"ஹலோ தலைவரே, இங்கிருக்கும் தி.மு.க. அரசுக்கு எப்படி குழி வெட்டறதுன்னு இந்துத்துவா சக்திகள் பரபரக்கும் நேரத்தில், தமிழக அமைச்சர் ஒருவரே மண் வெட்டியைக் கையில் எடுத்திருக்கார்''”
"நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுதுப்பா''”
"ஆமாங்க தலைவரே... தமிழகத்தில் எப்படியாவது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திடணும்னு டெல்லி ஜரூரா களமிறங்கியிருக்கு. சென்னை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க. மீது வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டுப் போயிருக்கார். இப்படிப்பட்ட நேரத்தில், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழாவில் மைக் பிடித்த அமைச்சர் பொன்முடி, சைவ-வைணவ மதங்களின் குறியீடுகளை, விலைமாதரின் உரையாடலோடு ஒப்பிட்டு ஆபாசமாகப் பேசி, பதட்டத் தீயைப் பற்ற வச்சிருக்கார். இதையறிந்து முதல்வர் ஸ்டாலின் ஷாக்கான நிலையில், கனிமொழி எம்.பி.யிடமிருந்து பொன்முடிக்கு எதிராகக் கண்ட னக் கணை புறப்பட்டது. போதாக்குறைக்கு கொந்தளிப் போடு ஸ்டாலினை சந்தித்த துணைமுதல்வர் உதய நிதி,’தன் வயதுக்கும் அனுபவத்துக்கும் மீறி பொன் முடி இப்படிப் பேசலாமா? அவர் பேசியது அநாகரிகத்தின் உச்சம். ஏற்கனவே நாம் இந்து மதத்துக்கு எதிராக இருப்ப தாக எதிரிகள் சித்தரிக்கிறார் கள். இதில் இந்தக் கொடுமை வேறா? எனவே உட னடியாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள்’என்று காட்டமாகவே சொன்னாராம்.''”
"ஆமாம்பா, மற்றொரு சீனியர் அமைச்ச ரான துரைமுருகனும் இந்த சமயத்தில் இதே போன்ற இன்னொரு சிக்கலை உண்டாக்கி யிருந்தாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொன்முடி சம்பவத்துக்கு சிலநாள் முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளைத் தவறான சொல்லால் குறிப் பிட்டு கடும் விமர்சனத்தை சந்தித்தார். இதனால் ஏற்கனவே அப்செட்டாகி இருந்தார் ஸ்டாலின். அந்த நேரத்தில் பொன்முடியின் ஆபாசப் பேச்சு பற்றிய தகவல் வந்ததால்தான், அவர் கடும் கோபமடைந்தாராம். எனவேதான் இந்த அதி வேக நடவடிக்கை என்கிறார்கள். பொன்முடி யிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை, திருச்சி சிவா எம்.பி.யிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின
"ஹலோ தலைவரே, இங்கிருக்கும் தி.மு.க. அரசுக்கு எப்படி குழி வெட்டறதுன்னு இந்துத்துவா சக்திகள் பரபரக்கும் நேரத்தில், தமிழக அமைச்சர் ஒருவரே மண் வெட்டியைக் கையில் எடுத்திருக்கார்''”
"நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுதுப்பா''”
"ஆமாங்க தலைவரே... தமிழகத்தில் எப்படியாவது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திடணும்னு டெல்லி ஜரூரா களமிறங்கியிருக்கு. சென்னை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க. மீது வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டுப் போயிருக்கார். இப்படிப்பட்ட நேரத்தில், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழாவில் மைக் பிடித்த அமைச்சர் பொன்முடி, சைவ-வைணவ மதங்களின் குறியீடுகளை, விலைமாதரின் உரையாடலோடு ஒப்பிட்டு ஆபாசமாகப் பேசி, பதட்டத் தீயைப் பற்ற வச்சிருக்கார். இதையறிந்து முதல்வர் ஸ்டாலின் ஷாக்கான நிலையில், கனிமொழி எம்.பி.யிடமிருந்து பொன்முடிக்கு எதிராகக் கண்ட னக் கணை புறப்பட்டது. போதாக்குறைக்கு கொந்தளிப் போடு ஸ்டாலினை சந்தித்த துணைமுதல்வர் உதய நிதி,’தன் வயதுக்கும் அனுபவத்துக்கும் மீறி பொன் முடி இப்படிப் பேசலாமா? அவர் பேசியது அநாகரிகத்தின் உச்சம். ஏற்கனவே நாம் இந்து மதத்துக்கு எதிராக இருப்ப தாக எதிரிகள் சித்தரிக்கிறார் கள். இதில் இந்தக் கொடுமை வேறா? எனவே உட னடியாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள்’என்று காட்டமாகவே சொன்னாராம்.''”
"ஆமாம்பா, மற்றொரு சீனியர் அமைச்ச ரான துரைமுருகனும் இந்த சமயத்தில் இதே போன்ற இன்னொரு சிக்கலை உண்டாக்கி யிருந்தாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொன்முடி சம்பவத்துக்கு சிலநாள் முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளைத் தவறான சொல்லால் குறிப் பிட்டு கடும் விமர்சனத்தை சந்தித்தார். இதனால் ஏற்கனவே அப்செட்டாகி இருந்தார் ஸ்டாலின். அந்த நேரத்தில் பொன்முடியின் ஆபாசப் பேச்சு பற்றிய தகவல் வந்ததால்தான், அவர் கடும் கோபமடைந்தாராம். எனவேதான் இந்த அதி வேக நடவடிக்கை என்கிறார்கள். பொன்முடி யிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை, திருச்சி சிவா எம்.பி.யிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த நீக்கல், நியமன அறிக்கைகளை பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு பதில் தன் பெயரிலேயே ஸ்டாலின் வெளியிட்டார். இதைப் பார்த்த துரைமுருகன் மிரண்டுபோய் விட்டார். அடுத்து, கட்சியின் பொதுச்செயலா ளர் பதவியிலிருந்து தன்னையும் ஸ்டாலின் நீக்கி விடுவாரோ என்று பதறிப்போன அவர், மாற்றுத் திறனாளிகள் குறித்த தன் பேச்சுக்கு பகிரங்க வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.''
"ஆபாசமாகப் பேசிய பொன்முடியின் அமைச் சர் பதவியும் ஊசலாடுகிறது என்கிறார்களே?''”
"பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து நீக்குவது சரியான தண்டனை இல்லை. அமைச்சர் பதவியிலிருந்து நீக்குங்கள் என பல் வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் அதிகரித்து வருவதால், பொன்முடியின் அமைச்சர் பதவி ஊசலாடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக முதல்வரின் குடும்பத்திலிருந்தும், வெளியில் இருந்தும் இதுபோன்ற அழுத்தங்கள் தரப் பட்டு வருகின்றன. அதற்கேற்ப உளவுத்துறை யினரும், மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களால் மகளிர் மத்தியில் தி.மு.க. ஆட்சிக்கு பெருகிய ஆதரவை, பொன்முடியின் ஆபாசப்பேச்சு தகர்த்துவருகிறது என்று முதல்வரிடம் ரிப் போர்ட் கொடுத்திருக்கிறதாம். இந்த நிலையில், பொன்முடியைக் கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் வருகிற 16ஆம் தேதி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள். இதெல்லாம் பொன்முடி யின் அமைச்சர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.''”
"அமைச்சர் நேரு தரப்பின் மீதான ஒன்றிய அரசின் இறுக்கமும் தளரவில்லை என்கிறார்களே?''
