ss

(337) சந்தேகம் கிளப்பிய கால்!

போர்க்களத்தின் இறுதிக்கட்டம்.

Advertisment

22-9-2016 அன்னிக்கு ராத்திரி ஜெயலலிதா அம்மையாரை அப்பல்லோவுக்கு கொண்டு போறதுக்கு முன்னாடி நாம கேள்விப்பட்டது.

மேடத்துக்கு டெல்லியில இருந்து அவரோட நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர்கிட்டயிருந்து தகவல் வந்துச்சாம். "இந்த வழக்குல இருந்து நாம தப்பிக்க முடியாது. அதேநேரம் இந்த வழக்க ரொம்ப நாளு நீட்டிக்கவும் முடியாது''ன்னு.

நீட்டிக்க முடியாதுன்னா, அவங்க பெயில்ல தான இருந்தாங்க. சொத்துக் குவிப்பு வழக்குல குமாரசாமி விடுதலை பண்றாரு. அத எதிர்த்து கர்நாடகா கவர்மெண்ட்டே அப்பீல் போகுது. அப்பீல் போனதுல... அத அப்படியே நீட்டிக் கிட்டே போறாங்க. அது ஒரு கட்டத்துல டி.குன்ஹா கீழ் கோர்ட்ல குடுத்த தீர்ப்ப உறுதிப் படுத்துற மாதிரி வருதுங்கிற செய்தி, ஜெயலலிதாவோட வழக்கறிஞருக்கும், முக்கிய பொறுப்பு கள்ல இருக்கிறவங்களுக்கும் தெரியவருது.

Advertisment

அவங்க உடனே ஜெயலலிதாகிட்ட சொல்றாங்க, "அம்மா இனிமே இந்த வழக்குல பெயில நீட்டிக்க முடியாது. குன்ஹா தீர்ப்ப எப்படியும் உறுதிபண்ணிருவாங்க போல தெரியுது.''

உடனே இந்தம்மா ஏகத்துக்கும் அப்செட். ஏன் அப்செட்டுன்னா... நாலு வருஷம் ஜெயிலு. நாலு வருஷம்னா 1460 நாள் ஜெயில்ல களி திங்கணும். சும்மாவா... அவங்களோட வாழ்க்கை முறைங்கிறது மகாராணி வாழ்க்கை முறை. நம்மள மாதிரி சாதாரண வாழ்க்கை முறையே கிடையாது. மகாராணியே அப்படி வாழ்ந் திருப்பாங்களான்னு தெரியாது. ஏன்னா... அப்ப மகாராணி வாழ்ந்துக்கிட்டிருக்கும் போது டெக்னாலஜி இந்த அளவுக்கு வளர்ச்சி எல்லாம் கிடையாது. ஆனா அவங் களவிட ஒரு மிகப்பெரிய லக்சூரி வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதாவது அவங்க பயன்படுத்துற எல்லா பொருட்களுமே எக்ஸ்குளூஸிவ்வா இருக்கும். அது உண்ணுற உணவா இருக்கட்டும்... குளியலறையில கிளாசெட்டா இருக்கட்டும்... அவங்களுக்குன்னு ஸ்பெஷலா கம்பெனி தயாரிக்குமாம். இது ஜெயில்ல இருக்காதுல்ல... அதேமாதிரி பன்னீர் குளியல்... சாத்தியமே இல்ல!

பரப்பன அக்ரஹாரத்துல இருந்து வந்த செய்தி என்னன்னா? அங்க அந்தம்மா 27 நாளு இருந்தப்போ, அவங்க டி.ஐ.ஜி. ரூம பயன்படுத்து னாங்கன்னு செய்தி வந்துச்சு.

Advertisment

as

உங்களுக்கு ஞாபகம் இருக்கா... தீபான்னு ஒரு அதிகாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.யா இருந்தவங்க. "சசிகலா 2 கோடி ரூபாய கையூட்டா குடுத்ததை யும்,. ஒவ்வொரு நாளும் ரொம்ப தாராளமா கடைகளுக்கெல்லாம் நட்ர்ல்ல்ண்ய்ஞ்-க்கு வெளிய போயிட்டு வருவாங்க' அப்படீங்கிறதையும் கண்டுபுடிச்சாங்க. அப்ப பரப்பன அக்ரஹாரத் துலயே அவங்க சௌகரியமா இருந்தது டி.ஐ.ஜி. ரூம்லதான். இதெல் லாம் மனசுல வச்சு இந்த 4 வருஷம் ஜெயில்ங்கிறத... அந்தம்மா எப்படி ஏத்துக்கும்?

அந்தம்மா முடிவெடுக்குது. எந்தெந்த உணவையெல்லாம் டாக்டர்ஸ் சாப்புடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களோ... உதாரணத் துக்கு இந்த ஐஸ்க்ரீம்... வெனிலா ஐஸ்க்ரீம்... காக்கடா ஜிலேபி, இப்படி நெறைய வெளியில சொல்ல முடியாத சில சாப்பாடு விஷயங்கள் எல்லாத்தையும் தீர்ப்பு மேல வந்த கோபத்துல அந்தம்மா சாப்பிட ஆரம்பிச்சுது. அப்படி சாப் பிடுறப்பதான் ஜெலலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையில சண்டை வருது.

எப்படி சண்டைன்னா...? அக்கா கண்டதை யும் சாப்புட்டு, தன் உயிருக்கு அவங்களே வினை வைக்கிறாங்களேன்னு சசிகலா தடுக்குறப்பதான்... "இல்ல... நான் சாப்புடுவேன்'னு ஜெயலலிதா சொல்ல, இப்படி அவங்களுக்குள்ள சாப்பாடு விஷயத்துலதான் சண்டையெல்லாம் வந்திருக்கு. வேற எந்த சண்டையும் இல்ல.

அப்ப சிலபேரு சொன்னாங்க. சசிகலாதான், அம்மாவ அடிச்சுத் தள்ளிட்டாங்க. அந்தம்மா தான் ஜெயலலிதா உயிருக்கு ஆபத்த விளைவிச் சாங்கன்னு. அது எல்லாம் பொய். ஜெயலலிதா உயிருக்கு ஜெயலிதாவே வினை வச்சுருச்சு.

"இந்த மாதிரி உணவுகள எல்லாம் சாப்புடாதீங்க அக்கா, இது உங்க உடம்புக்கு நல்லது இல்ல'ன்னு சசிகலா போய் தடுத்திருக்காங்க.

"நான் அப்படித்தான் சாப்பிடுவேன்''னு சொல்ல... ரெண்டுபேருக்குள்ள தகராறு.... வாய்ச்சண்டை. இதனாலதான் ஜெயலலிதாவோட சுகர் லெவல் குண்டக்க மண்டக்க கூடியிருக்கு. அதையெல்லாம் பொருட்படுத்தாம ஜெயலலிதா உணவுகள எடுத்துக்கிட்டதுனாலதான்... அந்த மயக்கம்லாம் வந்திருக்கு. அப்புறம்தாம் அப்பல்லோவுலே அட்மிட் ஆனது எல்லாமே.

"ஜெ.' -அப்பல்லோ பற்றி நாம தனிப் புத்தகமே போட்டுருந்தோம். அப்பல்லோவில் நடந்தத இன்ச் பை இன்ச்சா எல்லாத்தையுமே சொல்லியிருப்போம்.

இன்னொரு விஷயத்தையும் நாம சொல்லியிருப்போம். அதாவது... ஜெயலலிதா கடைசி காலத்துல அப்பல்லோவுல போய் இருந்தாங்க இல்லியா... அதுக்கு முன்னாடி அவங்கள எந்த மருத்துவமனையில அட்மிட் பண்ணுனாங்கன்னு இதுவரைக்கும் எந்தப் பதிவுமே இருக்காது. 1990ல அவங்க தேவகி ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருப்பாங்க. "ஒரு லாரிய ஏத்தி என்ன கொல்ல வந்தாங்க'ன்னு சொல்லி ஒரு டிராமா பண்ணுனாங்க. அப்ப ராஜீவ்காந்தில்லாம் வந்து பாத்துட்டுப் போனாரு.

அந்தம்மா இறந்தது 2016ல. அதுக்கு முன் னாடி அந்த இடைப்பட்ட காலத்துல கிட்டத்தட்ட 26 வருஷமா.... அவங்க மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகியிருக்கமாட்டாங்க.

"என்ன சார் இப்படிச் சொல்றீங்க?''ன்னு கேப்பீங்க.

ஆனா உடம்புல அவங்களுக்கு ஆயிரம் கோளாறு இருக்கும்.

"ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'ன்னு நீங்க கேப்பீங்க...

போயஸ் கார்டன்லயே ஒரு ஆஸ்பத்திரி செட்டப் இருக்கும். ஐ.சி.யு. செட்-அப்பே இருக்கும். அதே மாதிரி கொடநாட்டுலயும் ஐ.சி.யு. செட்டப்ல ஆஸ்பத்திரி. அதே மாதிரியே சிறுதாவூர்ல. மருத்துவத்துறையில இருக்கிற பெரிய பெரிய டாக்டர்கள்லாம் அந்தந்த பங்களாக்களுக்குப் போய்தான் அவங்களுக்கு சிகிச்சை பண்ணுவாங்க.

இப்ப அப்பல்லோ. அப்பல்லோவுல சிகிச்சை முடிஞ்சு 2016 டிசம்பர் 5ந் தேதி அந்தம்மா இறந்த விஷயத்துக்கு வருவோம். ஜெயலலிதா 4-ந் தேதி இறந்ததா ஒரு டி.வி.ல சொல்லிட்டாங்க. தந்தி டி.வி.தான். அண்ணன் பாண்டேதான் சொன்னாரு. மறுநாள் மறுபடியும் 5-ந் தேதி இறந்ததா சொன்னாங்க. எது எப்படியோ 5-ந் தேதி நைட்டு 11:40க்கு ஒருவழியா டிக்ளேர் பண்ணிட்டாங்க. அந்தம்மா இறந்தது 4-ஆம் தேதியா... 5ஆம் தேதியா...? அப்பல்லோகாரனுக்குத்தான் வெளிச்சம்.

6-ந் தேதி காலையிலேயே நான் அலுவலகத் துக்குப் போயிட்டேன். அசோக்னு ஒரு தம்பி அப்ப போட்டோகிராபரா இருந்தாரு. போட்டோகிரா பர் ஸ்டாலின், அசோக் எல்லாரும் "ஜெ.' உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால்லதான் இருந்தாங்க. எனக்கு போட்டோ அனுப்புறாங்க. நான்தான் நக்கீரனுக்கு அந்தம்மா இறந்தத வச்சு ஒரு அட்டைப் படம் பண்றேன். உடனே பத்திரிகை வெளிவருது.

அடுத்த நாள் காலைல "தந்தி' பேப்பர்ல கால்பக்க விளம்பரம் ஒண்ணு இருந்தது. தந்தியில அவங்களே வெளியிட்டிருந்தாங்க. அதாவது ஒரு பெரிய படம். இறுதி ஊர்வலத்துக்கு ஜெயலலிதாவ வச்சிருந்த பெட்டிய தூக்கிட்டுப் போவாங்கள்ல... அப்படி தூக்குறது மாதிரி... ஒரு பெரிய கிரவுடுக்கு நடுவுல இருக்கிறது மாதிரி ஒரு படம் போட்டு செய்தி போட்டுருந்தாங்க.

நான் காலையில ஆபீசுக்கு வந்தவுடனே அந்த பேப்பர பாத்தேன். திரும்பவும் அந்தப் பேப்பர உத்துப் பாத்தேன். ஏன்னா... அவங்க போட்டுருந்தது கால்பக்க படம். அதுல அவங்க என்ன க்ளெய்ம் பண்ணிருந் தாங்கன்னா, "நாங்கதான் முதல்ல சொன்னோம்' அப்படீன்னு தந்தி க்ளெய்ம் பண்ணிருந்தாங்க. நான் அந்தப் படத்த திரும்பவும் பாத்தேன்... உடனே நான் சீனியர் சிஸ்டம் ஆபரேட்டர் தம்பி கணேசன கூப்பிட்டு, "கணேசா, இந்தப் படத்த ஸ்கேன்பண்ணி என்லார்ஜ் பண்ணு''ன்னு சொன்னேன். அப்ப கணேசன் என்ன சொன்னாரு, "இல்லண்ணே... இந்தப் படத்த கவர்மெண்டே நமக்கு அனுப்பியிருக்காங்க''ன்னு சொன்னாரு. "அப்படியா, அந்தப் படத்த ஓபன் பண்ணு''ன்னு சொல்லி, அந்த ஜெயலலிதாவ வச்சிருந்த பாக்ஸ என்லார்ஜ் பண்ணச் சொன்னேன்.

என்லார்ஜ் பண்ணுனத பாத்தா... ஒரே அதிர்ச்சி!

உடனே, "கணேசா... படத்துல பாரு, காலயே காணோம''ய்யா அப்படீன்னு சொல்றேன்.

அப்ப மறுபடியும் படத்த என்லார்ஜ் பண்ணிப் பாத்துட்டு, "ஆமாண்ணே... கால் இல்லியே...'' அப்படீன்னாரு.

மறுபடியும் அது சம்பந்தமான படங்கள எல்லாம் பாக்குறோம். ஜெயலலிதாவ அடக்கம் பண்றதுக்கு முன்னாடி கவர்னர் ரோசய்யா போடுற மலர்வளையம் பாத்தீங்கன்னா... அந்தப் பெட்டியில... "பொத்'னு காலுக்கு கீழ உள்ள போகும்.

மொத்த படம் எல்லாத்தையும் எடுத்துப் பாத் தோம். அதுக்கான கலெக்ஷன் நம்மகிட்ட இருந்தது. அந்த மாலை.... அந்தப் பெட்டிக்குள்ள மாலை வந்து தொடைக்கு கிட்டக்கப் போயி தொடைய ஒட்டி சரிஞ்சு விழும். அதாவது ரெண்டு தொடைக்கு கீழ அப்படியே கட் பண்ணியிருக்காய்ங்க படுபாவிங்க.

அதப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி... பேரதிர்ச்சி! அதேநேரம் ஒரு கோவம் வேற. ஏன்னா...? தமிழகத்த ஆண்ட ஒரு முதலமைச்சர். அவங்க நல்லவங்க, கெட்டவங்க...ன்னு அதுக்குள்ள நான் போகல. ஒரு முதல்வருக்கு குடுத்த சிகிச்சையில ஏன் இவ்வளவு ஒளிவு மறைவு. ஏன்னா ஒரு உயிர காப்பாத்துறதுக்காக எதுவேணாலும் பண்ணி யிருக்கலாம்... கால கட் பண்ணியிருக்கலாம் எல்லாம் இருக்கலாம். வெளிய சொல்லியிருக்கலாம்ல. ஏன் மறைக்கணும்? எவனுக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டாய்ங்க... நம்மகிட்ட மாட்டிக்கிட்டாங்க. அத நாம வெளிய சொல்லணும் அப்படீங்கிறதுக்காக கணேசன்ட்ட கேட்ட அந்த கேள்விதான் ஞாபகத்துக்கு வருது.

"காலு எங்க கணேசா... காலையே காணோமே?'' அப்படீன்னேன்.

"போர்க்களம்' அடுத்த இதழில் முடிவுக்கு வரும்!