தி.மு.க. அரசின் நிர்வாகம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கழுகு பார்வையுடன் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கொடுத்த முதல் கட்டளை. தமிழக அரசியலையும் தமிழக பா.ஜ.க.வையும் கவனிக்க வேண்டும் என்பது இரண்டாவது அசைன்மெண்ட்.
கவர்னருக்கு தகவல் தருவ தற்காக உளவுத்துறை மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த ஒரு டீம் ரகசியமாக இயங்கியது. அதே போல, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பத்திரிகையாளர் கள், ஊழல்களுக்கு எதிரான அமைப்புகள் என ஒரு டீம் அண்ணாமலைக்காக இயங்கியது. அந்த டீம் தனக்கு அனுப்பும் தக வல்களைத் தொகுத்து கவர்னருக்கு அனுப்புவார் அண்ணாமலை.
இதனைத் தொடர்ந்து, ராஜ்பவனின் உத்தரவுகளின்படி தி.மு.க. அரசுக்கு எதிரானவை களை ப்ரஸ் மீட் நடத்தி ஆதாரங்களுடன் அண்ணாமலை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் அவருக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்.
இவைகளை வைத்துத் தான், தி.மு.க.வின் ஆட்சி நிர் வாகம் மற்றும் தமிழக அரசியல் குறித்த தனது ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைப்பார் தமிழக கவர்னர் ரவி. அந்த வகையில் அண்ணாமலைக்கு எதிராகவும் டெல்லிக்கு ஒரு ரிப்போர்ட்டை அனுப்பி வைத்துள்ளது ராஜ்பவன்.
இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் நாம் விசாரித்த போது, "இந்துசமய அற நிலையத் துறைக்கு சொந்தமான கோயிலின் பெய ரை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த தாக பா.ஜ.க. ஆதரவு யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை கடந்த மே மாதம் கைது செய்தது போலீஸ். கார்த்திக்கும் அண்ணாமலைக் கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை உடனடியாக மறுத்தார் அண்ணா மலை. ஆனால், அண்ணாமலை, அமித்ஷா உள்ளிட்ட பல ருடனும் கார்த்திக் கோபிநாத் இருக்கும் படங்களை சோசியல் மீடியாக்கள் அம்பலப்படுத்தின. இதனால், அண்ணாமலையையும் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது.
இந்த நிலையில், கோபி நாத்தை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸ் முயற்சிக்க, அது நடந்துவிடக் கூடாது என பதறிய அண்ணா மலை, தமிழக உளவுத்துறையின் முக்கிய அதிகாரியின் உதவியை நாடியிருக்கிறார். அவரும் உதவி செய்ய, கஸ்டடி சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு, அண்ணாமலைக்கும் அந்த அதிகாரிக்கும் நட்பு இறுகியது. தி.மு.க. அரசை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதும் அண்ணாமலையிடம் குறையத் துவங்கியது.
இந்த சந்தப்பத்தில்தான், போலி பாஸ் போர்ட் விவகாரத்தை ஆதாரத்துடன் அண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறது அவரது டீம். அதை கிடப்பில் போடுகிறார். டீமிற்கு சந்தேகம் வந்து அதனை கவர்னருக்கு அனுப்பி வைக்க, அது டெல்லிக்கும் பறக்கிறது. போலி பாஸ்போர்ட் பற்றி கவர்னரிடம் புகார் கொடுப்பதுடன், அதனை பிரஸ்மீட்டில் சொல்லவும் என்று டெல்லியிலிருந்து அண்ணாமலைக்கு உத்தரவு வந்தது. தனது நட்பிலுள்ள அதிகாரியைப் பத்தி எப்படி குற்றம்சாட்டுவது என தவித்திருக்கிறார்.
அதேசமயம், விவகாரம் பெரிதாகவும் ஆகக்கூடாது; டெல்லியின் உத்தரவையும் மதித்தது போலவும் இருக்க வேண்டுமென திட்டமிட்டு, கவர்னருக்கும் பத்திரிகை யாளர்கள் சிலருக்கும் வாட்ஸ் ஆப்பில் தனது புகாரை அனுப்பி வைத்திருக் கிறார் அண்ணாமலை. வேறு வழியில் லாமல் அதில் அந்த அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
வாட்ஸ் ஆப்பில் புகார் அனுப்பிய அவரின் இந்த செயல், டெல்லியையும் கவர்னரையும் கோபப்பட வைத்தது. இது குறித்து கவர்னர் விசாரிக்க, தி.மு.க. அரசின் உளவுத்துறை அதிகாரியின் மூலமாக தி.மு.க.வுடன் ரகசிய நட்புறவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார் கவர்னர். இதனையடுத்து உடனடி யாக டெல்லிக்கு விரைந்த கவர்னர் ரவி, அண்ணாமலைக் கும் தி.மு.க.வுக்குமுள்ள ரகசிய உறவு குறித்து கனமான ஒரு ரிப்போர்ட்டை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்கிறார்.
இதனையடுத்து டெல்லிக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட அண்ணாமலைக்கு செம டோஸ் விழுகிறது. மேலும், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கவர்னரிடம் நேரில் புகாரளிக்க அண்ணாமலைக்கு கட்டளை யிடுகிறது டெல்லி.
கவர்னர் சென்னை திரும்பியதும் அவரைச் சந்தித்து புகார் கொடுத்த அண்ணாமலை, பத்திரிகையாளர்களை சந்திக்காமலே பின் வழியாக பறந்து விடுகிறார். தி.மு.க.வுடன் ரகசிய உறவில் இருப்பதை மேலிடம் கண்டுபிடித்துவிட்ட கோபத்தில் எதிலும் பட்டும்படாமலும் இருக்கிறார் அண்ணாமலை. இதற்கிடையே தலைவர் பொறுப்பை உணர்ந்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் அமைச்சர் பி.டி.ஆரை தரக்குறைவாக விமர்சிக்க, இதுவும் டெல்லியை கோபப்படுத்தியது.
