ராங்கால் தி.மு.க.வை பழிவாங்கிய அதிகாரிகளுக்கு பவர்ஃபுல் போஸ்டிங்! மத்திய மந்திரியாகும் ஓ.பி.எஸ்?

rr

"ஹலோ தலைவரே,… கொரோனாவால் மரண பீதி எல்லாரையும் படாதபாடு படுத்திக்கிட்டிருக்கு. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நிலவரம் சீராகும்னு டாக்டர்கள் நம்பிக்கையோடு சொல்றாங்க.''”

"முதல்வர் மு.க.ஸ்டாலினும் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கிட்டிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, போன வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு திடீர்ன்னு விசிட்டடிச்சி நேரடியா ஆய்வு செய்யறார். அப்போது பொதுமக்களில் ஒருவர் பேசிய போன்காலுக்கும் ஸ்டாலினே பதில் அளித்து, அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வைத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அனைத்துக் கட்சியினர் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் அமைச்சிருக்காரு.''”

ra

"’எல்லாத் தரப்பையும் ஸ்டாலின் ஒருங்கிணைத்து செயல்படுவதால், தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை கொண்ட அதிகாரிகளுக்குகூட, இந்த ஆட்சியிலே நல்ல அதிகாரங்கள் கொடுக்கப்படுதாமே?''”

"சரியாச் சொன்னீங்க தலைவரே, அ.திமு.க. ஆட்சியில், எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் போல் செயல்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியான டேவிட்சன் தேவஆசிர்வாதம், இப்ப உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் அ.திமு.க.வுக்கும் சசிகலா தரப்புக்கும் விசுவாசமான ஐ.பி.எஸ். அதிகாரியான தாமரைக்கண்ணன், இப்ப சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவங்க இரண்டு பேரும் எடப்பாடி ஆட்சியில் எடுபிடியா இருந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் உட்காரவைக்கும் எண்ணத்தோடு, லிஸ்ட்டுகளைத் தயார் செய்யறாங்க. டி.ஜி.பியும் அதை ஓ.கே. செய்து முதல்வர் ஸ்டாலினின் செயலாளரான உதயசந்திர னிடம் அனுப்பிவைக்கிறார். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முதல்வரும் அவரது செயலாளர்களும் தீவிர கவனம் செலுத்துவதால் போலீஸ் போஸ்டிங் உள்அரசியலில் கவனம் செலுத்த முடியாம கையெழுத்துப் போட்டு ஓ.கே செய்துவிடுவதா கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க.''”

"தி.மு.க.வின் புகாரால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளும், இப்ப முக்கியமான பதவிகளுக்கு நியமிக்கப்படறாங்களே?''”

t"ஆமாங்க தலைவரே, தமிழகத்தின் மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்தவர் ஜெயராமன். மறைந்த அ

t"ஆமாங்க தலைவரே, தமிழகத்தின் மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்தவர் ஜெயராமன். மறைந்த அ.தி.மு.க. அமைச்சர் துரைக்கண்ணு தரப்பு பதுக்கியிருந்த கரன்ஸிக் கட்டுகளை மீட்டுக்கொடுத்து இ.பி.எஸ்ஸிடம் சபாஷ் வாங்கியவர். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் பண பரிவர்த்தனைகளுக்கும் ஜெயராமன் உதவறதா தி.மு.க. தரப்பு புகார் செய்ய, அதன் அடிப்படையில் அவர் தேர்தல் ஆணையத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். இப்ப தி.மு.க ஆட்சி வந்ததும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.''”

"காத்திருப்போர் பட்டியலிலேயே ரொம்ப காலம் வைத் திருக்க முடியாதுங்கிறதை பயன்படுத்தி, காய் நகர்த்துறாங்களோ!''”

"அதேபோல், எடப்பாடி ஆட்சிக் காலத்தில், 2017 ஜூலையில் கோவை பகுதி தி.மு.க.வினர் தூர் வாரிய ஏரியைப் பார்வையிடச் சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, அடாவடியாக வழிமறித்துக் கைது செய்து, ஒரு நாள் முழுதும் அவரை அடைத்துவைத்து அலைக்கழித்தனர். இந்த சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தி, எடப்பாடியின் மனதைக் குளிரவைத்தவர் கோவை. எஸ்.பி.யாக இருந்த முரளி. அவரும் காத்திருப்புப் பட்டியலில்தான் இருந்தார். அவரையும் இப்ப சேலம் மாவட்ட போக்குவரத்துக் குற்றப்பிரிவு உதவி ஆணையராக உட்கார வச்சிட்டாங்க. அதே மாதிரி அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமாக இருந்த நாமக்கல் எஸ்.பி.அருள்அரசு, பின்னர் அமைச்சர் வேலுமணிக்கு வலது கையாகவே செயல்பட்டார். அவரையும், இப்போது, சென்னை சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிச்சி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கே அழைச்சிக்கிட்டாங்க.''”

