தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் 20,000-க்கு மேற்பட்ட பக்தர்களும், வார இறுதியில் 40,000 பக்தர்கள் வரையும் வருகிறார்கள். அலுவலர்கள், ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் என சுமார் 300 பேர் கோவிலில் பணியாற்றுகின்றனர். இதில் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற துப்புரவுப் பணி யாளர் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
அந்த ஆடியோவில் கோவில் ஊழியர் சதீஷ், தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார், என்னை அதிகமாக வேலையிருக்கும் அன்னதான கூடத்திற்கே டூட்டி போடுகிறார், அங்கிருந்து மாற்றுவதில்லை. தன் சொல்பேச்சை கேட் பவர்களை வருமானம் வரும் இடத்தில் நியமிக்கிறார். நான் ஏதாவது கேட்டால் வாடி, போடி என்பதுடன் டபுள் மீனிங்கில் பேசுகிறார். இதனை கோவில் மேனேஜர் செந்திலிடம் சொன்னபோது, "போதையில சொல்லியிருப்பான் போய் வேலையைப் பாரு'ன்னு சாதாரணமா சொல்றார். மேனேஜர் முன்னாடியே சதீஷ் என்னைத் திட்டறான், அதையும் அவர் கண்டுக்கல' என குறைப்பட்டார்.
இந்த ஆடியோவை மையமாக வைத்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் பரணீதரன், உதவி ஆணையாளர்கள் ராமசுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் சதீஷிடம், ஏப்ரல் 4-ஆம் தேதி விசாரணை நடத்தியவர்கள் மறுநாள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சதீஷ் தரப்பினர், "புகார் சொல்லும் இதே பெண்மணி, உப கோவிலான துர்க்கையம்மன் கோவிலில் பணியாற்றினார். அங்கு உடன் பணியாற்றிய மற்றொரு ஆண் ஊழியர்மீது என் கையைப்பிடித்து இழுத்தார் என புகார் சொன்னார். சி.சி.டி.வி. கேமரா பதிவை செக் செய்தபோது, அந்த ஊழியருடன் இவர் விரும்பியே செல்வது தெரிந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்பே இந்த கோவ
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் 20,000-க்கு மேற்பட்ட பக்தர்களும், வார இறுதியில் 40,000 பக்தர்கள் வரையும் வருகிறார்கள். அலுவலர்கள், ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் என சுமார் 300 பேர் கோவிலில் பணியாற்றுகின்றனர். இதில் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற துப்புரவுப் பணி யாளர் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
அந்த ஆடியோவில் கோவில் ஊழியர் சதீஷ், தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார், என்னை அதிகமாக வேலையிருக்கும் அன்னதான கூடத்திற்கே டூட்டி போடுகிறார், அங்கிருந்து மாற்றுவதில்லை. தன் சொல்பேச்சை கேட் பவர்களை வருமானம் வரும் இடத்தில் நியமிக்கிறார். நான் ஏதாவது கேட்டால் வாடி, போடி என்பதுடன் டபுள் மீனிங்கில் பேசுகிறார். இதனை கோவில் மேனேஜர் செந்திலிடம் சொன்னபோது, "போதையில சொல்லியிருப்பான் போய் வேலையைப் பாரு'ன்னு சாதாரணமா சொல்றார். மேனேஜர் முன்னாடியே சதீஷ் என்னைத் திட்டறான், அதையும் அவர் கண்டுக்கல' என குறைப்பட்டார்.
இந்த ஆடியோவை மையமாக வைத்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் பரணீதரன், உதவி ஆணையாளர்கள் ராமசுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் சதீஷிடம், ஏப்ரல் 4-ஆம் தேதி விசாரணை நடத்தியவர்கள் மறுநாள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சதீஷ் தரப்பினர், "புகார் சொல்லும் இதே பெண்மணி, உப கோவிலான துர்க்கையம்மன் கோவிலில் பணியாற்றினார். அங்கு உடன் பணியாற்றிய மற்றொரு ஆண் ஊழியர்மீது என் கையைப்பிடித்து இழுத்தார் என புகார் சொன்னார். சி.சி.டி.வி. கேமரா பதிவை செக் செய்தபோது, அந்த ஊழியருடன் இவர் விரும்பியே செல்வது தெரிந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்பே இந்த கோவிலுக்கு வந்தார். இங்கு வந்து மொபைல்போன் நோண்டிக்கொண்டே உட்கார்ந்திருப்பது, வேலைசெய்யாமல் இருப்பதை கேள்விகேட்டால் இப்படி புகார் சொல்லியுள்ளார். சதீஷை பழிவாங்கவேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணிடம் புகார் வாங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்''’ என் கிறார்கள்.
