பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் 9 காம கொடூரன்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணி என்கிற மணிவண்ணன், பாபு, ஹரோனிமஸ் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும், கடந்த 2019ம் ஆண்டு கோவை மத்திய சிறையில்தான் முதலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் போராட்டம் வலுத்ததாலும், அந்த சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாதிக்கப் பட்ட பெண்களின் தரப்பைச் சார்ந்த கைதிகளால் இவன்களுக்கு அசம்பாவிதம் நேரக்கூடும் என்பதாலும், 2020ம் ஆண்டு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்தவாறே, வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகி வந்தனர். நாட்டையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பு நாளன்று காலை, சேலம் மத்திய சிறையி-ருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு 9 பேரும் அழைத்துச் செல்லப் பட்டனர். இவன்கள் அனைவ ருக்கும், சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு 9.30 மணியளவில் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். குற்றவாளிகளைப் பார்க்க பெற்றோர், உறவினர்கள் யாரும் வரவில்லை. 9 பேரும் தலையைத் தொங்க போட்டபடி அமைதியாக சிறைக்குள் சென்றனர்.

காமக் கொடூரன்கள் 9 பேருமே, சேலம் மத்திய சிறையில், ஹைசெக்யூரிட்டி பகுதியில், 'ஏ' பிளாக்கில் கீழ் தளத்தில் ஒரே செல்லில் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்ற கைதிகளால் இவன்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மத்திய சிறை எஸ்.பி., (பொறுப்பு) வினோத் மேற்பார்வையில் 2 தலைமை வார்டன்கள், 3 காவலர்கள் என 5 பேர் குழுவினர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

ஹைசெக்யூரிட்டி பிளாக்கில் மற்ற கைதிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற் காக வெளிப்புறத்தில் பூட்டு போடப் பட்டுள்ளது. சிறைத்துறையினர் தவிர, வேறு எவரும் உள்ளே சென்று அவன்களைப் பார்க்க முடியாது.

குற்றவாளிகளில் அருண்குமாருக்கு மே 14ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு, செல்லுக்குள்ளேயே மயங்கி விழுந்துவிட்டான். பதற்றமடைந்த சிறை வார்டன்கள் உடனடியாக அவனை, சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் ஹைசெக்யூரிட்டி பிளாக்கில் அடைக்கப்பட்டான்.

விசாரணைக் கைதிகளாக இருந்தபோது கலர் கலராக பல்வேறு உடைகளில் வலம் வந்த காமக்கொடூரன்கள் 9 பேருக்கும், மே 14ம் தேதி காலையில் தண்டனைக் கைதிகளுக்கு உரிய வெள்ளை நிற அரைக்கை சட்டையும், பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டது.

இதையடுத்து தண்டனைக் கைதி களுக்கான எண்ணும் வழங்கப்பட்டது. அதன்படி, சபரிராஜனுக்கு 148734, திருநாவுக் கரசுவுக்கு 150566, சதீஷூக்கு 148733, வசந்தகுமாருக்கு 148732, மணிவண்ணனுக்கு 155483, பாபுவுக்கு 303344, ஹரோனிமஸ் பாலுக்கு 303341, அருளானந்தத்துக்கு 303338, அருண்குமாருக்கு 356907 ஆகிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுவரை பெயர் சொல்லி அழைக்கப் பட்ட அவன்களை, இனிமேல் கைதி எண்ணைச் சொல்லியே அழைப்பார்கள்.

சேலம் மத்திய சிறையில் இதுவரை ஆயுள் தண்டனை பெற்றவர்களிலேயே இவன்களுக்குதான் சாகும் வரை ஆயுள் என்று அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். இப்படி ஒரு தீர்ப்பு வெளியான பிறகும்கூட அவன்களில் ஒருத்தனும் அழவோ, வருத்தப்படவோ இல்லையாம்.

salem

இது தொடர்பாக சேலம் மத்திய சிறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

''கடந்த 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக இருந்தபோதே தண்டனைக் கைதிகள் போல நடக்கத் தொடங்கி விட்டனர். தீர்ப்புக்கு சில நாள்கள் முன்னதாக அதுகுறித்து புலம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் தீர்ப்பு வெளியான பிறகு, அவனுங்க முகத்தில் எந்த ரியாக்ஷனுமே இல்லை.

Advertisment

இவனுங்களில் அருண்குமார், பாபு, அருளானந்தம் ஆகிய மூன்று பேரும் சபரிராஜன் உள்ளிட்ட மற்ற 6 பேரால்தான் தங்களுக்கும் தண்டனை கிடைத்ததாகவும், பொள்ளாச்சி சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் புலம்பிக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த 9 பேரும் இரண்டு பிரிவாக முரண்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக இந்த மூவருக்கும் சபரிராஜன் மீது கடும் அதிருப்தி உள்ளது.

"பொதுவாக ஆயுள் தண்டனை என்றாலே சாகும் வரை சிறையில் வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான் பொருள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுளும், திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. அவனுங்க பல பெண்களை நாசப்படுத்தியதால், குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தும் நோக்கில் பல ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கொடூர குற்றத்தைச் செய்த சபரிராஜன் உள்ளிட்ட 9 பேருக்கும் மற்ற தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற பரோல் விடுமுறை, நன்னடத்தை அடிப்படையிலான முன் விடுதலை போன்ற சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது. இவனுங்க சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்.

Advertisment

ஆயுள் மற்றும் நீண்ட கால தண்டனை பெற்றவர் களுக்கு சிறைக்குள்ளேயே வேலை வழங்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுக்கும் விரைவில் வேலைகள் ஒதுக்கப்படும்.

ss

இங்கு நீதிமன்ற புத்தகங் கள் பைண்டிங் செய்தல், கோப்பு களுக்கான அட்டை தயாரித்தல், நெசவு, சமையல் ஆகிய தொழில்கள் உள்ளன. இவனுங் களுக்கு பைண்டிங் மற்றும் கோப்பு அட்டைகள் தயாரிக்கும் பணிகள் ஒதுக்கப்படும். இந்த வேலைக்காக அவனுங்களுக்கு தினமும் 300 ரூபாய் கூலி வழங்கப்படும்.

ss

கைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 80 சதவீதத் தொகை கைதியின் கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள 20 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையைப் பெறு வது அல்லது நிராகரிப்பது என்பது பாதிக்கப்பட்ட தரப்பினரின் விருப்பத்தைப் பொருத்தது.

இவனுங்களுக்கும் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போல் தினமும் காலை, இரவில் பொங்கல், இட்லி, புதினா சாதம், கோதுமை ரவா உப்புமா ஆகிய டிபன் வகைகள் சுழற்சி முறையில் வழங்கப்படும். புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுடன் கோழிக்கறியும், வாரத்தில் ஒரு நாள் முட்டையும் வழங்கப்படும். தினமும் காலை, மாலையில் தேநீருடன் சுண்டலும் தரப்படும்,'' என்கிறது சேலம் மத்திய சிறை வட்டாரம்.

இது ஒருபுறம் இருக்க, சக கைதி களுக்குள்ளேயே மோதல் ஏற்படலாம் அல்லது மற்ற கைதிகளால் இவனுங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் விரைவில் அவனுங்களை 9 வேறு வேறு சிறைகளுக்கு இடமாறுதல் செய்து, தனித்தனியாக அடைக்க வும் உத்தேசித்துள்ளது சேலம் மத்திய சிறை நிர்வாகம்.

________________

'டிவி பைத்தியம்' சபரிராஜன்!

"காமக் கொடூரனான சபரி ராஜன், சரியான டி.வி. பைத்தியம் என்கிறார்கள் சிறைக்காவலர்கள். கைதிகளுக்கு வார விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் சிறை வளாகத்தில் உள்ள கேபிள் டி.வி. மூலமாக திரைப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. பத்தி ரிகைகள் மூலமாக எந்தெந்த சேனலில் என்னென்ன படங்கள் என்று தெரிந்துகொள்ளும் சபரிராஜன், தனக் குப் பிடித்த படத்தை போடுமாறு அடம் பிடிப்பானாம். அவன் கேட்ட சேனலை போடாவிட்டால், உடனே டிவி... டி.வி... டி.வி.... எனக் கத்தி கூச்சல் போடுவான் என்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படங்கள் என்றால் சபரிராஜன் விரும்பிப் பார்ப்பானாம். இதனால் ஆத்திரம் அடைந்த சிறைக்காவலர் ஒருவர், டிவி பார்க்கத்தான் நீ வந்தியா? போடா... என்று ஒருமையில் திட்டி விட்டாராம். தன்னிடம் மரியாதையின்றி பேசிய காவலரை மன்னிப்பு கேட்கச் சொல்லி, மூன்று நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி அலப்பறை செய்திருக்கிறான் சபரிராஜன்'' எனக் கடந்த கால அலப்பறைகளைச் சொல்கிறார்கள் சிறைக் காவலர்கள்.