"மாஜி அ.தி.மு.க. மந்திரிகளைக் காப்பாற்றி வந்த அதிகாரிக்கும், இப்ப நல்ல பதவி கொடுக்கப்பட்டிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அத்தனை பேர் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் தொடர்ந்து போயிருக்கு. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத அந்தத் துறையின் இயக்குனராக இருந்தவர் ஜெயந்த் முரளி. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவரை ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக உட்காரவைத்துவிட்டார்கள்.''”

"இப்ப நடக்கும் அதிகாரிகளின் ’அண்டர் கிரவுண்ட் ஒர்க்’ நல்லாத்தான் இருக்கு?''”

"ஆமாங்க தலைவரே, இது மட்டுமில்லை. ஜெ.’ஆட்சிக் காலத்தில் மாஜி தி.மு.க. அமைச்சர்களான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் ஜெகத்ரட்சகன் உட்பட ஏராளமான தி.மு.க. பிரமுகர் கள் மீது நில அபகரிப்பு வழக்குகள் தாறுமாறாகப் புனையப்பட்டன. தி.மு.க.வின ரைக் கடுமையாக அலைக் கழித்த அந்த வழக்குகளுக்குக் காரணமானவர்கள் அப்போதும் பவர்ஃபுல்லாக இருந்த இதே தாமரைக்கண்ணன், திரிபாதி உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் இப்பவும் பவர்ஃபுல்லா தொடருறாங்க. எடப்பாடி யிடம் அவருடைய நம்பிக்கைக் குரிய செக்யூரிட்டி அதிகாரியாக இருந்த ராஜாவும், இந்த தி.மு.க. ஆட்சியில் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்காரு.''”

"அதே சமயம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறாரே?''”

rar

"உண்மைதாங்க தலைவரே, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான கந்தசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். சொராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரம் குஜராத்தில் அரங்கேறிய போது, குஜராத்தின் முதல்வராக மோடியும், அங்கே உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தாங்க. அந்த வழக் கை விசாரித்த கந்தசாமி, அந்த விவகாரத்தில் அமித்ஷாவைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினார். இதையறிந்த குஜராத் முதல்வரான மோடி, உடனடியாக கந்தசாமியை அழைத்து, அமித்ஷாவை கைது செய்யாமல் வழக்கை நடத்த முடியாதா?ன்னு கேட்க, அதற்கு வாய்ப் பில்லைன்னு மறுத்தார் கந்தசாமி. சரி கைது செய்யுங்கள். ஆனால், உடனே ஜாமீன் கிடைக்க உதவுங்கள்ன்னு மோடி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அசைந்து கொடுக்கலை. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடமும் மோடி பேசியும் எதுவும் நடக்கலை. சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அமித்ஷாவை அதிரடி யாகக் கைது செய்து சிறையில் அடைத்தவர்தான் இந்த கந்தசாமி. அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியான கந்தசாமி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்ததால், அ.தி.மு.க. மாஜி மந்திரிகளுக்கு குளிர் ஜுரம் வரத் தொடங்கிடிச்சாம்.''”

ops

"மாஜி மந்திரிகளுக்கு ஏற்பட்டிருக்கிற பயம் அளவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பயம் இல்லையாமே?''”

"எடப்பாடி பழனிசாமி சம்பந்தமான ஊழல் ஃபைல்களை தி.மு.க அரசு எடுத்து வச்சிருக்கு. அதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருக்கும் தி.மு.க மாஜி மந்திரிகள் சம்பந்தப்பட்ட ஃபைல்களை ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி கவனமா எடுத்து வச்சாராம். தன் மீது வழக்கு வரும்போது, இதைக் கேடயமா பயன்படுத்தலாம்ங்கிறது அவர் வியூகமாம்.''

"சரிப்பா, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.கன்னு ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும், தங்களின் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி ரொம்பவும் திணறியதற்கு காரணம் என்ன?''”

