தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தலில், நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் உள்குத்து அரசியல் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட மாநகர உ.பி.க்கள்... "குமரி கி.மா.செ. சுரேஷ்ராஜன் மேயர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டி, அவர்மீது நடவடிக்கை பாயவைத்த மேயர் மகேஷ், சுரேஷ் ராஜன் ஆதரவாளர்களைப் பொறுப்புகளிலிருந்து தூக்கியெறிவதோடு, பா.ஜ.க. மாவட்டப் பொருளாளரான கவுன்சிலர் முத்துராமனுக்கு மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பதவியையும், பா.ஜ.க. ரமேஷுக்கு மாநகராட்சி நகரமைப்புக் குழுத்தலைவர் பதவியையும் கொடுத்துள்ளார். எனவே சுரேஷ்ராஜன் மீது பாய்ந்த நடவடிக்கை, இவர்மீதும் பாய வேண்டாமா?

dmkdmk

மாநகராட்சி வார்டு தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க பா.ஜ.க.வுடன் சேர்ந்து உள்ளடி வேலைகளைச் செய்த சின்னத்துரைக்கு கிழக்கு மண்டல அவைத்தலைவர் பதவி, துரைக்கு கிழக்கு மண்டலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல செயலாளர் பொறுப்பை, மகேஷின் உதவியாளரான ஷேக்மீரானுக்கு கொடுத்துள்ளார்கள். இவர் தி.மு.க. உறுப்பினர் கூட இல்லை. தெற்கு மண்டலச் செயலாளர் பொறுப்பை பரம்பரைத் தி.மு.க.காரரான ஜெரால்டுக்கு கொடுக்காமல், பா.ஜ.க.வின் எம்.ஆர்.காந்திக்கு தேர்தல் வேலை செய்த ஜீவாவுக்கு கொடுத்துள்ளனர். மொத்தமுள்ள 52 வார்டுகளில் 34 வார்டுகளின் வட்டச்செயலாளர் பொறுப்பை தி.மு.க. உறுப்பினர் கார்டுகூட இல்லாதவர்களுக்கே கொடுத்துள்ளனர். மாநகர செயலாளர் பதவிக்கு, மா. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சிவராசன், மாநகர து.செ. சீதாமுருகன் மற்றும் எக்ஸ் எம்.பி. ஹெலன் கணவர் டேவிட்சன் என மூவர் மனுத்தாக்கல் செய்தும், மாநகராட்சி செயலாளர் சுரேஷ்ராஜனுக்கு எதிரானவரான எள்ளுவிளை ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்தை, மகேசும் அமைச்சர் மனோதங்கராஜூம் செலக்ட் செய்துள்ளார்கள்'' என்றார்கள்.

நாகர்கோவில் கிழக்கு மாவட்ட அதிருப்தி உ.பி.க்கள் கூறுகையில், "இங்கு மகேசும் ஆஸ்டினும் திட்டமிட்டே சுரேஷ்ராஜன் ஆதர வாளர்களைப் புறக்கணித்து, மாற்றுக் கட்சியினருக்கு வலுக்கட்டாய மாகப் பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். தீவிர கட்சி விசுவாசியான நெடுஞ்செழியனைத் தூக்கிவிட்டு, செல்வத்துக்கு தோவாளை கிழக்கு ஒ.செ. பொறுப்பைக் கொடுத்தியிருக்கிறார்கள். இதே செல்வம், 2011-ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தளவாய்சுந்தரத்துடன் அ.தி.மு.க.வுக்கு போனவர். கலைஞரின் கொடும் பாவியை எரித்தவர். கனிமொழி யைக் கடுமையாக வசைபாடியவர். அதேபோல், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒ.செ.வாக இருந்த தாமரை பாரதி, ஜெயலலிதாவை விமர்சித் துப் பேசியதால் 10-க்கும் மேற் பட்ட வழக்குகளை எதிர்கொண் டுள்ள தீவிர தி.மு.க.காரர். இவரிடமிருந்த ஒ.செ. பதவியைப் பிடுங்கி, ஆஸ்டின் ஆதரவாளரான பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

குருந்தன்கோடு மேற்கு ஒ.செ.வான குட்டிராஜனிடமிருந்த பதவியை, உறுப்பினர் கார்டே இல்லாத சுரேந்திரகுமாரிடம் கொடுத்துள்ளனர். இதேபோல், மகேஷின் அண்ணன் மகனான, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரதாப்சிங்கை வலுக்கட்டாய மாகக் கட்சியில் இணைத்து, புத்தளம் பேரூர் செயலாளராக நியமித்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க.விலிருந்து இணைந்த அய்யப்பனுக்கு உடனடியாக மண வாளக்குறிச்சி பேரூர் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அ.தி.மு.க. ஐ.டி. விங்கைச் சேர்ந்த சுதாகர், மூன்று மாதத்துக்கு முன் தி.மு.க.வில் இணைந்து, மயிலாடி பேரூர் செயலாளராகியிருக்கிறார்.

Advertisment

dmk

பத்மநாபபுரம் நகரச் செயலாளர் பதவி, மனோதங்கராஜின் மகன் முன்னிலையில் 4 மாதங் களுக்குமுன் தி.மு.க.வில் சேர்ந்த சுபிகானிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மேற்கு மாவட்டத்தில், மொத்தமுள்ள 21 வார்டுகளில் 18 வார்டுகளில் வார்டு செயலாளர்களாகக் கட்சிக்குப் புதியவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். திருவிதாங் கோடு பேரூர் செயலாளராக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல்புறம் ஒ.செ. சிற்றார் ரவிச்சந்திரன், சீனியர் கட்சிக்காரர். கடுமையாகக் கட்சிக்காக உழைத்தவர். அவரிடமிருந்த பதவியை, கரைவேட்டி கட்டாத தி.மு.க.காரன் எனச் சொல்லிக்கொள்ளும் ஷைனி காட்டனிடம் கொடுத்துள்ளனர். குழித்துறை நகர.செயலாளராக இருந்த ஆசைத்தம்பி, கடும் போட்டிக்கிடையே நகராட்சித் தேர்தலில் வென்று நகர்மன்றத் தலைவரானார். தற்போது அவரிட மிருந்த நகரச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சரத்குமாரின் ச.ம.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த அருள்ராஜுக்கு பளூகல் பேரூர் செயலாளர் பதவி கொடுக் கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸிலிருந்து தி.மு.க.வில் இணைந்த ஷிபுவுக்கு கடையல் பேரூர் செயலாளர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து நாகர்கோவில் மாநகர து.செ. சீதாமுருகன் கூறும்போது, "இங்கு வேட்புமனுத் தாக்கல் மட்டும்தான் நடந்ததே தவிர, தேர்தலும் நடக்கல, பேசியும் முடிக்கல, கடந்த உட்கட்சி தேர்தல் வரை தி.மு.க.காரனை எதிர்த்து தி.மு.க.காரன்தான் போட்டியிடு வான் அந்த மோதல் ஆரோக்கிய மாக இருந்தது. இப்போது உண்மையான தி.மு.க.வினரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, மாற்றுக் கட்சியினருக்கு கொடுக் கப்பட்டுள்ளது. கட்சிக்கு ஜூனி யர்கள் வரவேண்டும், அது தி.மு.க.வினராக இருந்தால்தான் கட்சி ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார்.

தாமரைபாரதி கூறுகையில், "மொட்டைக் கடித அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளேன். ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நிறம் மாறக்கூடியவர்களுக் கெல்லாம் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. நான் சாகும்வரை தி.மு.க.காரனாக இருப்பேன்'' என்றார். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மகேஷின் ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படியே நிர்வாகிகள் தேர்வு நடந்துள்ளது. மாற்றுக் கட்சியிலிருந்து வந்து தி.மு.க.வில் ஐக்கியமானால் அவர்களும் தி.மு.க.வினரே. மற்றபடி, மாற்றுக் கட்சியினருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை'' என்றனர்.

Advertisment