Advertisment

பொங்கல் பரிசு! பொய் மூட்டை! - எடப்பாடி பிரச்சாரம் ஸ்டார்ட்!

cm

மிழ்நாட்டுக்கே முதல்வர் என்றாலும் எடப்பாடிக்கு தன் சொந்த மாவட்டமும் சொந்த தொகுதியும் எப்போதுமே ஸ்பெஷல்தான். சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளதால் அதனைத் தக்க வைப்பதில் கவனமாக இருக்கிறார். அதனால், அம்மா கிளினிக்குகள் திறப்பு விழாவுக்காக சேலம் வந்த முதல்வர், டிசம்பர் 19ல் திடீரென தன் சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிடம் கூட ஆலோசிக்காமல், முதல்வர் வேட்பாளரான எடப்பாடி காட்டும் வேகமும் வியூகமும் இலை கட்சிக்குள்ளேயே பரபரப்பைக் கூட்டியது.

Advertisment

cm

ஏசி வசதியுடன் கூடிய டெம்போ டிராவலர் வேன், விடிவதற்குள் தயார் செய்யப்பட்டு இருந்தது. தொகுதி முழுவதுமான வரவேற்பு ஏற்பாடுகள் ஜெ. ஸ்டைலிலேயே இருந்தன. தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் கும்பாபி ஷேக நிறைவு விழாவில் கலந்து கொண்டார். முந்தைய தேர்தல்களில்

மிழ்நாட்டுக்கே முதல்வர் என்றாலும் எடப்பாடிக்கு தன் சொந்த மாவட்டமும் சொந்த தொகுதியும் எப்போதுமே ஸ்பெஷல்தான். சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளதால் அதனைத் தக்க வைப்பதில் கவனமாக இருக்கிறார். அதனால், அம்மா கிளினிக்குகள் திறப்பு விழாவுக்காக சேலம் வந்த முதல்வர், டிசம்பர் 19ல் திடீரென தன் சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிடம் கூட ஆலோசிக்காமல், முதல்வர் வேட்பாளரான எடப்பாடி காட்டும் வேகமும் வியூகமும் இலை கட்சிக்குள்ளேயே பரபரப்பைக் கூட்டியது.

Advertisment

cm

ஏசி வசதியுடன் கூடிய டெம்போ டிராவலர் வேன், விடிவதற்குள் தயார் செய்யப்பட்டு இருந்தது. தொகுதி முழுவதுமான வரவேற்பு ஏற்பாடுகள் ஜெ. ஸ்டைலிலேயே இருந்தன. தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் கும்பாபி ஷேக நிறைவு விழாவில் கலந்து கொண்டார். முந்தைய தேர்தல்களில் இங்கிருந்து பிரச்சாரம் தொடங்கியதால் அமைச்சர், முதல்வர் எனப் பதவிகள் உயர்ந்த அந்த சென்ட்டிமென்ட்டும் இதில் அடக்கம். அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். வழிபாடு முடிந்தபிறகு, கோயில் திடல் அருகில் இருந்து சிறிது தூரம் வரை சாலையில் நடந்து சென்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியபடி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, செம்மலை எம்எல்ஏ, ஜெ., பேரவை இளங்கோவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முதல் வரிசையில் உடன் சென்றனர்.

அதன்பிறகு, திறந்த வேனில் ஹெட்செட் டுடன் ஏறிய எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.50 சதவீதம் உள்ஒதுக்கீடு, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுவான சாதனை களையும், எடப்பாடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார்.

Advertisment

cmm

தி.மு.க எம்.பி. கனிமொழி எடப்பாடியில் தொடங்கிய பிரச்சாரத்தின் தாக்கம் இ.பி.எஸ்.ஸை ரொம்பவே பாதித்திருந்ததை அவர் பேச்சு காட்டியது. எடப்பாடி சட்டமன்ற தொகுதி, அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை. 1977ல் அ.தி.மு.க. முதன்முதலில் இந்த தொகுதியில் வெற்றி பெற் றது. கடந்த 43 ஆண்டுகளாக இங்கே தி.மு.க. வென்றதாக வரலாறு கிடையாது. கனிமொழி மட்டு மல்ல... தி.மு.க.வின் ஒட்டு மொத்த தலைவர்கள் வந்தாலும் இந்த தொகுதி யில் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. என் பெய ரான பழனிசாமியை விட்டு விட்டனர். எல்லோரும் எடப்பாடியார் என்றுதான் சொல்கிறார்கள். தொகுதி யில் உள்ள அத்தனை பேருக்கும் இந்த புகழ் கிடைத்திருக்கிறது. நான் முதல்வர் பதவியை நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது'' என்றார் அதிரடியாக.

தொகுதி ர.ர.க்களிடம் பேசியபோது, எடப்பாடி தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்களைக் காட்டிலும் வன்னியர் வாக்குகள்தான் அதிகம். நங்கவள்ளி, பெரிய சோரகை, தாரமங்கலம் பகுதிகளில் வன்னியர்கள் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். அந்த சமூகத்தின் வாக்குகளை குறி வைத்து இங்கே நிறைய நலத் திட்டங்களை செய்திருக்கிறார்'' என்றவர்கள், பரப்புரையின் முதல் நாளிலிலேயே பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப் பதையும் முணுமுணுத்தனர். தி.மு.க தரப்பிலும் எடப்பாடி பிரச்சாரத்தின் பொய்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், ""இன்னும் நான்கு மாதம்தான் அவர் இப்படியெல்லாம் பேச முடியும். தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பாருங்கள்'' என பூடகமாக அதிரடித்தார்.

முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதி, ""எடப்பாடி தொகுதியின் தேர்தல் வரலாறு பற்றி முதல்வர் பழனிசாமி பச்சைப்பொய் சொல்கிறார். 1996 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில், தனது சொந்த தொகுதியிலேயே இதே எடப்பாடி பழனிசாமி மண்ணைக் கவ்வினார் என்பதை வசதியாக மறந்து விட்டு பொய் பேசி வருகிறார்.

cc

முதல்வர் பதவியை இறைவன் கொடுத்ததாக சொல்கிறாரே, அந்த இறைவன் சசிகலா என்பது உலகத்துக்கே தெரியும். அவரிடம் மண்டியிட்டு, தவழ்ந்து சென்று, ஊர்ந்து சென்றுதான் முதல்வர் பதவியை வாங்கினார் என்பதை மக்கள் மறந்து விட்டதாக நினைத்து ஏதோ ஏதோ வாய்க்கு வந்தபடி பொய் பேசுகிறார். 2ஜி வழக்கில் ஆ.ராசா மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்த பிறகும், தொடர்ந்து மேடைகளில் பொய் பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் பற்றியும் இப்படித்தான் பேசுகிறார். இதற்கெல்லாம் அவருக்கு விரைவில் பதிலடி கொடுப்போம்'' என்கிறார்.

''எட்டுவழிச்சாலைத் திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பெரும்பான்மையான விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக தொடர்ந்து பொய் பேசி வருகிறார் முதல்வர். அவர்கள் தொகுதியில் உள்ள விவசாயிகளான நாங்களே இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு சொந்த தொகுதியின் நிலவரம் கூடத் தெரியாமல் மூன்றாம்தர பேச்சாளர் போல பொய்களை அள்ளிவிடக்கூடாது'' என்கிறார்கள் எடப்பாடி தொகுதி விவசாயிகளும் வாக்காளர்களும்.

பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, பொங்கல் பரிசாக 2500 ரூபாய் தந்தால் தேர்தல் களத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறாரோ எடப்பாடி பழனிச்சாமி.

-இளையராஜா

nkn231220
இதையும் படியுங்கள்
Subscribe