நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவெங் கும் மின்வெட்டு, மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்படக்கூடுமென எதிர்க்கட்சிகள் எதிர்பார்க் கின்றனர். மத்திய அரசு தரப்பிலிருந்து நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக அப்படியெல்லாம் எதுவு மில்லை, இந்தியாவிடம் போதுமான நிலக்கரி இருக்கிறதென்ற நம்பிக்கைக் குரல் வெளிப் பட்டாலும், அனல்மின் நிலையங்களின் தரப்பிலிருந்து அதனை மறுத்து வெளிவரும் குரல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் மட்டும் 135 அனல்மின் நிலையங்கள் இருக்கின்றன. இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக அனல் மின் நிலையங்களிலிருந்தே உற்பத்தியாகின்றன. அதாவது... இந்திய மின்னுற்பத்தி, நிலக்கரியையே நம்பியிருக்கிறது என்பதே இதன் பொருள். இந்த 135 அனல்மின்நிலையங் களில் நூற்றுக்கும் மேற் பட்ட மின்நிலையங்களில் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையான நிலக்கரியையே கொண்டுள்ளன.
வழக்கமாக மின்னுற்பத்தி நிலையம் எத்தனை நாளுக்கான நிலக்கரியை இருப்பு வைத்திருக்கும்?
மின்னுற்பத்தி நிலையம் அமைந்திருக்கும் இடம், அது பயன்படுத்தும் நிலக்கரி வகையைப் பொறுத்து 15-லிருந்து 30 நாட்களுக்கான நிலக்கரியை இருப்பு வைத்திருக்கும் என்கிறார்கள். ஒரு வாரத்துக்கோ அதற்குக் குறைவான நாட்களுக்கோதான் மின்னுற்பத்தி நிலையத்தில் நிலக்கரி இருக்கிறதென்றால் அது இக்கட்டான நிலைமையாகவே கருத்தில் கொள்ளப்படும்.
இப்போது இந்தியாவில் 100-க்கும் அதிகமான மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு வாரத்துக்கும் அதற்கும் குறைவான நாட்களுக்கும் நிலக்கரி இருப்பதால் இதனை மிக மிக இக்கட்டான சூழ லாகவே கருதவேண்டும். ஏற்கெனவே ராஜஸ்தான், பீகார், பஞ்சாபில் தேவைக்கும் குறை வான மின்சாரமே உற்பத்தியாகி மின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஆரம்பித் தாகிவிட்டது. இரண்டு நாள், மூன்று நாள் நிலக்கரி இருப்பு வைத்திருக்கும் மாநிலங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஒரு வார காலத்துக்குத் நிலக்கரியை வைத்திருப்பதால் கொஞ்சம் பரவாயில்லாத நிலையில் உள்ளது.
இத்தகைய இக்கட்டான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மின்சாரத் துறை அமைச்சரான ஆர்.கே. சிங்கையும், நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியையும் சந்தித்து நீண்ட நேரத்துக்கு விவாதித்திருக்கிறார். இதன்பின்பும் மத்திய அரசிடமிருந்து கூறப்படும், "போதுமான நிலக்கரி இருப்பு இருக்கிறது' என்ற சமாதானம், மக்களை பீதியடையச் செய்யாமல் இருக்கக் கூறப்படும் வாசகமாகவே கருதவேண்டும்.
நமது அண்டை நாடும், மற்றொரு பெரிய நாடுமான சீனாவின் வடமாகாணப் பகுதிகளில் நிலக்கரிக்குத் தட்டுப்பாடு நிலவுவதையும், அங்கே மின்தடை நிலவுவதையும், இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படுவதையும் அறிந்திருக்கிறோம்.
நிலக்கரிக்கு ஏன் இந்தத் திடீர் தட்டுப்பாடு?
கொரோனா பிரச்சினையால் தொழில் மற்றும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருந்த நிலை மாறி, ஒவ்வொரு நாடும் உற்பத்தி நடவடிக்கையில் மும்முரம் காட்டிவருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் நிலக்கரி பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மின்தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நிலக்கரி தோண்டியெடுக்கப்படும் சுரங்கப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான தொடர்மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் நிலக்கரியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது, இறக்குமதி நிலக்கரியின் விலை முன்பிருந்ததைவிட 200 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
சி.ஐ.எல். எனப்படும் கோல் இன்டியா லிமிடெட் 2015-ல் கையிருப்பு மற்றும் உபரியாக ரூ.35,000 கோடி வைத்திருந்தது. அது அந்நிறுவனத் தின் விரிவாக்கத் திட்டங்களுக் காகச் செலவிடப்பட்டிருக்க வேண்டும். மாறாக, அந்தத் தொகையை அரசு எடுத்துக் கொண்டது. அதாவது, "புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு தேவைக் கேற்ப உற்பத்தி அதிகரிக்கப் படவில்லை' என்கிறார்கள்.
கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 13 சதவிகிதம் அதிகமாகவே நிலக்கரி தோண்டியெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2019-ல் இருந்ததைவிட 2021-ல் மின்சாரத் தேவை 17 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
விலையேற்றம், தட்டுப்பாடு காரணமாக இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியின் அளவு 44 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்தே தற்போதைய இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக முதலில் புகார் சொன்னது தலைநகர் டெல்லியின் முதல்வ ரான அரவிந்த் கெஜ்ரிவால்தான். தங்களது அனல் மின் நிலையங்களில் ஒருநாளுக்கு மட்டுமேயான நிலக்கரி உள்ளதாகவும் நிலக்கரி விநியோகம் மேம்படவில்லையெனில் டெல்லியில் மின்தடை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
உலகில், அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது நாடா கத் திகழ்கிறது. இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பெருமளவு ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கரிலிருந்தே பெறப்படுகிறது. இவற்றில் பெரும்பான்மை மின்னுற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன.
மழை நின்று, வழக்கத்தைவிட கூடுதலாக நிலக்கரியை உற்பத்தி செய்தால் இந்த இக்கட்டைத் தாண்டிவிடலாம் என மத்திய அரசு நம்புகிறது. மாநிலங்களோ, தேவைக்கேற்ப நிலக்கரி வந்தடைவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும் மாநிலம் முழுக்க மின்தடை ஏற்படுமென அச்சத்தில் இருக்கின்றன.