உண்மையென்ன என கோவில் ஊழியர் கள் சிலரிடம் விசாரித்தபோது, "இது போன்ற குற்றச்சாட்டுகள் புதியதல்ல கடந்த 15 ஆண்டுகளில் பலமுறை கோவில் அலுவலர்கள்மீது புகார்கள் எழுந்துள்ளன. அதில் உண்மையும் உள்ளது, பழிவாங்க சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளும் உள்ளன. கோவிலுக்குள் நடக்கும் அதிகார மோதலால் இதுபோன்ற பாலியல் புகார்கள் இப்போது அடிக்கடி சொல்லப்படுகின்றன. தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலிருந்து வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள் என திருவண்ணாமலையில் குவிகிறார்கள். இவர்கள் இங்கே ரியல் எஸ்டேட், ஹோட்டல், ரிசார்ட், ரெஸ்டாரென்ட் என சில தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யவரும் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். இதனால் கோவிலை மையமாக வைத்து அதிகாரமையங்கள் உருவாகியுள்ளன.
தி.மு.க. பிரமுகரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான ஸ்ரீதர் தான் அண்ணாமலையார் கோவிலின் அதிகாரப்பூர்வமற்ற கோவில் நிர்வாகி. அவரது சகோதரர் ஜீவானந்தம்தான் கோவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் ராஜாராம் இவர்கள் ஒரு டீம். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோமதி யின் கணவர் தி.மு.க. பிரமுகர், முன்னாள் கவுன்சிலர் குணசேகரன், சினம்பெருமாள் மற்றொரு டீம். கோவிலுக்கு முதலமைச் சர் மனைவியே வந் தாலும் அவருக்கு முழு மரியாதை கிடைக்க வேண்டுமா, கிடைக்கக் கூடாதா என முடிவு செய்வது கோவில் மேலாளர் செந்தில். கோவில் ஊழியர்கள் சிலர் தங்களது கைகளில் செந்தில் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார்கள். அப்படியாயின் அவரின் செல்வாக்கை யூகித்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு டீம். சிவாச்சாரியார்கள் இளையபட்டமான பி.டி.ரமேஷ் டீம் என நான்கு குரூப்கள் உள்ளன. இந்த டீம்களை சார்ந்து தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்த புரோக்கர்களும் கோவிலுக்குள் வலம் வருகின்றனர்.
அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் பதவிக்கு வந்ததும் இணை ஆணையர் ஜோதியை, ஜீவா, ஸ்ரீதர் இருவரும் டாமினேட் செய்யத்தொடங்கினார். அதோடு ஜீவானந்தம் நியமனம் விதிமுறைகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது, அதற்கான ஆவணங்களை ஜோதிதான் தந்தார் என ஜீவானந்தம் எதிர்க்கத்தொடங்கினார். இதனால் ஜோதி, மேலாளர் செந்தில், அறங்காவலர் (கோமதி) குணசேகர் ஒரு டீமானார்கள்.
கடந்த நவம்பர் மாதம் அன்னதானக்கூடத்தில் பணியாற்றிய அருணகிரி, செல்வம், அன்பு, விஜி போன்றவர்கள், அன்னதானக் கூடத்தில் பணியாற்றும் பெண்களை மோசமாக திட்டுகிறார்கள், பாலியல் சீண்டல் செய்கிறார்கள் என நான்கு பெண்கள் புகார் சொன்னார்கள். அது அமைச்சர் வேலு வரை புகார்சென்று அப்போதைய கோவில் இணை ஆணையர் ஜோதி விசாரணை நடத்தி அருணகிரி மீது நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்தார். அதனை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், ஸ்ரீதர், தி.மு.க. பிரமுகரான கோவில் புரோக்கர் ஆர்.டி.பிரகாஷ் போன்றோர் தலையிட்டு பஞ்சாயத்து செய்து போலீஸ் புகாராகாமல் காப்பாற்றினார்கள்.
