ராங்கால் தமிழக பா.ஜ.க.வில் பவர் பாலிடிக்ஸ்! பொள்ளாச்சி வழக்கு! ஆதாரத்துடன் சிக்கும் வி.ஐ.பி. மகன்!

rr

"ஹலோ தலைவரே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரொம்பவும் நெருங்கிடிச்சி.''”

"ஆமாம்பா, 6, 9 தேதிகள்ல இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, 4-ந் தேதியோட பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்துச்சு. பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் கோதாவில் இறங்கியிருக்கு. அ.தி.மு.க. தரப்பில் எடப்படி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் களமிறங்கியும், தி.மு.க. தரப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வரலையேங்கிற ஆதங்கம் உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது. பணிச்சுமையின் காரணமாக அவர் வரவில்லைன்னாலும், உதயநிதி யாவது களத்துக்கு வந்திருக்கலாம்னு தி.மு.க வேட்பாளர்கள் பலரும் ஆதங்கப்படறாங்க. ஆனாலும், தி.மு.க. தரப்புக்கு எல்லாப்பக்கமும் சாதகமான அலைதான் வீசிக்கிட்டு இருக்குதாம்.''”

siva

"தி.மு.க ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி கட்சிக்கும் கூட்டணிக்கும் வாக்கு சேகரிக்கும் வகையில் முதல்வர் பேசிய வீடியோவை உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள வாக்காளர் களுக்கு அனுப்புற வேலையை தி.மு.க.வின் ஐ.டி.விங் மும்முரமா செய்திக்கிட்டிருக்காம்ப்பா...'' ”

"தலைவரே... தி.மு.க. ஐ.டி.விங்குக்கு பொறுப்பு வகிக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் தமிழ்நாட்டின் நிதியமைச்சர். சமீபத்தில் அவர் அமெரிக்க அரசின் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகளின் டேட்டாக்கள், தனக்கு வேணும்ன்னு துறை அதிகாரிகளிடம் கேட்டிருக் கிறார். சீக்கிரமா வேணும்னு அவர் கேட்டதால, அதிகாரிகள் உடனடியா எப்படி அமெரிக்க பொரு ளாதார டேட்டாவை வாங்குறது, அப்படியே வாங்கினாலும் நம்ம பொருளாதாரத்துக்கு அது எந்த வகையில் உதவும், எதற்கு இவர் நம்ம பணிச்சுமையை அதிகரிக்கிறாருன்னு ஆதங்கத் தோடு விமர்சனம் பண

"ஹலோ தலைவரே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரொம்பவும் நெருங்கிடிச்சி.''”

"ஆமாம்பா, 6, 9 தேதிகள்ல இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, 4-ந் தேதியோட பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்துச்சு. பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் கோதாவில் இறங்கியிருக்கு. அ.தி.மு.க. தரப்பில் எடப்படி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் களமிறங்கியும், தி.மு.க. தரப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வரலையேங்கிற ஆதங்கம் உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது. பணிச்சுமையின் காரணமாக அவர் வரவில்லைன்னாலும், உதயநிதி யாவது களத்துக்கு வந்திருக்கலாம்னு தி.மு.க வேட்பாளர்கள் பலரும் ஆதங்கப்படறாங்க. ஆனாலும், தி.மு.க. தரப்புக்கு எல்லாப்பக்கமும் சாதகமான அலைதான் வீசிக்கிட்டு இருக்குதாம்.''”

siva

"தி.மு.க ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி கட்சிக்கும் கூட்டணிக்கும் வாக்கு சேகரிக்கும் வகையில் முதல்வர் பேசிய வீடியோவை உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள வாக்காளர் களுக்கு அனுப்புற வேலையை தி.மு.க.வின் ஐ.டி.விங் மும்முரமா செய்திக்கிட்டிருக்காம்ப்பா...'' ”

"தலைவரே... தி.மு.க. ஐ.டி.விங்குக்கு பொறுப்பு வகிக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் தமிழ்நாட்டின் நிதியமைச்சர். சமீபத்தில் அவர் அமெரிக்க அரசின் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகளின் டேட்டாக்கள், தனக்கு வேணும்ன்னு துறை அதிகாரிகளிடம் கேட்டிருக் கிறார். சீக்கிரமா வேணும்னு அவர் கேட்டதால, அதிகாரிகள் உடனடியா எப்படி அமெரிக்க பொரு ளாதார டேட்டாவை வாங்குறது, அப்படியே வாங்கினாலும் நம்ம பொருளாதாரத்துக்கு அது எந்த வகையில் உதவும், எதற்கு இவர் நம்ம பணிச்சுமையை அதிகரிக்கிறாருன்னு ஆதங்கத் தோடு விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்காங்க.''”

