Advertisment

பரிதவித்த பத்திரிகையாளர் குடும்பம்! ஆதரவுக் கரம்கொடுத்த அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்!

55

ழைக்கும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஓய்வூதியத் தொகையை 10,000லி-ருந்து பன்னிரண்டாயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது,

Advertisment

பத்திரிகையாளர்களுக்கு என ஓய்வூதியம் உட்பட பல்வேறு சலுகைகள் அரசு திட்டத்தில

ழைக்கும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஓய்வூதியத் தொகையை 10,000லி-ருந்து பன்னிரண்டாயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது,

Advertisment

பத்திரிகையாளர்களுக்கு என ஓய்வூதியம் உட்பட பல்வேறு சலுகைகள் அரசு திட்டத்தில் இருந்தும்கூட அதைப் பெறமுடியாமல் தத்தளிக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய உள்ளனர். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின், ஓய்வுபெற்ற, நலிவடைந்த 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மீது தி.மு.க. அரசு கொண்டுள்ள அக்கறை பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

;;

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சம்பவம் நெய்வேலியில் நடைபெற்றது. நெய்வேலி பகுதியில் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ரமேஷ். பத்திரிகை பணியோடு அப்பகுதியில் நலிவடைந்த நிலையில் அரசு உதவித் திட்டங்கள் கிடைக்காமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைப்பதற்கு எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் களப்பணி ஆற்றியவர். ரமேஷ், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அவரது மனைவி, பிள்ளைகளை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது.

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வி. கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர், ரமேஷின் மகன் சங்கரிடம் 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.

அதேபோல் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் 25,000 ரூபாய் அளித்து உதவி செய்ததோடு ரமேஷ் பிள்ளைகளின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டு படிக்கவைப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் ரமேஷ் குடும்பத்திற்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளார்.

nkn030623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe