Advertisment

ஆபாச வீடியோ! பேரம் பேசிய பா.ஜ.க.! தருமபுரம் திகுதிகு!

ss

யிலாடுதுறை அருகிலுள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதி பதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள். ஏற்கெனவே, பல்லக்கு தூக்க வைத்தது, தமிழக ஆளுநரை அழைத்து விழா நடத்தியது, அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகளை வரவழைத்து ஆசி வழங்குவதென பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருப்பவர்.

Advertisment

ss

இந்நிலையில், ஆதீனகர்த்தா மாசிலாமணி சுவாமிகளை பா.ஜ.க.வினர் மிரட்டுதாக ஆதீனகர்த்தாவின் சகோதரரான விருத்தகிரி, கடந்தவாரம் காவல் துறையில் புகாரளித்தது மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. அந்த புகாரில், "தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர், மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்க ளிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தரவேண்டுமென்றும் கூறி மிரட்டினார் கள். திருவெண்காட்டைச் சார்ந்த பா.ஜ.க. முன் னாள் ஒன்றிய தலைவர் விக்னேஷ், செம்பனார் கோயிலை சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங் களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், வழக்கறி ஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திருக் கடையூர் விஜயகுமார் ஆகியோர் இவ்விவகாரத்தில் தூண்டுதலாக இருந்தனர். எனவே அவர்கள் மீது தக்க நட வடிக்கை எடுக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டி ருந்தார். அந்த புகாரியின் அடிப்படையில், வழக்கு பதிவுசெய்து குடியரசு, வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அகோரம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.

Advertisment

தருமபுரம் ஆதீ

தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமி கள் ஏற்கெனவே திருப் பனந்தாள் காசி மடத்தி லுள்ள பெண்ணிடம் சில் மிஷம் செய்ததாக குற்றச் சாட்டு உள்ளது. திருவை யாறு செந்திலின் மனைவி தற்கொலை விவகாரத்திலும் இவரது பெயர் கிசுகிசுக்கப் பட்டது. தருமபுரம் 26வது சன்னிதானம் இறந்த பிறகு ஆதீனமானதும், திருவை யாறு செந்திலையும் கூட வே வைத்துக்கொண்டார். ஆதீனத்தின் அதிகாரம் தொடர்ச்சியாக கார்காத்த வெள்ளாளர்களிடமே இருக்கும். இந்நிலையில், மாற்றுச் சமூகத்தை சேர்ந்த திருவையாறு செந்தில், சாமியாரோடு மிகநெருக்க மாக இருப்பது மற்ற நிர்வாகி களுக்கு எரிச்சலைத் தந்தது.

ddஇந்த சூழலில்தான் நான்காண்டுகளுக்கு முன்பு திருவையாறு மடத்தில் மாசிலாமணி சுவாமிகள் தம்பிரானாக இருந்தபோது ஒரு ரகசிய வீடியோவை விஜயகாந்த் நடித்த கேப் டன் பெயரை முன்னெழுத் தாகக் கொண்டவர் எடுத் திருக்கிறார். அந்த வீடி யோவை மற்றொரு ஆதீனத் தின் தென்மண்டல நிர்வாகி ஒருவர் கைப்பற்றி, முதற் கட்ட பேரத்தை முடித்துள்ளார். பிறகு மதுரையை சேர்ந்த ஒரு டீம் கோடிக்கணக்கில் டீல் பேசி முடித்தது. இங்கிருந்து தற்போது கைதாகியுள்ள ஆடுதுறை வினோத், காடுவெட்டி குருவின் ஆதரவாளரான வி.ஜி.கே.மணி என்பவ ரிடம் ஆதீனத்தின் வீடியோவைக் கொடுத்து, ஆதீனத்திடம் பேரம் பேசி வாங்கிய பணத்தில் பெரும்பங்கை மணி சுருட்டியிருக்கிறார். அதன் பின்னர் நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் மூலம் அகோரத் திடம் வீடியோவை பாஸ் செய்திருக்கிறார். அதேபோல், அவனியாபுரம் இஸ்லாமிய பிர முகர்களிடம் இந்த வீடியோ விஷயத்தைக் கூறி, அதை வெளியிடும்படி கேட்க... அவர்களோ, "ஆளை விடுப்பா' என நழுவியிருக்கிறார்கள். அதன்பின் இவ்விவகாரத்தில் தொடர்புடைய வினோத், அகோரம், குடியரசு உள்ளிட்டோர் கைப்பற்றி ஆதீனத்திடம் பேரம் பேச, நொந்து போன ஆதீனகர்த்தர் தற்கொலை முடிவுக்கே வர, அப்போது, மயிலாடுதுறை கடை திறப்புவிழாவிற்கு வந்த ஒரு பவர்ஃபுல் அரசியல் பிரமுகரிடம் ஆதீனம் புலம்ப, அதன்பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை'' என்கிறார்கள்.

போலீசாரிடம் விசாரித்தபோது, "அது ரொம்ப காலத்துக்கு முன்பெடுத்த வீடியோ. அதைவைத்து பல கோடிகள் கைமாறியிருக் கிறது. இறுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சிக்கி யுள்ளனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகப் பேசி யது உட்பட பல்வேறு புகார்களில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் தான். மற்றொருவரான குடியரசு என்பவர், கலைமகள் பெயரில் 13 கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர். எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருவதுண்டு.

dd

வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. திருக்கடையூர் விஜயக்குமார், கோயில் வாசலிலுள்ள இடத்தை தன் கட்டுப்பாட்டில் வைத் திருக்கிறார். இந்நிலையில், ஆதீனத்தைப் பற்றிய அனைத்தும் தெரிந்த அவரது உதவியாளர் திருவையாறு செந்திலின் பெயரை புகாரிலிருந்து நீக்கிவிட்டாராம் ஆதீனம். தற்போது காசி சென்றுள்ள ஆதீனகர்த்தரோடு செந்திலும் உடன் இருக்கிறார். அதேபோல் திருக்கடையூர் விஜயகுமார் தங்களுக்கு உதவி செய்பவரென்று புகாரளித்த விருத்தகிரி பல்டி யடித்துள்ளார். இப்போது வீடியோ எடுத்தவர் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

இந்நிலையில், "தருமபுரம் ஆதீனத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர் களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''’என்று தருமபுரம் ஆதீனம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புகார் குறித்து விருத்தகிரியிடம் கேட் டோம். "தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது எங்களை நிம்மதியடையச் செய்துள்ளது” என்றவரிடம், "இரண்டு பேரை வாபஸ் வாங்கியிருக்கீங்களே?'' என்றதும், "பிறகு பேசுகிறேன்'' எனக்கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார். நெருப்பில் லாமல் புகையாது!

__________

சமூக விரோதிகளின் பிடியில் தருமை ஆதீனம்?

குருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட இந்த தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் 27 சிவாலயங்கள் உள்ளன. அம்மடங் களுக்கு அக்காலத்திய நிலச்சுவான் தார்கள் தானமாக வழங்கிய நஞ்சை/புஞ்சை நிலங்கள் ஏராளம். இவற்றிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான வருவாயைக் கொண்டு, பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவ மனை போன்றவற்றையும் தருமை ஆதீனம் நடத்தி வருகிறது.

dd

சீர்காழி நகரிலுள்ள அருள்மிகு சட்டநாத சுவாமி கோவில் இந்த தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அந்த கோவிலுக்குச் சொந்தமாக, ச.எண்: 418/10-ல், 5.38 ஏக்கர் புஞ்சை நிலம் இருக்கிறது. பல ஆண்டுகளாக வெறுமனே கிடந்த அந்த தரிசு நிலத்தை வீட்டடி மனைகளாக உருவாக்கி, அதன்மூலம் வருவாயைப் பெருக்க, ஆதீனத்தின் சட்ட விதிகளின்படி மனைகளை விற்பனை செய்து வந்தனர். அதில் விற்பனையாகாமலிருந்த 1 ஏக்கர் நிலத்தை கல்வி நிலையங்களுக்கென அரசு பொதுவாகப் பிறப்பித்துள்ள ஆணையின்படி (ஏ.ஞ.ஙள் 298 உற் 20.7.2010), மொத்த அரசு வழி காட்டி மதிப்பில் குறிப்பிட்ட தொகையை ஆதீனத்திற்கு செல்வம் என்பவர் செலுத்தி, அந்த இடத்தில் ‘எழில்மலர் மெட்ரிகுலேஷன் பள்ளி’ என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, 2019ல், 26ஆம் ஆதீனம் இறந்தபிறகு, 27-வது ஆதீனமாக மாசிலாமணி சுவாமிகள் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றதிலிருந்தே ‘பல்லக்கு பட்டணப் பிரவேசம்’ தொடங்கி, அரசு நிலமான நூறு ஏக்கரை தருமை ஆதீனம் கபளீ கரம் செய்ததாக வெளியான செய்தி வரை சர்ச்சைகளின் மையமாகவே இருந்தார். அவரது வலதும் இடதுமாய் செயல்படுபவர்கள் செந்தில்குமார் மற்றும் மார்கோனி. இந்த மார்கோனி, அப்பகுதி தொழிலதிபரை ரமேஷ்பாபு என்பவர் கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, டெல்டா மாவட்ட மாஜி அமைச்சர் ஒருவரின் பின்புலத்தில் ஜாமீனில் வெளியில் வந்தபின், மார் கோனியின் அசைவுக்கேற்ப ஆதீனம் ஆட்டுவிக்கப்படுகிறாராம். ஆதீனத் துக்கு சொந்தமான எழில்மலர் மெட்ரிகுலேசன் பள்ளியை அபகரிக்க மார்கோனி திட்டமிட, ஆதீனகர்த்த ரின் அழுத்தத்தால், அப்பள்ளியை செல்வம் எழுதிக் கொடுத்துள்ளார். அப்பள்ளிக்காக அவர் முதலீடு செய்த பணத்தைத் தந்துவிடுவதாக முதலில் ஒப்புக்கொண்ட ஆதீனம், பின்னர் முடியாதென்று மறுத்ததோடு, மார் கோனி மூலமாக கொலை மிரட்டல் விடுவதாகவும் சொல்லப்படுகிறது. மார்கோனியின் கைப்பாவையாக ஆதீனம் செயல்படுவதற்கு பின் னணியில் வீடியோ மேட்டர் இருப்ப தாக ஆதீனப் பணியாளர்களால் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆதீனம் மாசிலாமணியிடம் கேட்டபோது, "தற்போது இதுகுறித்து பேசும் நிலையில் தான் இல்லை'' என்று மறுத்துவிட்டார்.

சமூக விரோதிகளோடு ஆதீனத்தின் தொடர்புகளை விசாரித்து, ஆதீனத்தின் சொத்துக்க ளை மீட்குமா அரசு?

-சே

nkn060324
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe