பொங்கல் விழா! தலைவர்களின் பலவித கொண்டாட்டம்!

ss

ந்த ஆண்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துக் கட்சியினரும் தங்கள் கட்சி நிர்வாகி களோடு மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடினர். தி.மு.க.வினர் பொங்கல் திருநாளை சமத்துவப் பொங்கல் திரு நாளாக மதங்களைக் கடந்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும், ஜனவரி 11ஆம் தேதியே தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார்.

பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் பொங்கி மகிழ்ந்த முதல்வர், விழாவில் பேசும்போது, "பொங்கலையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். தமிழர்களுக்கென்று ஒரு விழா என்றால் அது பொங்கல்தான்” என்று சொன்னவர் பெரியார்'' எனப் பெரு மிதத்துடன் கூறினார்.

s

அடுத்ததாகப் பொங்கல் நாளன்று தமிழக முதல்வரும், தி.

அடுத்ததாகப் பொங்கல் நாளன்று தமிழக முதல்வரும், தி.மு.க. தலை வருமான மு.க. ஸ்டாலின் சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தனது குடும்பத்தினரோடும், கட்சியினரோடும் பொங் கலைக் கொண்டாடினார். அன்றைய தினம், தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அனைவருக்கும் பொங்கல் காசு வழங்கி மகிழ்ந்தார். அதேபோல், டி.ஆர்.பாலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கவிஞர் வைரமுத்து, சு.ப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் முதல்வரை முகாம் அலுவலகத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தனர்.

அதன்பின்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்ற முதல்வர், நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தி னார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொதுமக்களும் முதல்வருடன் கை குலுக்கி பொங்கல் வாழ்த்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை எனப் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளோடு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் திடலில் அமைக்கப் பட்டிருந்த 108 பொங்கல் பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தினை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் காரணமாக கிராமப் பொருளாதாரம் உயர்ந்து விளங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு பூஜ்ஜியம் மதிப் பெண்தான் பெற்றுள்ளது. இதற்கு முடிவுகட்டும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கும்'' என்றார்.

திண்டிவனத்தை அடுத்துள்ள கோனேரிக் குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் பொங்கலை கொண்டாடினார். அப்போது, செண்டை மேளத்துக்கேற்ப நடனமாடிய சிறுவனோடு சேர்ந்து ராமதாஸும் நடனமாடி ஆச்சரியப்படுத்தினார். விழாவில் பேசிய ராமதாஸ், "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்திற்கேற்ப தமிழன் தனக்கு பசி இருந்தாலும் பிறருக்கு உணவளித்து மகிழ்வான். அப்படி ஒரு சிறப்பை எடுத்துரைக்கும், தமிழர்களின் சிறந்த பண்டிகை தைப்பொங்கல்'' எனக் குறிப்பிட்டார். பொங்கல் நாளன்று, தைலாபுரத்திலுள்ள தனது வீட்டில் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், நாடாளுமன்ற உறுப்பினரான துரை. வைகோவும் அவர்களது சொந்தஊரான கலிங்கப்பட்டியில், கிராமத்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடினார்கள். த.வெ.க. தலைவர் விஜய் மட்டும் தனது கட்சியினரோடு பொங்கலைக் கொண்டாடாமல், விஜய்யின் மேலாளர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கலை கொண்டாடினார். இவ்விழாவுக்கு கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கீர்த்தி சுரேஷ், அவரது கணவர் ஆண்டனி, கதிர், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜு ஆகியோர் கலந்துகொண்டனர். விஜய் அரசியல் தலைவரான பிறகும் கட்சியினரை ஒதுக்கிவிட்டு நடிகர், நடிகையோடு பொங்கலைக் கொண்டாடியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

nkn220125
இதையும் படியுங்கள்
Subscribe