நக்கீரன் மேல் போர் தொடுத்த சர்வாதிகாரி!
"நான் செஞ்சது தப்புதான். நான் எல்லார்ட்டயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்' அப்படின்னு 32 வருஷம் கழிச்சு, தான் செஞ்ச தவற தேவாரம் உணர்ந்து சொல்றாருன்னு நான் சொல்லமாட்டேன். ஏன்னா... அந்த அளவுக்கான மனுஷனா நான் அவர பாக்கல.
"அங்கு நடந்த சோக நிகழ்வுக்கு முழுப் பொறுப்பும் நானே ஏற்றுக்கொள்கிறேன்'
எப்படி... அந்த நூத்திச் சொச்சம் பேரு இறந்ததுக்கு... முழுப்பொறுப்பும் நானே ஏத்துக்கிறேன். இவரு 40 பேருதான் செத்தாங்கன்னு சொன்னாரு. எப்பவுமே... அப்ப இருந்தே ஒரு பொய்ய சொல்லிட்டுத்தான வர்றார். ஆனா இதுல நாம கவனிக்கவேண்டிய ஒண்ணு... 32 வருஷம் கழிச்சு ஒரு விஷயத்த இப்பவாவது ஒத்துக்கிறாரு. அதுக்கு ஒரு சபாஷ்!
இதே வாய்தான், கொஞ்சநாளைக்கு முன்னாடி, முக்தாருக்கு குடுத்த பேட்டியில...
"காவல்துறை அதிகாரி நேர்மையா இருக்க முடியுமா இந்த காலகட்டத்துல?'ன்னு கேட்டதுக்கு...
""நாங்க யாராவது நேர்மை இல்லன்னு சொல்றவங்கள, எங்கிட்ட கொண்டாங்க''
அதாவது... "அவன கொண்டாங்க, எதால அடிப்பேன்னு தெரியாது'ன்னு சொல்றது மாதிரி, நாம சொல்லுவோம்ல ஊருல... அது மாதிரி அவரு கோவமா கேக்குறாரு.... ரைட்டு!
அப்படின்னா, அதுக்கு நேருக்கு மாறா... ""மகாமகச் சாவுக்கு நான்தான் பொறுப்பு. நான் அத ஒத்துக்கிறேன்'' அப்படீன்னு பொதுமன்னிப்பு கேக்கிறது மாதிரி இவரு பாவமன்னிப்புக் கேக்குறாரு... இருக்கட்டும்.
அப்போ இதுல நாம என்ன சொல்ல வர்றோம்னா... இப்படிப்பட்டவருதான், வீரப்பன் காடுங்கிற அந்த மலைக்கிராமங்கள்ல உள்ள அந்த ஜனங்க மேல திணிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை... தேடுதல் வேட்டையில ஈடுபட்ட எஸ்.டி.எஃப்.ல இருந்த சில ஓநாய்களால பாதிக்கப்பட்ட எத்தனையோ ஜனங்க ஹோ.... ஹோ.... ஹோ...ன்னு எல்லாருமே சதாசிவா கமிஷன் முன்னாடி, "எப்படியெல்லாம் சித்ரவதப் பட்டோம் போலீஸ்காரங்களால'ன்னு சொன்னாங்க.
ஒட்டுமொத்தமா எல்லா போலீஸ்காரங்களயும் குத்தம் சொல்லல. எஸ்.டி.எஃப்.ல இருக்கிற சில பேரால, அவங்க பேரச் சொல்லியே எல்லாரும் சொன்னாங்க. அதுல குறிப்பா "இவரு என்ன கற்பழிச்சாரு, பாலியல் ரீதியா துன்புறுத்துனாரு, உசுரு நிலையில கரண்ட் விட்டு கொடுமைப்படுத்துனாரு' அப்படின்னு தேவாரத்தோட பேரையும் வெக்கத்த விட்டுச் சொன்னாங்க.
அப்ப, அதுக்கு என்ன பதிலச் சொன்னாரு?
""அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது. நான் அங்க பொம்பளைகளையே பாத்ததுல்ல, எங்க கூட இருந்த ஆளுகளும் பாத்தது இல்ல''ன்னு சொல்லி மத்தவங்களுக்கும் வக்காலத்து வாங்கி மறுத்தாரு.