தனது ஆட்கள்மீது பாலியல் புகார் சொன்ன பெண்கள், மேலாளர் செந்தில் சொல்லித்தான் சொன்னார்கள் என முடிவுசெய்து கடுப்பானது ஜீவானந்தம் டீம். அதேபோல், கோவில் குருக்கள் ரமேஷ், தனக்குச் சொந்தமான விடுதியில் வந்து தங்கும் பெரும்புள்ளிகளிடம் ரூம் புக்கிங், சிறப்பு பூஜை, சுவாமி தரிசனத்துக்கு பேக்கேஜாக கட்டணம் வாங்கிக்கொண்டு தனிவழியில் அவர்களை கோவிலுக்குள் அழைத்துவந்து சாமி தரிசனம் செய்ய வைப்பதை கடுமையாகக் கண்டித்தார் ஜோதி. இதனால் பி.டி.ரமேஷ் டீம், ஜீவானந்தம் டீமோடு கைகோர்த்துக்கொண்டது. ஜோதிக்கு எதிராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் புகார் கொண்டுசென்று அவருக்கு அழுத்தம் தந்து ஜோதியை இடமாற்றம் செய்து பரணீதரனை கொண்டுவந்துள்ளனர். அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், ஜீவானந்தம் டீம் கட்டுப் பாட்டுக்குள் கோவில் வந்துள்ளது. உடனே பழிக்குப் பழியாக இப்போது ஒரு பெண்ணின் பாலியல் புகார் பயன்படுத்தப்பட்டு, செந்தில் டீமிலிருந்த முக்கிய விக்கெட் காலி செய்யப்பட்டுள்ளது, அடுத்து செந்திலா, டிரைவர் பிரபுவா என்கிற பட்டிமன்றம் கோவிலுக்குள் நடக்கிறது'' என விளக்கி னார்கள்.
கோஷ்டியாக சண்டை போட்டுக் கொண்டாலும் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளார்கள், அது சிவன் சொத்தை கொள்ளையடிப்பது. தினசரி கோவிலில் 6 அபிஷேகம் நடக்கும். ஒரு அபிஷேகத்துக்கு 2,500 ரூபாய் கட்டணம். ஒரு அபிஷேகத்துக்கு ஒன்றுதான் புக்கானது என கணக்கு காட்டு வார்கள். ஆனால் 5 குடும்பத்தை உட்கார வைப்பார்கள், நான்கு அபிஷேக கட்டணம் கோவில் கணக்கில் வருவதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் என இலவசமாக சிறிய லட்டு வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் பக்தர்கள் வந்தால் இவர்கள் 25 ஆயிரம் என கணக்கெழுதி பணம் எடுக்கிறார்கள். அதேபோல் பக்தர் ஒருவரை தனிவழியில் சுவாமி தரிசனம் செய்யவைக்க குறைந்தது ஆயிரம், 10 பேர் என்றால் 15 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். இப்படி இன்னும் சிலவற்றைச் சொல்லலாம். கோவிலை வைத்து லட்சம், கோடிகளில் சம்பாதிப்பது நடந்துகொண்டே இருக்கிறது, இதனை யாரும் தடுப்பதாகத் தெரியவில்லை” என புலம்பி னார்கள் அண்ணாமலையார் பக்தர்கள்.
புகார் குறித்து மேலாளர் செந்திலிடம் கேட்டபோது, "என்னிடம் சம்பந்தப்பட்ட பெண்மணி புகார் சொன்னதும், அதுபற்றி விசாரித்தேன், வேறு கோவிலுக்கு போய் வேலை செய்கிறீர்களா எனக்கேட்டேன், அவர் மறுத்துவிட்டார். இப்போது இப்படியொரு புகார் சொல்லியுள்ளார். என்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. பழிவாங்கும் போக்கில்தான் இப்படிச் செயல்படுகிறார்கள்''’என்றார்.
அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தத்திடம் கேட்டபோது, "பாலியல் புகார் குறித்து விசாரித்தே நடவடிக்கை எடுத்தோம், இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் கிடையாது. அறங்காவலர் குழுவுக்குள் கோஷ்டி கிடையாது, ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஜோதியுடன் சின்ன சின்ன கோவில் டெவலப்மெண்ட் சம்பந்தமான முரண்பாடு இருந்ததே தவிர வேறெதுவும் கிடையாது''’என்றார்.
கோவில் இணைஆணையர் பரணீதரனிடம் கேட்டபோது, “"அந்த பெண் புகார் தந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரும் நான் கோவிலில் பொறுப்பு ஏற்கும் முன்பு தரப்பட்டது, அதனை விசாரித்து நடவடிக்கை எடுத்தேன். பெண் ஊழியர்கள் தரும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க கோவிலில் விசாகா கமிட்டி இல்லை, இதுகுறித்து ஆணையாளருக்கு கடிதம் எழுதி விசாகா கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
"அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களை சரிசமமாகப் பாவித்து, அனைவரும் சிரமமின்றி வழிபட அரசு வழிவகை செய்யவேண்டும்' என்பதே பக்தர்களின் கோரிக்கை.
அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?