ரண்ட்டைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற நிலை மாறி, கொரோனா காலத்தில் கரண்ட் பில்லைப் பார்த்தாலே ஷாக் அடிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்களின் இந்த அதிர்ச்சியினை தன்னுடைய அனுபவத்தில் அடிப்படையில் நடிகர் பிரசன்னா டிவிட்டரில் பதிவிட, அவருக்கு அரசியல்வாதிகள் பாணியில் மின்வாரியம் கண்டனம் தெரிவித்தது. வாரியத்தின் இந்தப் போக்கினை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டித்தனர்.

ee

இயக்குனரும் நடிகருமான சேரனோ, ""ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதா மாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்ப வர்களுக்கும்). வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்?'' என்று கேள்வி எழுப்பி யிருக்கிறார்.

வெறும் 90 ரூபாய்க்குள் வரும் தாராசுரம் பாரதி மோகனுக்கு 350 ரூபாயும், 2 ஆயிரம் ரூபாய் அள வுக்கு வரும் சென்னை பெருங்குடி குடும்பத் தலைவி வீணாவுக்கு 8,500 ரூபாய் அளவிற் கும் மின்கட்டணம் வந்திருப்பது உதாரணச் சான்று. திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் கவிஞருமான கவிசெல்வா, ""கொரோனா தாக்கப்பட்டு வருமானம் இன்றி, அரசாங்க நிவாரண உதவிகளும் கிடைக்காமல் அன்றாடம் உயிர்ப்போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு, இந்த சோதனைக் காலத்தில் ஆறுதல் தரவேண்டிய அரசு, இப்படிப்பட்ட கூடுதல் மின்கட்டணச் சுமை யைக் கண்டும்காணாமல் கள்ள மௌனம் சாதிப்பது வேதனைக்குரியது. எங்களுக்கே ஏறத்தாழ மூன்று மடங்கு கட்டணம் வந்திருக்கிறது'' என்கிறார் ஆதங்க மாய்.

Advertisment

ee

பொதுவாக இரண்டு மாதங் களுக்கு ஒருமுறைதான் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி, மார்ச்சுக் குப் பிறகு, மின்வாரியம் இது போல் கணக்கெடுக்காமல், முதலில் ஏப்ரம், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக மின்சார ரீடிங்கை எடுத் தும், சில இடங்களில் ரீடிங்கே எடுக்காமல் தோராய முறையிலும் கணக்கிட்டு மின் கட்ட ணத்தை நிர்ணயித் திருக்கிறது. மொத்தமாக 6 மாதத்திற்கான மின் கட்டணத்தையும் முழு தாகக் கட்டச் சொல்கிறது மின்வாரியம்.

அதிலும் மார்ச்சுக்குப் பிறகான 4 மாத மின்கட்டணம் வழக்கத்தை விடவும் நான்கைந்து மடங்கு அதிகரித்திருப்பதாக மக்கள் மத்தியில் குமுறல் வெடித்திருக்கிறது.

Advertisment

ddஇதற்கிடையே மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்ற கணக்கீட்டின் அடிப்படையில் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமோ நீதிமன்றத்தில் “மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 545 நுகர்வோரில், 8 லட்சத்து 45 ஆயிரத்து 762 நுகர்வோர்கள் மட்டும், அதாவது சுமார் 6.25 சதவீதம் பேர் மட்டுமே, மின் கட்டணமாக ரூ.343.37 கோடி செலுத்தாமல் உள்ளனர். அதேபோல் மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 904 பேர் மட்டுமே ரூ.287.94 கோடி செலுத்த வில்லை. ஜூன் மாதம் 18 லட்சத்து 44 ஆயிரத்து 128 பேர் சுமார் ரூ.478.36 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தவில்லை’என்று தெரிவித் திருக்கிறது. இந்தப் புள்ளிவிரக் கணக்கே மக்களின் இயலாமையைத்தான் காட்டுகிறது. இதை உணர்ந்தாவது திணறுகிறவர்களை, அதி லிருந்து மீட்க உரியவர்கள் முன்வர வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ""100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன் படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப் படுகின்றது. மின்சாரப் பயன்பாட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும் போது, இரு மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண் டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வாங்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அள வீட்டைக் கணக்கிடுகின்றார்கள். எடுத்துக் காட்டாக, ஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது. இதே போன்றுதாள் ஒவ்வொரு ஸ்லாப்பிலும் வசூலிக்கப்படுகிறது’’ என்கிறார். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுத்தாலும், அதற்கு ஒவ்வொரு மாத ரீடிங்கின் அடிப்படையிலேயே கட்டண நிர்ணயம் செய்வதே நியாயமானதாக இருக்கும். அல்லது ஸ்லாப் முறையை இந்த கொரோனா காலத்தில் தள்ளிவைத்து, பயன்படுத்தப்படும் யூனிட்டுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அப் போதுதான் கரண்ட் பில் ஷாக் கிலிருந்து மக்கள் தப்பிப்பார்கள். மின்சார அமைச்சர் தங்கமணி, இந்த கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கையில் ஹை வோல்ட் மின்சா ரத்தைப் பாய்ச்சி அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்.

-தமிழ்நாடன்