மகாமகச் சாவு நடந்தப்போ ஒத்துக்காத அவரு, இன்னிக்கு ஒத்துக்கிறாரு. அப்போ நாம சொன்ன, அந்த வீரப்பன் காட்டுல வாழ்ந்த மலைமக்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளுக்கு, அதோட இல்லாம அவங்கள செஞ்ச சித்ரவதை, சின்னாபின்னமாக்குனதுக்கு முக்கிய தளகர்த்தாவா இருந்தது தேவாரம்தான்.
இத எப்ப ஒத்துக்கப்போறாருன்னு தெரியல... ஒத்துக்கணும்... ஒத்துக்குவாரு. இவரு செஞ்சிருக்காருங்கிறதுக்கு சாட்சியா... கும்பகோணம்- மகாமகத்துல நடந்த கோர சம்பவத்த எடுத்துக்காட்டுனது இதுக்குத்தான்.
"கடவுள் என்று ஒருவர் இல்லை. நான் கடவுள் இல்லை' எனச் சொன்ன புத்தர் கூட "பாவ புண்ணியங்கள்'ல நிறைஞ்ச நம்பிக்கை வச்சிருந்தார்.
""பாவக்கனி பழுத்து பலனை விளைவிக்காதவரை மனிதன் பாவங்களைச் செய்ய அஞ்சுவதில்லை'' என்றார் புத்தர்.
"மகாமகக் குள பயங்கரத்துல தங்கள் பக்கம் தவறு இல்ல'ன்னு மறுத்து வந்த தேவாரம் ஐ.பி.எஸ்., தன்னோட ஓய்வுக்குப் பிறகு, தான் செய்த பாவம் பழுக்கத் தொடங்கி, மனசாட்சி உறுத்துனதுனால, "மகாமக சோக நிகழ்ச்சிக்கு நானே முழுப் பொறுப்பு'ன்னு தன்னோட புத்தகத்துல எழுதியிருக்காரு.
உண்மை 32 வருஷம் கழிச்சும் கூட கனன்றுகொண்டே இருந்து சுடும்!
தேவாரம் சின்ன பொறி...தான். அவரே மனசு கேக்காம இத்தன வருஷத்துக்குப் பெறவு பாவமன்னிப்பு கேக்குறாரு.
அப்படின்னா இவரு தலைவி...
என்ன... என்ன ஆட்டம், எத்தன... எத்தன அநியாயம்... எம்மாம் பெரிய அகம்பாவம்...! தேவாரம் பாவமன்னிப்பு கேட்ட மாதிரி இந்தம்மாவும் கேக்கணும்னா மகாமகத்து அளவுக்குத்தான் முதல்ல கேக்கணும்.
ஆனா மகாமக சம்பவம் நடந்ததும் "ஜெ.' தரப்புல யாரும் மன்னிப்பு கேக்கல. அப்ப சட்டமன்றத்துல எதிர்க்கட்சியே இல்ல. அதனால அவங்க கட்சிக்காரங்க இத்தன பேர் மகாமக புனிதக் குளத்துல செத்ததுனால திருஷ்டி கழிஞ்சுருச்சு, தீட்டு கழிஞ்சிருச்சு, புண்ணியம் வந்துருச்சுன்னு போறபோக்குல சொல்லி ஊத்தி மொழுகிட்டாங்க.
போர்க்களத்துல க்ளைமாக்ûஸ நெருங்கிக்கிட்டிருக்கோம். அதிகார துஷ்பிரயோகம் செஞ்சாரு ஜெ. அதை அம்பலப்படுத்துச்சு "நக்கீரன்.' இதுக்காக நிராயுதபாணியா இருந்த என்மேலயும், நக்கீரன் மேலயும் போர் தொடுத்த மொரட்டு சர்வாதிகாரி...
2016 செப்டம்பர். போயஸ் கார்டன். டெல்லியில இருந்து போன். ஜெ.வின் குட்புக்ல இருக்குற ஒரு எம்.பி. ""அம்மா... நான், நம்ம வழக்கு பார்க்குற பெரிய வக்கீல பாத்தேன். இந்த வழக்க இதுக்கு மேல தள்ளிட்டுப் போக முடியாது. குன்ஹா தீர்ப்புக்கு உயிர் வந்துரும். முடிஞ்சவரைக்கும் தள்ளி கொண்டுபோயிட்டேன், இனி கஷ்டம்னு சொன்னாரும்மா'' -இது போன்ல வந்த செய்தி.
2000-ல ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் போகணும்னா அந்த ஊருக்கு, முன்னாடியே ஒரு டீம் போகும். மீட்டிங் இடம் செலக்ட் ஆனதும், மீட்டிங் நடக்குற மேடைக்கு பக்கத்துல ஒரு ஓய்வுஅறை கட்டப்படும். பக்கத்துலயே தங்ள்ற் தர்ர்ம். ஈர்ள்ற் எவ்வளவு தெரியுமா..? அப்பவே 6 லட்சம் மதிப்புல கட்டுனாங்களாம்... ஆச்சரியமா இருக்குல்ல.
"இப்ப அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா?'
இருக்கு... இப்படி மகாராணியா வாழ்ந்துச்சு. மீட்டிங்கிறது ஒரு 2 மணி நேரத்துல முடிஞ்சுரும். அதுக்கு பாத்ரூம் செலவு மட்டும் 6 லட்சம். அப்படின்னா... அவங்க என்ன மாதிரி வாழ்க்கை வாழ்த்திருக்காங்க.
96-ல கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், சொத்துக்குவிப்பு வழக்குல ஜெயலலிதா கைதானாங்க. சென்னை சென்ட்ரல் ஜெயில்ல குவாரன்டைன்ங்கிற ஒரு தனி "செல்'ல (சிறை) அடைச்சாங்க. ராத்திரி எந்நேரமும் பெருச்சாளி வந்துபோற சிறைக் கொட்டகை... யோசிச்சுப் பாருங்க! இந்தம்மா ராணியா வாழ்ந்த வாழ்க்கை எங்கே? பெருச்சாளி வந்துபோற இடத்துல 27 நாளு அடைச்சு வச்சாங்க.... இது ஒரு பக்கம்.
1999-ல வாஜ்பாய் ஆட்சி. இந்தம்மா அதுல பங்கெடுத்துச்சு. இத்தனையும் ஆன பிறகு அந்த நல்ல மனுஷன் வாஜ்பாய் ஆட்சிய கவுக்க அந்த விளங்காத ஆசாமி சு.சாமியோட கூட்டுச் சேர்ந்து காங். தலைவி சோனியாவோட அன்னிக்கு சாயந்திரமே ஒரு மெகா டீ-பார்ட்டியில கலந்து, வாஜ்பாய் ஆட்சிய கவுத்துட்டுத்தான் திரும்புச்சு.
டெல்லில பயணம். டெல்லி போகும்போது பி.ஜே.பி.ல கூட்டணிலதான் இருந்துச்சு. அவங்க தங்க ஒரு பிரபலமான 5 ஸ்டார் ஓட்டல்ல ஒரு தளம் முழுக்க காலியா எடுத்து, அதுல ஒரு அறை, அந்த அறையிலயும் இந்தம்மாவுக்கு ஏத்த மாதிரி பாத்ரூம் வடிவமைச்சாங்க. இவங்க குளிக்க பன்னீர் வேணும்னு கேட்டதுனால, டெல்லியில எங்கயும் கெடைக்காம, ஏதோ ஒரு மாநிலத்துல புடிச்சுட்டு வர்றது வரைக்கும் காத்திருந்து அதுக்குப் பிறகு வெளியில வந்தாங்களாம்.
-இப்படி ஜே.... ஜே...ன்னு ரோமாபுரி ராணியா வாழ்ந்த வாழ்க்கையில மண் விழுற மாதிரி... மீண்டும் குன்ஹா தீர்ப்பு உறுதியாச்சுன்னா, சென்னை சிறைவாசம்... அடுத்து, பரப்பன அக்ரஹார சிறை... எல்லாம் கண் முன்னாடி வந்து போகுது...
"ஷாட்'டை கட் பண்ணி ஜெ. மரணத்த விசாரிச்ச ஆறுமுகசாமி கமிஷன் ரிப்போர்ட்டுக்குள்ள போறோம்..
(புழுதி பறக்கும்)