"ஹலோ தலைவரே, ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் அள்ளிக் கொடுத்திருக்கார்.''”

Advertisment

"ஆமாம்பா, தமிழர் திருநாளுக்கான வெகுமதியை குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் அறிவிச்சிருக்காரே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக 3,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர். இவரது இந்த அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே தி.மு.க. அரசு கொடுத்து வரும் மகளிர் உரிமைத் தொகையால், பெண்களின் ஆதரவு தி.மு.க.வை நோக்கியே இருக்கும் நிலையில், தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத்தொகையால், ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சிப்  பொங்கல் பொங்க ஆரம்பித்திருப்பதாக முதல்வருக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதனால், அவரும் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த பரிசுத் தொகையால் தி.மு.க. அரசுக்கு 6,936 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். சில துறைகளில் நடப்பு நிதியாண்டில் பயன்படுத்தப்படாமல் இருந்த நிதி. இதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"பொங்கல் பரிசுத் தொகையாக 5,000 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தி னாரே?''”

Advertisment

"தலைவரே, அவர் பேருக்குதான் வலியுறுத்தி னார். வலியுறுத்திவிட்டு இதை தமிழக முதல்வர் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று அ.தி.மு.க. ஆதரவு அரசு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டி ருந்தார். அதிகாரிகளும், இருக்கிற நிதி நெருக்கடியில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று எடப்பாடிக்கு சொல்லி வந்தனர். அதனால், நிம்மதியாக இருந்தார் எடப்பாடி. இதையெல்லாம் அறிந்த ஸ்டாலின், அரசின் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி னார். அப்போது, நிதி நெருக்கடி எந்தளவுக்கு இருக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால், பொங்கல் பரிசுத் தொகையைக் கொடுத்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதிகாரிகள் தரப்பிலிருந்து  நிறைய புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, 1000 ரூபாய் வேண்டுமானால் அறி விக்கலாம் என நிதித்துறை தரப்பில் சொல்லப்பட்டது. இதை ஏற்க மறுத்த முதல்வர், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்; அதற்கு என்ன வழியோ அதை ஆராய்ந்து எனக்கு தெரி வியுங்கள் என ஸ்ட்ரிக்டாக உத்தரவிட்டிருந்தார். கடந்த 1 வாரமாக இது குறித்து மண்டையைப் போட்டுக் குடைந்துகொண்டிருந்த அதிகாரிகள், கடைசியாக அதற்காக வழிவகைகளைச் சுட்டிக் காட்டி, அப்படியொரு அறிவிப்புவரச் செய்திருக் கிறார்கள். இந்நிலையில், அடுத்த அதிரடியாக "உலகம் உங்கள் கையில்' என்ற பெயரில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கிய திட் டத்தை முடக்கியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட் டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த அறிவிப்பு கள் எடப்பாடியைத் திகைக்க வைத்திருக்கிறதாம்.''”

"தமிழகம் வந்து சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே?''”

"ஆமாங்க தலைவரே, ’"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா.ஜ.க. தலைவர் நயினார்  மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட் டம் பள்ளத்து வயலில் நடந்தது. அ.தி.மு.க.வினரும் இதில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையில் 24 ஆயிரம் சேர்கள் போடப்பட்டிருந்தன. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் கலந்துகொள்ள வில்லை. மாஜி மந்திரி வேலுமணி மட்டும் தலையைக் காட்டிவிட்டுச் சென்றார். அதேபோல் மாஜி மந்திரி விஜயபாஸ்கர் விமான நிலைய வரவேற்பில் தலையைக் காட்டிவிட்டு நகர்ந்துவிட் டார். இதையெல்லாம் கவனித்து அப்செட்டான அமித்ஷா, கூட்டத்தில் ஒரு இடத்தில்கூட எடப்பாடி பெயரை உச்சரிக்கவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் முடியவில்லை. தனது தமிழகப் பயணம் தோல்விப்பயணமாக மாறிவிட்டதை உணர்ந்த அமித்ஷா, மிகவும் வருத்தத்துடனேயே தமிழகத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். புதுக்கோட்டை நிகழ்ச்சிக்கு அடுத்ததாக, பாஜ.க. உயர்மட்ட  செயற்குழுவில் அமித்ஷா பங்கெடுத்தார். இரவு 11 மணிவரை கூட்டம் நடந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வில்லை, மாறாக எஸ்.பி.வேலுமணியை தனது தூதுவராக அனுப்பினார் எடப்பாடி. அமித் ஷாவை சந்தித்த வேலுமணி, எடப்பாடி சொல்லியனுப்பிய முக்கிய தகவலை அவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.'' 

"விஜய்யின் ஜனநாயகனுக்கு பா.ஜ.க. சென்சார் சர்டிபிகேட் தராமல் பிரச்சினை செய்கிறதாமே?''”