"ஆமாப்பா.. 10 வருஷமா அதிகாரிகள் ஒரு செட்டப்புக்குள்ளே வசதியா இருந்துட்டாங்க. இப்ப அந்த செட்டப்பில் சின்ன மாற்றம்னாலும் முணுமுணுப்பு வருவது இயல்புதானே?''”

"தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தினம் தினம் தி.மு.க. அரசைக் கடுமையா விமர்சிச்சிக்கிட்டு இருக்கார். அதோட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னும் அவர் குற்றச்சாட்டை வைக்கிறார். இதனால் தனக்கு ஆபத்து வருமோன்னு அவர் ரொம்பவும் பயப்படறாராம். அதனால், அவருக்கு மிரட்டல் வர்றதாவும், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் னும் தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மூலம் டெல்லிக்குத் தகவலை பாஸ் பண்ணியிருக் காராம். இந்தத் தகவல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவின் கவனத்துக்கு போக, அப்படியான்னு கேட்டு சீரியசான அவர், இது குறித்து அண்ணாமலையிடம் பேசியிருக்கார்.. இதன் பிறகு, அண்ணாமலைக்கு சி.ஆர்.பி.எஃப். போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கணும்னு அமீத்ஷா உத்தரவிட்டிருக்காராம். அதனால் விரைவில் அவருக்கு அந்த பாதுகாப்பு கொடுக்கப்பட இருக்குதாம். ஆனால் கமலாலயத் தரப்போ, என்னது மிரட்டலா, பாதுகாப்பு அதிகரிப்பான்னு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிது.''”

"இந்த நேரத்தில் பா.ஜ.க. அண்ணாமலையும், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் முருகனும், கட்சித் தலைமையிடம் ஹெச்.ராஜா பத்தி புகார் கொண்டுபோயிருக்காங்களே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, சமீபத்தில் ’ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது பத்தியும், அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா, பத்திரிகையாளர் களைக் கடுமையா, கீழ்த்தரமா விமர்சித்தது பற்றியும் நாம பேசிக்கிட்டோம். அதோட அவர் அந்தப் படத்தை வெகுவாக ஆதரிச்சிப் பேசியிருக் கார். அதேபோல், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், நடிகர் பாக்யராஜ் போன்றவர்களையும் அந்தப் படக்குழு, படத்தை ஆதரிச்சிப் பேச வச்சிது. அந்தப் படத்தில், தலித் மக்களின் பாதுகாப்புக் காகப் போடப்பட்ட பி.சி.ஆர். ஆக்ட் தவறானதுங் கிற கருத்தை சொல்லியிருக்காங்களாம். அதேபோல், அதில் மதமாற்றம் செய்வது பற்றியும் சொல்லப்பட்டிருக்கு தாம். இதைப்பார்த்த பா.ஜ.க. புள்ளிகளான அண்ணாமலையும் முருகனும், நாம் தலித் மக்களுக்கு ஆதரவு கொடுக்கறோம். ஆனா ஹெச்.ராஜா, தனது உயர்ஜாதி மனோபாவத்தோடு, தலித் மக்களுக்கு எதிரான கருத்துக்களை விதைக்கும் படத்தை ஆதரிச்சி, பதட்டத்தை உண் டாக்கறார்ன்னு, டெல்லித் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்களாம்.''”

rr

"பலான புகாரில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகரான கே.டி.ராகவன், கட்சியின் பெரும்புள்ளிகளின் அரவணைப்பில் தன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட் டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்ப அவரை ஆடிட்டர் சுந்தர்ராமனோடு கே.டி.ராகவனும் சந்திச்சிருக்கார். ஆனால், சுந்தர்ராமன் சந்திச்ச படம் மட்டும் வெளியில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கு. அதேபோல், டெல்லியில் இருந்து நிர்மலா சீதாராமனோடு, ஒன்றிய நேரடி வரிகள் வாரியத் தலைவர் மொஹாபாத்ராவும் வந்திருந்தார். இவரோடும் கே.டி.ராகவன் நீண்ட நேரம் பேசிக்கிட்டு இருந் தாராம். இப்படிப்பட்டவர்களின் பின்னணியில் இருந்து கொண்டு ராகவன், பொருளாதார லீலைகள்லயும் இறங்கறாராம். அண்ணாமலை, முருகன், ஹெச்.ராஜா, கே.டி.ராகவன்னு தமிழக பா.ஜ.க. புள்ளிகள் பவர் பாலி டிக்ஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க.''”

"பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுக்கத் தயாராகுதே?''”