"காங்கிரசுக்கு இப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் சட்டமன்றக் கட்சித் தலைவரா ஆகணும்னு விஜயதாரணி, பிரின்ஸ், செல்வப்பெருந்தகை, ரமேஷ்குமார், முனிரத்தினம் ஆகிய 5 பேர் வரிஞ்சிகட்டி நின்னாங்க. சட்டமன்றத்திற்குள் பா.ஜ.க.வில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் என்ட்ரியாகி இருப்ப தால், அவர்களை அதிரடியாகச் சமாளிக்க விஜயதாரணிதான் சரியான ஆளுன்னு ஒரு டீம் அவருக்காகக் களமிறங்குச்சு. மற்றவங்களும் இதே போல் ஆள்பலம் திரட்டி முட்டிமோத, அதைச் சமாளிக்க முடியாத, கட்சியின் மாநிலத் தலைவரான அழகிரி, நீங்களே தேர்ந்தெடுத்துடுங்கன்னு சோனியா விடம் கேட்டுக்கொண்டார். இருந்தும், மறுபடியும் 17-ந் தேதி, சத்யமூர்த்தி பவனில் அழகிரி தரப்பு இது தொடர் பான ஆலோசனையில் இறங்குச்சு.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத கோபத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்த முயலும் எடப்பாடி, ராஜ்யசபா உறுப்பினர்களான தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங் கோவன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பி., விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் 2022-ல் முடியுது. அதனால் தி.மு.க. சார்பில் 4 பேருக்கும் நம் கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கும் ராஜ்யசபாவுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது நீங்கள் ராஜ்யசபாவுக்குப் போகலாம். அதன் மூலம் பா.ஜ.க. நட்பை வைத்து, மத்திய அமைச்சரவையிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறா ராம். இருந்தும் ஓ.பி.எஸ்.சின் பிணக்கு சரியாகவில்லையாம்.''”

_______________

நேர்மையான நிர்வாகம் சாத்தியமா?

அதிகாரிகள் மாற்றத்தில் அதிருப்திக்கு பஞ்சமில்லை. கொரோனா முதல் அலையின்போது, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய உதவித் தொகையில் வேளாண் அதிகாரிகள் நடத்திய மெகா ஊழல் அம்பலமானது. அப்போது வேளாண்துறையின் செயலாளராக இருந்த ககன்தீப்சிங்பேடி இப்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதும், வேளாண்துறை, கால்நடை, பால் வளம், மீன் வளத்துறையின் செயலாளராக உள்ள கோபால் ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாக கொடுத்துள்ளதும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன.

rangமுந்தைய ஆட்சியாளர்களிடமும் எடப்பாடியின் செயலாளராக இருந்த விஜயகுமாரிடமும் மிக நெருக்கமாக இருந்தவர் கோபால். "வேளாண்துறை ஊழல்களைப் புதைக்கவே இவரை முதல்வர் அலுவலகத்தில் ககன்தீப்சிங் சிபாரிசு செய்திருக்கிறார்' என்றும், "ஒரு அதிகாரி ஒரே துறையில் மூன்று வருடத்தை கடந்துவிட்டாலே அவரை மாற்றவேண்டும்' என்கிற விதியை மீறி ஒரே துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் கோபாலுக்கு கூடுதலாக ஒரு பெரிய துறை என்கிறார்கள் ஐ.ஏ.எஸ். வட்டாரத்தினர்.

ஊழலுக்குப் பெயர் பெற்ற ஆவின் நிறுவனத்தின் சூத்ரதாரியான கோபாலின் பொறுப்பில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறையிலும் ஊழல்கள் பெருத்துக் கிடக்கின்றன. இவரைப் போன்ற பல அதிகாரிகளும் கோலோச்சு கிறார்கள். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொறுப் பேற்றதுமே அவருக்கு சாதகமாகிவிட்டார் துறையின் இயக்குநர் பழனிச்சாமி. தன்னை மாற்றவேண்டாம் எனவும் கோரிக்கை வைத் திருக்கிறார். அமைச்சரை குளிர்விப்பதற்காக துறையின் உயரதிகாரி கள் அமைச்சரின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலேயே அதி காரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். டான்சி நிறு வனத்தின் சேர்மனாக இருந்த விபுநய்யார் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டதில் துறையிலுள்ள ஊழியர்கள் இனிப்புக் கொடுத்து கொண்டாடியுள்ள னர். அந்தளவுக்கு அரசு துறைக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியவர். இதற்கிடையே அமைச்சர்களுக்கு பி.ஏ.க்களும், பி.எஸ்.ஓ.க்களும் (போலீஸ் பாதுகாப்பு) நியமிப்பதில் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது கலைஞரின் பி.எஸ்.ஓ.க்களாக இருந்த மூவரும் கொடுக்கும் பட்டியல்படி பி.எஸ்.ஓ.க்கள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள்.

"நேர்மையான நிர்வாகத்தை தர முனைப்புக்காட்டி முழுவீச்சுடன் உழைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் உள்ளன அதிகார நியமனங்கள்' என்கிறது உளவுத்துறை.

-இளையர்

nkn190521
இதையும் படியுங்கள்
Subscribe