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் நேருவையும் அவரது சகோதரர்களையும் குறி வைத்து அண்மையில் அமலாக்கத்துறை நடத் திய அதிரடி ரெய்டுகள், பெரும் பரபரப்பை ஏற் படுத்தின. இந்த ரெய்டு தந்த அதிர்ச்சியால் அமைச்சரின் தம்பிகளில் ஒருவரான ரவிச்சந்தி ரன் நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமலாக்கத்துறையை அமைதிப் படுத்த, ஒன்றிய அரசின் புரோக்கர்களில் ஒருவ ரான ஈஷா மைய ஜக்கி மூலமே ஒரு முயற்சி நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை இது தொடர்பாக அணுகினர். எனினும் இந்த விவகாரத்தில் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாம். எக்காரணம் கொண்டும் நடவடிக் கைகளை நிறுத்தாதீர்கள்’ என்று அமித்ஷா சொல்லி விட்டதால், நேரு தரப்பிடம் ‘என்னாலேயே ஒன்றும் பண்ணமுடியவில்லை’ என்று சங்கடத் தோடு கைவிரித்துவிட்டதாம் ஜக்கி தரப்பு.''”
"இதே ஜக்கியின் ஈஷா மையத்தில்தான் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, மகா சிவ ராத்திரியில் பங்கேற்க பிப்ரவரி இறுதியில் கோவை ஈஷா மையத்துக்கு அமித்ஷா வந்த போது, ஜக்கி மூலம் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியை அழைத்தாராம். அவரிடம், ஒரு மாதத்தில் உங்கள் கட்சி, கூட்டணி பற்றி ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும். இல்லையென் றால், உங்கள் தரப்பு அடையும் சேதாரத்தை எவராலும் தடுக்கமுடியாது என்று எடப்பாடி யிடம் சொல்லிவிடுங்கள் என்று எச்சரித்தாராம். இதைத் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தங்களால் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித் திருக்கிறார் எடப்பாடி. இருந்தும், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தேர்தலில் கரையேறுவது கஷ்டம் என்று, பிடி கொடுக்காமலே அவர் நழுவப் பார்த்திருக்கிறார். இதன் பிறகு, சென்னை வந்த அமித்ஷா, தேர்தல் கமிஷன் தான் உங்கள் இரட்டை இலைச் சின்னம் பற்றி முடிவெடுக்கப் போகிறது. சின்னத்தை ஓ.பி.எஸ். தரப்பிடம் பறிகொடுக்க வேண்டாம் என்று நினைத்தால், எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று கடுமையாக நிர்பந்தம் கொடுத்திருக்கிறார். அவரது இந்த கடைசி அஸ்திரம்தான் எடப்பாடியை மண்டி யிட வைத்ததாம். இதைத் தொடர்ந்து, எங்கள் நிபந்தனைகளுக்கு நீங்களும் செவி கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம் எடப்பாடி. இதற்கு அமித்ஷாவிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்த பிறகுதான், தனது நிபந்தனைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டு சென்னை கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை அமைத் திருக்கிறார் எடப்பாடி.''”
"அமித்ஷாவிடம், எடப்பாடி வைத்த நிபந்தனைகள் என்னவாம்?''”
"எந்த நிபந்தனையும் இல்லாமல் கூட் டணியை உருவாக்கியிருக்கிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் சென்னையில் இருந்து டெல்லிக்குக் கிளம்பினார் அமித்ஷா. ஆனால், அ.தி.மு.க. தரப்போ, எடப்பாடி வைத்த ஒரு டஜன் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண் டார் என்கிறது. அதாவது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை ஏற்கும். அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனைகளில் பா.ஜ.க. தலையிடவே கூடாது. குறிப்பாக, சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகி யோரைக் கட்சியில் இணைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தக் கூடாது, சட்டமன்றத் தேர்தலில் 140-க்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடும். பா.ஜ.க.வுக்கான இடங்களை மட்டுமே நீங்கள் கேட்டுப்பெறலாம். தே.ஜ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை யே ஏற்கவேண்டும். அ.தி.மு.க.வினருக்கும் அவர் களது உறவினர்களுக்கும் எதிராக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகள் தொடரக்கூடாது. தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் தீவிர நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் கூட்டணி ஆட்சிக்கு நிர்பந்திக்கக்கூடாது ஆகியவைகளை எல்லாம் எடப்பாடி பட்டியல் போட, அமித்ஷா எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினார் என்கிறார்கள்.''”
"சென்னை வந்த அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டியதே?''”
"சென்னைக்கு வந்த அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை யில், அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். காவல்துறை அனுமதி தராத நிலையிலும்... இந்த ஆர்ப்பாட் டத்தை காங்கிரஸ் நடத்தியது. அந்தக் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மௌலானாவைத் தவிர எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. அவரும், போலீஸ் கைது நடவடிக்கை எடுக்கிறது என்று தெரிந்ததும், அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செல்வபெருந்தகை உள்ளிட்ட வர்களைக் கைது செய்த போலீஸ், ஒரு கட்டிடத்தில் மாலைவரை அடைத்து வைத்தது. பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டம் என்றாலே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கசப்பாகத்தான் இருக்கிறது என்கிற விமர்சனம் அவர்கள் மத்தியிலேயே இருந்தது.''”
"கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒருவர் அப்ரூவர் ஆகிறார் என்று ஒரு டாக் அடிபடுகிறதே?''”
"கொஞ்சம் விரிவாகவே சொல் றேங்க தலைவரே... அ.தி.மு.க. பிரமுகரும், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளருமான வடவள்ளி சந்திரசேகர், இப்போது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியதாக அறிவித்திருக்கிறார். இவர் வேலுமணி யின் வலதுகரமாக அறியப்பட்டவர். அதோடு, இந்த சந்திரசேகரும் அவர் மனைவி சியாமளாவும் அவரது பினாமியாகவும் இருப்பவர்கள். இடையில் வேலுமணி தரப் போடு ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையால், இவர்கள் அவர் தரப்பிடமிருந்து முரண்பட்டு நிற்கிறார்களாம். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், வேலுமணியின் சகோதரர் அன்பரசனும் இந்த சந்திரசேகரும் சேர்ந்து தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தங்க ளுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டின்படி, கொடநாடு பங்களா கொள்ளையை நடத்தி முடித் தார்களாம். அப்போது எதிர்பாராத வகையில் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறி, விவகாரம் பெரிதாகிவிட்டது. வேலுமணி, அன்பரசன் தரப்பின் மீது இப்போது ஏகக்கடுப்பில் இருக்கும் சந்திரசேகர், அந்த கொடநாடு வழக்கில் அப்ரூவர் ஆகிவிடும் மனநிலைக்கும் வந்திருக்கிறாராம். இதையறிந்து மிரண்டுபோன எடப்பாடியும், வேலுமணியும் வடவள்ளி சந்திரசேகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜரூராக இறங்கியிருக்கிறார்களாம்.''”
"நானும் காற்றுவாக்கில் எனக்கு வந்த செய்திகளைப் பகிர்ந்துக்கறேன். ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா சென்றபோது, தமிழக அமைச்சர்களுக்கு எதிராக, டெல்லியில் இருந்தபடியே தான் திரட்டிய ஊழல் ஆவணங்க யும் எடுத்துச் சென்றிருந்தாராம். அவற்றை ஆடிட்டிங் ரிப்போர்ட் மாதிரி நிரல்படுத்தி,’தி.மு.க. அரசின் ஊழல்கள்’என ஒரு கோப்பையே உருவாக்கி, அதை அமித்ஷாவிடம் கொடுத் திருக்கிறார் ஆடிட்டர். இதை வைத்து தி.மு.க.வுக்கு எதிரான மூவ்களை நகர்த்த டெல்லி பரபரப்பாகத் திட்டமிடுகிறதாம். இந்த நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர் பதவியைப் பறிகொடுத் திருப்பவர், மறுபடியும் அ.தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் எதையாவது பேசி, சிக்கலை உண்டாக்கிவிடக் கூடாது என்று அதட்டினாராம் அமித்ஷா. அதனால் அப்செட்டான அந்த நபர், மன அமைதிக் காக மூன்றுமாத காலம் ஹரித் துவார் சென்று தங்கப்போகிறா ராம்.”