"ஆமாங்க தலைவரே, நாடுமுழுக்க பா.ஜ.க.வுக்கு எதிரான அலைகள் அதிகமாக இருந்தும், அதை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக்கிட்டு, அந்தக்கட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெ டுத்து மக்களைக் கவர்ந்து வருதுன்னு, சோனியாவுக்கு ஒரு ரிப்போர்ட் போயிருக்கு. இனி யும் ஸ்லோவாக இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்த சோனியா, போராட்டங்கள் குறித்து வியூகம் வகுக்க, கட்சியின் சீனியர் தலைவரான திக் விஜய்சிங் தலைமையில் ஒரு குழுவை அமைக்க முடிவெடுத்திருக்கிறாராம். மாநில அரசியல் சூழலுக்கேற்ப இனி காங்கிரசின் போராட்டம் வலுக்குமாம்.''”

"ம்...''”

"நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, லோக்சபா மற்றும் ராஜ்யசபாக்களுக்குன்னு தனியா 2 டி.வி. சேனல்கள் இருக்கு.. இதை ஒரே டி.வி. சேனலாக மாற்றிவிட்டது ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம். இந்த டி.வி. சேனல்களில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் அவ்வப்போது ஒளிபரப்பாகும். அதற்காக அந்த சேனலுக்கு ஒவ்வொரு கட்சியும் தங்களின் பிரதி நிதிகளின் பெயர்களை நாடாளுமன்ற சபாநாயக ருக்கு தெரிவிக்கணும். தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரா டி.ஆர்.பாலு உள்ள நிலையில், நாடாளுமன்ற டிவி சேனலில் தி.மு.க. சார்பில் பங்கேற்றுப் பேட்டியளிக்கும் பிரதிநிதியாக திருச்சி சிவா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.'' ”

"காவல்துறை குறித்த ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிதே?''”

"தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளைத் தமிழகம் முழுக்க, காவல்துறை கைதுசெய்தது. ஆனால் ராக்கெட் ராஜா, ராஜு நாடார், சிவ் நாடார் உள்ளிட்ட முக்கியமான சிலரை மட்டும் காவல் துறையால் பிடிக்கமுடியலை யாம். அதுக்குக் காரணம், சி.பி.சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்களான நெல்லை அதிசயராஜ், தூத்துக்குடி மகேந்திரன், கன்னியாகுமரி ஜவஹர் போன்றவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து, தப்பவைக்கிறார்களாம். இதனால் ரவுடிகள் அங்கங்கே கலவரத்தையும் பதட்டத் தையும் உண்டாக்கறாங்களாம். இப்ப நெல்லை மாவட்ட முன்னீர்ப்பள்ளத்தில் இருதரப்பு மோதலால் அங்கே 8 மாவட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருக்குதாம்”

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். நக்கீரனால் அம்பலத்துக்கு வந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை, இப்ப சி.பி.ஐ. தீவிரமாகக் கையாண்டு வருது. அங்கு பெண்களை வளைத்து வளைத்து வேட்டை யாடிய திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட டீம், அந்தப் பெண்களை அந்த நிலையில் ஆபாச வீடியோ எடுத்து வைத்திருந்ததும் ஊரறிந்த உண்மைதான். அந்தப் படங்களைப் பார்த்து விட்டு, தனக்குப் பிடித்த பெண்களை ஏற்பாடு செய்யச்சொல்லி, மிருக வேட்டையாடிய அந்த வி.ஐ.பி.யின் மகன் பற்றிய பக்கா ஆதாரங்களை அவர்கள் திரட்டிவிட்டார்களாம். அதனால் அந்த நபர் விரைவில் கைதாவார்ன்னு விசாரணைத் தரப்பிலேயே பேச்சு அடிபடுது.''

______________

இறுதிச்சுற்று

ff

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ஆ.ராஜா தன் பிறந்தநாளான அக்டடோபர் 2-ந் தேதியன்று, பாத்ரூமில் குளிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனது சேலம் தி.மு.க.வில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்ட நிகழ்ச்சிகளிலிருந்து சேலம் வந்து நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வீரபாண்டி ஆறுமுகம் இருக்கும்போதே மூத்த மகன் செழியன் இறந்தார். அதன்பின், மாவட்ட அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கலைஞர்-ஸ்டாலின் படங்களுக்கு இணையாக வீரபாண்டி ஆறுமுகம் -ஆ.ராஜா படம் இடம்பெற்று வந்தது. எனினும், வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு, அரசியலிலும் தேர்தல்களத்திலும் ராஜாவுக்கு பின்னடைவுதான். இந்தத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறந்தநாளே இறந்தநாளாக அமைந்துவிட்டது ராஜாவுக்கு.

nkn061021
இதையும் படியுங்கள்
Subscribe