poorkalam

(164) அரெஸ்ட் பரபரப்பு...!

poorkalam

பெல் பெருசா அடிச்சிக்கிட்டே யிருக்கு. "கர்ர்ர்ர்ர்...'னு ஒரு பெரிய சவுண்டு. பெரிய ஆபத்து போலன்னு நெனைச்சிக் கிட்டு டக... டக...ன்னு மேல ரெண்டாவது மாடி இறங்கி, அங்கவுள்ள தனி அறைக்குள்ள போய் லைட்ட ஆஃப் பண்ணிட்டு படுத்தாச்சு. ஏன்னா ரெண் டாவது மாடிக்கு வந்து போலீஸ்காரங்க பார்க்கிற வாய்ப்பு இல்ல. அங்க என்னோட ஆபீஸ்ல என்கூட வேலை பார்க்கிற தம்பிங்க நாலஞ்சு பேர் தங்கியிருக்கிற வீடும் அங்கதான் இருக்கு. அதுக்குள்ள இது வரைக்கும் யாரும் வந்ததுல்ல. பேமிலியா வேற இருக்கிறதுனால வரல. போலீஸ் காரங்க அதுல மாத்திரம் ஒரு லட்சுமண கோடு போட்டுட்டாய்ங்க.... அந்த ஏரியாவுக்குள்ள போகக்கூடாதுன்னு. அது நமக்கு நல்லதாப் போச்சு. அதனாலதான் அந்த ரெண்டாவது மாடியில உள்ள ரூம்ல போய் டபக்குன்னு படுத்துக்கிட்டேன்.

Advertisment

திடீர்னு சரக்... சரக்...ன்னு காலடிச் சத்தம். அப்ப நமக்கு எங்க சந்தேகம் வருதுன்னா, "இவரு இப்ப இங்கதான் இருக்காரு'ங்கிற மாதிரி ஏதோ ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அது உண்மையிலேயே அவங்க இன்டலிஜென்ஸ் சரியாத்தான் சொல்லியிருக்கு, "வீட்டுலதான் அவரு இருக்காரு'ன்னு. அத கணக்குப்பண்ண பொங்கல்... நல்ல நாளும் அதுவுமா வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. வந்ததும் ஆரம்பிச்சிட்டாய்ங்க ஸர்ச்....ச!

கிட்டத்தட்ட 20-க்கும் மேல போலீசு... ஒரு வேன் நிறைய வந்திருக்கு. கீழ கண்ணன்கிட்ட விசாரிச்சிருக்கு. அதுக் கப்புறமா மேல தட... தட...ன்னு வந்திருக் காங்க. கூடவே நாலஞ்சு பெண் போலீசும் வந்திருக்காங்க.

"இங்க வந்திருக்காரா?'ன்னு கேட்டுருக் காங்க.

Advertisment

"இல்லங்க'ன்னு சொல்லிருக்காங்க. ஏன்னா இருட்டுங்கிறதுனால எதுவும் தெரியாது. அதுக்கு முன்னாடி ஜென் செட்ட ஆஃப் பண்ணிட்டாங்க. மெழுகு வர்த்தி வெளிச்சத்துலதான் வீட்டுல உக்காந்திருப்போம்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல பாய் இருக்காரு. அவரு கோழிக்கடை வச்சி ருக்காரு. அதுக்கு அடுத்தது, ஷாஜகான்னு ஒரு தொழிலதிபர் இருக்காரு. இப்ப வந்தவங்க என்ன பண்ணிட்டாங்க... கோழிக்கடை பாய் வீட்டுக்குள்ள பத்து போலீஸ்காரங்க போயிருக்காங்க. ஷாஜகான் வீட்டுக்கும் பத்து போலீஸ்காரங்க போயிருக்காங்க. போய் பரபரப்பா ஒரு பதட்டத்த உண்டுபண்ணி அவங்கள விசாரிக்கிறோம்கிற பேர்ல டிஸ்டர்ப் பண்றது. எப்படின்னா...?

ppp

"உங்க பக்கத்து வீடுதான அவரோட வீடு. அவரு இங்க எப்பவாவது வந்தாரா? உங்களுக்கு அதுபத்தி எதாவது தகவல் தெரியுமா?, உங்க வீட்டுக்கு எப்பவாவது வந்தாரா?' அப்படின்னு கேட்டா... "என்னடா இது... நம்ம வீட்டுக்கு போலீஸ்லாம் வருது. இது சரியில்லியே'ன்னு பக்கத்துல இருக்கிறவங்க நினைப்பாங்கள்ல? நிறையபேரு அத விரும்பமாட்டாங்க. "அவரால நமக்கு எவ்வளவு தொந்தரவு'ன்னு பக்கத்துல உள்ளவங்க நினைக்கணும். அதனால அவர இங்க இருந்து காலிபண்ணச் சொல்லணும்கிற ஒரு எண்ணத்த அவங்களுக்கு கொண்டுவந்து, அதுமூலமா நமக்கு நெருக்கடி குடுக்கணும். இதுதான் போலீஸ்காரங்களோட நோக்கம்.

அதேமாதிரி நம்ம ஆபீஸோட தெற்கு பக்கத்து கார்னர்ல... அதுலயும் ஒரு பாய் இருக்காங்க. அவரு வீட்டுலயும், அவர் வீட்டு மாடியிலயும் போய் நாலஞ்சு போலீஸ்காரரங்க, "இங்க வந்தாரா... பாத்தீங் களா?''ன்னு கேட்டு விசாரிச்சிருக்காங்க. அதுல அவங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் வேற! "நீங்க ஒங்க வீட்டு ஜன்னல் வழியா பாருங்க, ஆளு வந்துட்டுப் போற நடமாட்டம் இருந்தா சொல்லுங்க'ன்னு.

எதுத்த மாதிரி இருக்கிற அந்த கல்யாண மண்டபத்துல ஆள் போட்டு ருக்காங்க. இந்தப் பக்கம் ஆள் போட்டு ருக்காங்க. இவர்ட்டயும் சொல்லிட்டு வராங்க.

நான் வந்தது ராத்திரி... அதுலயும் இருட்டுக்குள்ளதான் வந்தேன். அதனால இவங்க என்ன பாத்திருக்க வாய்ப்பு இல்ல. இருந்தாலும்.. அவங்கள மாரலா டிஸ்டர்ப் பண்ணி, ஒரு பரபரப்பு வந்தவுடனே... "டக்'னு பத்திரிகைக்காரங்க எல்லாருக்கும் தகவல் போயிருது, "நக்கீரன் கோபால அரெஸ்ட் பண்ணியாச்சு'ன்னு...!?

(புழுதி பறக்கும்)