இந்த நிலையில்தான், அண்ணா மலைக்கு செக் வைக்க மத்திய அமைச்சர் முருகனை களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க. தலைமை. கட்சி அலுவலகத்தில் முருகனுக்கு தனி அறை ஒதுக்கி நேரடி அரசியலை கவனிக்க உதவுமாறு அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத் துக்கு டெல்லி அறிவுறுத்த, முருகனுக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டது. தற்போது அண்ணாமலையின் முக்கியத் துவத்தை குறைக்கும் வகையில் முருகனும் அரசியல் செய்ய திட்டமிட்டு வருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அண்ணாமலைக்கு எதிரான அதிரடிகள் பா.ஜ.க.வில் நிறைய நடக்கும்’என்று ரகசிய பின்னணிகளை விரிவாக விவரித்தனர் பா.ஜ.க.வினர்.
நாடாளுமன்றத் தேர் தலில் கரூரில் போட்டியிட்டு எம்.பி.யாகி எப்படியும் அமைச்சராகிவிட வேண்டும் என்பதே அண்ணாமலையின் எதிர்காலத் திட்டம். ’ஜெயித்து வந்துவிடுங் கள்; உங்களை அமைச்ச ராக்க வேண்டியதை நான் பார்த்துக்கொள் கிறேன்’ என்று பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளரான பி.எல்.சந்தோஷ், அண்ணா மலைக்கு நம்பிக்கை கொடுத்துள்ளாராம். அவரது ஆதரவில்தான் அண்ணாமலையின் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. கரூரில் வெற்றிபெற செந்தில்பாலாஜியின் உதவியையும் கேட்டுள்ளாராம் அண்ணாமலை”என்றும் சுட்டிக்காட்டுகிறது கமலாலய வட்டாரம்.
இதற்கிடையே, கட்சியை வளர்ப்பதிலும் அண்ணாமலை அக்கறை காட்டுவதில்லை; சோசி யல் மீடியாக்களில் செய்தி வந்தால் போதும் என்கிற மனநிலையிலேயே அரசியல் செய்து வருவதாகவும் தாமரை கட்சியினர் புகார் தெரிவிக்கிறார்கள்.
கட்சிக்கு கோட்டப் பொறுப்பாளர் என 8 பேரை நியமித்தார் அண்ணாமலை. ஒரு கோட்டப் பொறுப்பாளரின் கட்டுப்பாட்டில் 7 மாவட்டங்கள் அடங்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தலைவர் உண்டு. ஒரு மாவட்டத்தில் 10 முதல் 15 மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத் துக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு கீழே நிர்வாகிகள் இருக்கின்றனர். கீ போஸ்டில் இருக்கும் இவர்களை வைத்துத்தான் கட்சியை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும். அதற்கேற்ப, "இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்'’என்ற ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்த கோட்டப் பொறுப் பாளர்களை கேட்டுக்கொண்டார் அண்ணாமலை. ஆனால் ஒரு சிலரைத் தவிர எவரும் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. கட்சிக்காரர்களை சந்திப்பதற்காக கோட்டப்பொறுப்பாளர்கள் தங்கள் வீட்டில் அல்லது மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறார்கள். ஆனால், தலைநகர் சென்னையின் கோட்டப் பொறுப்பாளர் தனது வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அலுவலகம் கூட வைத்துக்கொள்ளவில்லை. அவரை எங்கே போய் கட்சிக்காரர்கள் சந்திப்பார்கள்?
அவர் எப்படி ’"இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்'’செயல் திட்டத்தை முன்னெடுப்பார்? இதை அண்ணாமலையிடம் கட்சிக்காரர்கள் சொன்னால், அவர் கண்டுகொள்வதே இல்லை. ஒரு மண்டலத் தலைவரை நியமிக்கக்கூட அண்ணா மலையால் முடியவில்லை.
உதாரணத்துக்கு…பா.ஜ.க.வின் நீண்டகால உறுப்பினரான மீனாட்சி ஸ்ரீதர் என்பவர் ஆலந்தூர் மண்டல தலைவர் பதவியை அண்ணாமலையிடம் கேட்கிறார். மீனாட்சியை நியமிக்க கோட்டப் பொறுப்பாளருக்கு அண்ணாமலை உத்தரவிட்டும் நியமிக்கப்படவில்லை. மூன்று நாள், அப்புறம் 72 மணி நேரம், அப்புறம் 48 மணி நேரம் என கெடு விதித்துப் பார்த்தார் அண்ணாமலை. ஆனாலும், கோ.பொறுப்பாளர் அசைந்து கொடுக்கவே இல்லை. ஆக, ஒரு தலைவராக இருந்து ஒரு மண்டலத் தலைவர் பதவியைக்கூட நியமிக்க முடியாதபோது, அண்ணாமலையால் கட்சியை எப்படி வளர்க்க முடியும்?
மேலும் தி.மு.க.வுடன் ரகசிய உறவில் இருப்பதால் தேர்தல் நேரத்தில் எந்த வியூகத்தையும் அமைக்க முடியாது. அதனால் அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்றுங்கள் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு தகவல் தந்தபடி இருக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணாமலையின் கருத்தை யறிய தொடர்புகொண்டோம். போனை அட்டண்ட் பண்ணிய உதவியாளர், "தலைவர் மீட்டிங்கில் இருக்கிறார்'' எனக்கூறி தொடர்பை துண்டித்தார்.