பலி வாங்க காத்திருக்கும் பரிதாபக் குடியிருப்புகள்! -முன்னெச்சரிக்கை ரவுண்ட்ஸ்-அப்

hh

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் வசித்தவர்கள் இன்னும் உயிர்பிழைத்த வியப்பிலும், கொஞ்சம் தாமதமாகியிருந்தால் நம் கதி என்னவாகி யிருக்கும் என்ற பீதி யிலும் இருக்கிறார் கள்.

இங்கு ஏ, பி, சி, டி என 7 பிளாக்குகளில் 4 மாடிகளுடன் 366-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 28 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் குடியிருப்புகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கட்டடம் இடியக்கூடுமென்ற அச்சத்தில் 27-ஆம் தேதி விடியற்காலை, டி பிளாக்கில் வசித்தவர்கள் வீட்டைவிட்டு வெளியில்வந்த சில மணி நேரத்தில் அதிலிருந்த 24 வீடுகளும் சீட்டுக்கட்டு போல சரிந்துவிழுந்து தரைமட்டமாகின.

hh

தங்கள் கண்முன்னே வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள், நகை, பணம் என அனைத்தும் இடிபாடுகளில் சிக்கியதைக் கண்டு

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் வசித்தவர்கள் இன்னும் உயிர்பிழைத்த வியப்பிலும், கொஞ்சம் தாமதமாகியிருந்தால் நம் கதி என்னவாகி யிருக்கும் என்ற பீதி யிலும் இருக்கிறார் கள்.

இங்கு ஏ, பி, சி, டி என 7 பிளாக்குகளில் 4 மாடிகளுடன் 366-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 28 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் குடியிருப்புகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கட்டடம் இடியக்கூடுமென்ற அச்சத்தில் 27-ஆம் தேதி விடியற்காலை, டி பிளாக்கில் வசித்தவர்கள் வீட்டைவிட்டு வெளியில்வந்த சில மணி நேரத்தில் அதிலிருந்த 24 வீடுகளும் சீட்டுக்கட்டு போல சரிந்துவிழுந்து தரைமட்டமாகின.

hh

தங்கள் கண்முன்னே வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள், நகை, பணம் என அனைத்தும் இடிபாடுகளில் சிக்கியதைக் கண்டு மக்கள் கதறியழுதனர். ஆனாலும் உயிர்ச்சேதம் எதுவுமில்லாமல் போனதே என்பது ஆறுதல்தான்.

இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், அப்பகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில்சென்று ஆய்வுசெய்து அப்பகுதி மக்களுக்கு உடன டியாக அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்தனர். திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக மாற்று வீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இடிந்து விழுந்த குடியிருப்புவாசிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல, தமிழ் நாடெங்கும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட மற்ற குடியிருப்புகளையும் உடனடியாக ஆய்வு செய்து அதனைச் சீரமைக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

திருவொற்றியூர் போன்று சென்னையில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட பழமையான வீடுகள் என்ன நிலையிருக்கிறதென ஒரு ரவுண்ட்ஸ் கிளம்பினோம். அப்போது நம் கண்ணில் பட்டவையும், நம்மிடம் முறையிட்டவர்களின் குரலும் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நுங்கம்பாக்கம் புஷ்பா நகர், எழும்பூர், திருவான்மியூர், அயனாவரம் மார்க்கெட் பின்புறமுள்ள குடி யிருப்பு, ஆவடி சாலையிலுள்ள அம்பேத்கர் குடியிருப்பு என பழைய கட்டடங்களும், புதிய கட்டடங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன.

பட்டினப்பாக்கத்தில் 50 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட குடியிருப்பில் 40 வீடுகள் உள்ளன. இந்த கட்டடமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் பாரதி என்பவர், “"படியில் நடந்தாலோ, வீட்டில் குழந்தைகள் விளையாடினாலோ அதற்குக் கீழேயிருக்கும் வீட்டில் மேற்பூச்சு இடிந்துவிழும். அப்படி ஒருவருக்கு மண்டையிலும் விழுந்துள்ளது. 163-ஆம் எண்ணுள்ள வீட்டில், பள்ளி செல்லும் குழந்தை இரவில் தூங்கிக் கொண்டி ருந்தபோது மேற்கூரை விழுந்து கை உடைந்து விட்டது. இரண்டு வீடுகள் சேதமாகியிருக்கின்றன. இதைப்பற்றி இரண்டு வருடமாக திரும்பத் திரும்ப தெரிவித்தும் எங்களுக்கு மாற்று வீடே கொடுக்கவில்லை''’ என்றார்.

hh

நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில்... வீடுகள் விரிசல் விழுந்தும், செங்கற்கள் ஒன்றுக்கொன்று பிடிமானம் இல்லாமலும் தொட்டால் உதிரும் சூழ்நிலையில் உள்ளன. அயனாவரத்தில் கட்டடம் கட்டப்பட்டு 40 வருடமாகிறதாம். “"மழைக் காலங்களில் எங்களின் நிலை கடவுளுக்குத்தான் தெரியும். அதிகாரிகளிடம் கேட்டால் இதோ இரண்டு மாதத்தில் சீரமைக்கப்படும் என்று பத்தாண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சீரமைத்ததுபோல கணக்குக் காட்டி பணத்தை மட்டும் லவட்டிக்கிறாங்க. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு மீண்டும் புது வீடு கட்டித் தரவேண்டும்''’என்றார்கள் அயனாவரம் மேரியும், அழகேஸ்வரியும்.

ஆவடி சாலை அம்பேத்கர் நகரிலுள்ள கட்டடம் 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் அஸ்திவாரமே ஆடிப்போய் உள்ளது. இந்த கட்டடம் முழுவதுமே பீச் மணலும் ஆற்று மணலும் கலந்து கட்டப்பட்டதாம். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

"ஏழைகளுக்காக கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில் பாதியை மட்டுமே செலவழித்து கட்டடம் கட்டினால் இப்படித்தான் நடக்கும்'' என்கிறார்கள் அரசுக் குடியிருப்புகள் கட்டுமானத்தில் எப்படி வேலை நடக்கும் என்ற விவரம் தெரிந்தவர்கள்.

படங்கள்: குமரேஷ்

nkn010122
இதையும் படியுங்கள்
Subscribe