"சென்சார் சர்டிபிகேட் கேட்டு விஜய் தரப்பு டெல்லிக்கு மூவ் செய்தும் ஒன்றும் பதில் இல்லையாம். அவர் சார்பில் திரைத்துறையைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர்   எல்.முருகனை ஆதவ் அர்ஜுனா தொடர்புகொண்ட போது, "உங்கள் தரப்பு மீது கரூர் விவ காரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்துவரு கிறது. இந்த சிக்கலை முடிக்கவேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள். இல்லையென்றால் கஷ்டம்தான்' என்று சொல்லி விட்டாராம். இதேபோல் சிவகார்த்திகேயனின் "பராசக்தி' படத்தில் வரும் இந்தி எதிர்ப்புக் கோஷங்களையும் மாற்றச்சொல்லி, அதையும் பிடித்து வைத்திருக்கிறார்களாம். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"சரிப்பா, இரண்டு நாள் பயணமாக கடந்த 2ஆம் தேதி  இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறாரே?''”

rang1

"ஆமாங்க தலைவரே, அவரது நிகழ்ச்சிகளில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறியதாகச் சொல்கிறார்கள். சென்னைக்கு வந்த சி.பி.ஆரை வரவேற்க, பா.ஜ.க. தலைவர் நயினார் உட்பட அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் விமான நிலையத்தில் காத் திருந்தபோது, தி.மு.க. அரசின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப் பிரமணியன் ஆகியோர் அங்கே சென்றார்களாம். அப்போது, உதயநிதியைப் பார்த்ததும் அவரிடம் சென்று 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாராம் நயினார். இதை பா.ஜ.க.வினரே எதிர்பார்க்க வில்லையாம். அதேபோல், சி.பி.ஆரை வரவேற்க பா.ஜ.க. வினர் 2000 பேர் திரளவேண்டும் என பொறுப்பாளர் வினோஜ் செல்வத்திடம் சொல்லியிருந்தார் நயினார். ஆனால், 100-க்கும் குறைவானவர்களையே திரட்டியிருந் தார் வினோஜ். சி.பி.ஆரை வரவேற்க எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் வரவில்லை. விமான நிலையத்திலிருந்து ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்ள சி.பி.ஆர். காரில் ஏறியபோது, பின் சீட்டில் நயினார் ஏறிக்கொள்ள, சி.பி.ஆரின் பாதுகாவலர்கள் ஓடோடி வந்து, அவரை கீழே இறக்கிவிட்டிருக்கிறார்கள்.''”

"அப்புறம்?''”

"இதனால், அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாராம்   நயினார். அந்தக் கல்லூரி நிகழ்ச்சி முடிந்து, தாஜ் கோரமண்டலில் நடத்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் சி.பி.ஆர். இதில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். சி.பி.ஆரிடம் பேச பலரும் முயற்சித்தனர். ஆனால், வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சி.பி.ஆர். இந்த நிகழ்வில், கலந்துகொள்ள இளையராஜா ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அவரால் வரஇயலவில்லை. இதனை சி.பி.ஆரிடம் நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் தெரிவித்தனர். அதேபோல, இதில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க. தரப்பு அழைக்க, அவர் வர மறுத்துவிட்டார். இதில் பா.ஜ.க. தரப்பு அப்செட் ஆகியிருக்கிறது. மேலும், சி.பி.ஆரை வைத்து, உழைப்பாளர் சிலையிலிருந்து கலை வாணர் அரங்கம் வரை ரோட் ஷோவுக்கு பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு ஆட்களைத் திரட்ட முடியாததால் கடைசி நேரத்தில் ரோட் ஷோவை கைவிட்டது பா.ஜ.க. இப்படி நிறைய ஏடாகூடங்கள் நடந்திருக்கிறது.''

"ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோ ரோடு அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதே?''”

"இந்த இருவரின் முகத்திலும் விழிக்கமாட் டேன் என்று சொல்லிவருகிறார் எடப்பாடி. எனினும் கட்சியில் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும்  கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பா.ஜ.க. நெருக்கடி கொடுப்பதால், கட்சி நிர்வாகிகளை வைத்து வேண்டா வெறுப்போடு எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். தி.மு.க.வுடன் பேசிவந்த ஓ.பி.எஸ்.ஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவர் பா.ஜ.க. கூட்டணி அல்லது விஜய் கூட்டணியில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். டி.டி.வி. உள்ளிட்டவர்களை எப்படியாவது தங்கள் கூட்டணி கூட்ஸ் வண்டியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எடப்பாடியிடம் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறதாம் பா.ஜ.க.''”

’"நானும் என் காதுக்கு வந்த தகவலைப் பகிர்ந்துக்கறேன். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தரப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, ஸ்டாலின் 18 சதவீத வாக்குகளை யும், விஜய் 17 சத வாக்குகளையும், எடப்பாடி 14 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பொய்யான கருத்துக்கணிப்பு என்று சொல்கிறார்கள்.  இந்த திருநாவுக்கரசு கடந்த தேர்தலின்போது  பா.ஜ.க. மாஜி மாநிலத்தலைவர் கோவையில் ஜெயித்தே தீருவார் என்று அறிவித்து, தோல்வியைக் கவ்வியவர். எனினும் இந்த முறை தி.மு.க.  வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்று சொல்வதோடு, விஜய்யால் தி.மு.க.வுக்கு அதிக ஆபத்து என்றும் இவரது கருத்துக் கணிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.''’