தான் மோடியின் அந்திமக்கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Advertisment

ராகுல்காந்தியின் நாடாளுமன்ற பதவிப் பறிப்புக்கு நீதிமன்றம் நெத்தியடி கொடுத்தது போலவே பிரபீர் புர்கயஸ்தா வழக்கிலும் மோடியின் அரசியல் தந்திர சூழ்ச்சிக்கு வரலாற்று மரண அடி விழுந்துள்ளது. பிரபீர் வழக்கின் மூலமாக இரண்டு உண்மைகள் வெளிப்பட்டு வந்துள்ளன.

vv

மோடி - அமித்ஷா - சங்பரிவார் கும்பல், பத்திரிகை யாளர்கள், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த எதிர்ப்பு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்கு வதற்காக பயன்படுத்தும் விமர்சனங்கள் கேள்விக்குள் ளாகியுள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராகப் பேசுபவர்களை நகர்ப்புற நக்சல்கள், சீனா - பாகிஸ்தான் கைக்கூலிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சித்தரித்து கருத்துருக்களை மக்கள் மத்தியில் உலவவிட்டு பாசிசத்தனத்தை கட்டமைத்தார்கள். பா.ஜ.க. - மோடி - சங்பரிவார் கும்பலின் இந்த போலி பிரச்சாரத்தை பிரபீர் விடுதலை இந்திய மக்களுக்கு அம்பலப்படுத்தி யுள்ளது.

Advertisment

இன்னும் உடைத்துப் பேச வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யில், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் சீன அரசாங்கத் தின் ஆதரவைப் பெற்று இந்தியாவின் ஆன்மா வைத் தகர்க்க தகவல் யுத்தத்தை செய்ததாக குற்றம்சாட்டியது. அத்துடன், நக்சலைட் - காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதியளித்தது, கொரோனா பெருந்தொற்று, டெல்லி கலவரத்தைத் தூண்டியது, விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் நியூஸ் கிளிக் மீது வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியூஸ் கிளிக் மீதானது மட்டும் அல்ல, மோடியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராகக் குரல்கொடுக்கும் இந்தியாவின் ஆன்மா மீதானது. மோடியின் பாசிசத்தனத்தையும், சங்பரிவார் கும்பலின் சூழ்ச்சி வலை யையும் பிரபீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறுத்தெறிந்துவிட்டது.

இனி இந்த வழக்கின் பின்னணி யைப் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு அக்-3ஆம் தேதி பிரபல இடதுசாரி ஊடக நிறுவன மான நியூஸ் கிளிக்கின் (சங்ஜ்ள் ஈப்ண்ஸ்ரீந்) நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயாஸ்தாவை டெல்லி காவல்துறை கைதுசெய்தது. இதற்காக டெல்லியில் மொத்தம் 88 இடங்களிலும், நாட்டின் பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

மூத்த ஊடகவியலாளரான பிரபீர் மீது இந்திய தண்டனை சட்டம் 153-ஆ (மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் பகைமையைத் தூண்டுதல்), 120-இ (சட்டவிரோத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்), சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (மஆடஆ) 13 (சட்டவிரோத செயல்), 16 (தீவிரவாத செயல்), 17 (தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) & 22ஈ (சட்டவிரோத செயல் புரிந்த நிறுவனம்) ஆகிய கடும் பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூஸ் கிளிக் ஊடகத்தின் அன்னிய நேரடி முதலீட்டு செயல்பாட்டில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, வழக்கு (116/2020) ஒன்றைப் பதிவுசெய்கிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற் றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறது. பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் எப்.ஐ.ஆர். நகல்கூட நியூஸ் கிளிக் தரப்பிற்கு தரப்படாமல் மேலும் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்கிறது. நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் ஊஉ சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் 2021ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஊஉ வழக்கிற்கு தடைவிதிக்கப்படுகிறது, மேலும் பிரபீர் கைதுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

முந்தைய வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அதே பழைய குற்றச்சாட்டை புதிய எப்.ஐ.ஆராக (224/2023) பதிவு செய்து, 2023-ஆம் ஆண்டு அக்.3ஆம் தேதி மாலை கைதுசெய்யப் படுகிறார் பிரபீர் புர்கயாஸ்தா. அடுத்த நாள் 6 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ss

முதல்நாள் மாலை கைதான பிரபீர், அடுத்த நாள் காலை ரிமாண்ட் செய்யப்படுகிறார் என்ற தகவலை அவரது வழக்கறிஞரான அர்ஷ்தீப் குராணாவுக்கு காவல்துறை தெரிவிக்கவில்லை. பிரபீர் கைதுசெய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் வரை அவர் எதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என எந்த விவரமும் அவருக்கோ, அவரது வழக்கறி ஞருக்கோ விளக்கப்படவில்லை. ரிமாண்ட் உத்தரவில் நீதிபதி காலை 6 மணிக்கு கையெழுத்திட்ட பிறகு, 7.07 மணிக்கு அவரது வழக்கறிஞருக்கு தகவல் செல்கிறது.

எப்.ஐ.ஆர். எண் 224/2023 நகல், ரிமாண்ட் செய்த நீதிபதியிடம் முறை யிட்ட பின்னர், அவரது உத்தரவின் பேரில் அக். 5ஆம் தேதி மாலைதான் பிரபீர் தரப்பிற்கு தரப்படுகிறது. அவரது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அக். 13ஆம் தேதி தனி நீதிபதி துஷார் ராவ் அமர்வு தள்ளுபடி செய்கிறது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார் பிரபீர் புர்கயாஸ்தா.

நியூஸ் கிளிக் மீது தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்களையோ, ஆதாரங்களையோ காட்டாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் குற்றப் பத்திரிகையில் தாக்கல் செய்தது காவல்துறை. சுருங்கக் கூற வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் மீதான குற்றப்பத்திரிகை, அனுமா னங்கள் மீதானது மட்டுமே.

நியூஸ் கிளிக், பிரபீர் மீதான குற்றப்பத்திரிகையில் குறிப் பிடப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, சீனாவிடமிருந்து 92 கோடிக்கும் மேல் பணம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, குற்றப்பத்திரிகையில் ஒரு முக்கிய நபராக அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில்ராய் சிங்கம் என்பவர் 2018 - 2023-க்கு இடைப்பட்ட காலத்தில் நியூஸ்கிளிக் செயல்பாடுகளுக்காக 92 கோடிக்கும் மேல் பணத்தைச் சேர்த்ததாகக் குறிப்பிடப்பட்டது. சீனப்பணத்தை நியூஸ் கிளிக்கோ பிரபீரோ பெற்றதற்கான எந்த ஆவணங்களும் பா.ஜ.க. அரசிடமோ காவல் துறையிடமோ இல்லை.

இந்தியாவில் இன -மொழி -சமூக -அரசியல்ரீதியிலான பிரிவினைகளை ஏற்படுத்த சீனா -நக்சலைட்டுகள் -காஷ்மீர் பிரிவினைவாதி களுடன் கூட்டு சேர்ந்து நியூஸ் கிளிக்கும் பிரபீர் புர்கயாஸ்தாவும் சதி செய்ததாகவும், இதற்காக பிரபீர் புர்கயாஸ்தா, சிங்கம் ஆகியோர் ஒரு சர்வதேச இடதுசாரி கூட்டணியைக் கட்டிய தாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப் பட்டது. இதற்காக மின்னஞ்சல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்படி ஒரு மின்னஞ்சல் ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை.

ஜம்மு - காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பகுதி அல்ல எனக் காட்டும் வரைபடங்களை நியூஸ் கிளிக் வெளியிட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு தகவலை நியூஸ் கிளிக் வெளியிடவே இல்லை. கொரோனா பெருந்தொற்றில், மோடி, ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்பட்டு சீனாவின் ஆதரவாளராக நியூஸ் கிளிக் இருந்தது, குடியுரிமை திருத்தச்சட்டம், விவசாயிகள் போராட்டம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான பிரச்சாரம், பீமா கோரேகான் கலவரம், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம், டெல்லி கலவரம், காஷ்மீர், மணிப்பூர் பிரச்னை என நியூஸ் கிளிக் மற்றும் பிரபீர் புர்கயாஸ்தா மீது முன்வைக்கப்பட்ட காவல் துறையின் எந்த குற்றப்பத்திரிகை தகவல்களுக்கும் அடிப்படை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மட்டும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எல்லோர் மீதும் இதுபோன்ற எண்ணற்ற அவதூறு குற்றச்சாட்டுகள்தான் முன்வைக்கப் பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. கைது செய்த மக்கள் ஜனநாயகவாதிகளின் சமூக விடுதலை பங்களிப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளது பிரபீர் விடுதலை வழக்கு.

பிரபீர் வழக்கு போல், மீதமுள்ள வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டால் பா.ஜ.க.வின் முகத்திரையும், இறுதியில்... மோடியின் மொத்த முகத்திரையுமே விரைவில் கிழியும். விடுதலை சிறுத்தைகள்போல் இந்தியாவின் பல்வேறு ஜனநாயக சக்திகளும் மோடிக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டன. இந்த போராட்டத்தின் மூர்க்கத்திற்கு முன் மோடி தொடை நடுங்க ஓடிக்கொண்டிருக்கிறார். மோடியின் இறுதி முடிவு மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதை காலம் விரைவில் இந்திய மக்களுக்கு உணர்த்தத்தான் போகிறது.

nkn250524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe