ன்னொரு முறை இவ்வாறு நடக்க இயலாது. சரியான நேரத்தில் சரியான தீர்ப்பாக வந்திருக்கின்றது என பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு வந்த நிமிடத்திலிருந்தே இனிப்பு வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றது தமிழ் நாடு. இதில் பொள்ளாச்சி மக்களின் மன நிலை எப்படி இருக்கின்றது.? என்றறிய விரும்பினோம்.

ssபெயர், முகம் தவிர்த்து பேசிய பெண் அரசு ஊழியர் ஒருவரோ, " பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து வெளியான அழுகுரல் வீடியோ இங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் உள்ளத்தை ரணம் ஆக்கியது. எங்கேயாவது வெளியூர் சென்று இரவில் தங்குவதற்காக அறை கேட்டால், ஊர் பொள்ளாச்சி என்றாலே அறை கிடைக்காத சூழ்நிலை இருந்தது. ஏன், பொள்ளாச்சி பெண்களை திருமணம் செய்வதற்கு கூட அச்சப்பட்டார்கள்.

எங்கு சென்றாலும் தங்கள் சொந்த ஊர்ப் பெயரை சொல்வதற்கு கூட வெட்கப்பட்டு தலை குனிந்தார் கள் என்னை போன்ற பொள்ளாச்சி வாசிகள். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு நீதியரசர் வழங்கி உள்ளார்கள். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்வதற்கு நீதி மன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தாலும் உயர் நீதிமன்றம் சென்றாலும் கூட சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளி களுக்கு இனியும் அதிகபட்ச தண்டனைதான் கிடைக்க வேண்டுமே தவிர அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பித்து விடக்கூடாது என்று நினைக்கின்றோம்'' என்றார் அவர்.

ss

Advertisment

இது இப்படியிருக்க, பொள் ளாச்சி பாலியல் சம்பவ தீர்ப்பில் நீதிக்காக, நீதிக்கு துணை நின்ற நக்கீரன் இதழை வழக்கறிஞர் கீர்த்தி ஆனந்த் என்பவர் பொள்ளாச்சி வடசித்தூர் பகுதியிலுள்ள பெண்களிடம் இலவசமாக கொண்டு போய் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. சுந்தரம் லேஅவுட் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணிமாலாவோ, "நாங்கள் ஆறு வருடங்களாகக் காத்திருந்த காத் திருப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்த தீர்ப்பு, முதல்ல பாதிக் கப்பட்ட பெண்களுக்குதான் வாழ்த்து சொல்லுவேன். ஏன்னா அவங்கனால தான் இந்த வழக்கு எல்லாருக்கும் தெரிய வந்துச்சு, பாதிக்கப்பட்ட பெண்கள் என்று சொல் வதை விட வீரமங்கைகள் என்று தான் சொல்லணும். அவர்களுக்கு நடந்த இந்த கொடுமை யாருக்கு நடக் கக்கூடாதுன்னு இதற்காக போராடினார்கள். அடுத்ததாக இந்த அரசாங்கத்துக்கும் இதற்காக போராடிய அனைவருக்கும் என் வாழ்த்து கூறுகிறேன். ஒரு வழக்கறிஞராகப் பார்க்கும்போது இந்த தீர்ப்பு சரியான தீர்ப்பு தான். காலதாமதமாக கொடுக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று சொல்லுவாங்க. இந்த தீர்ப்புல நீதி மறுக்கப்படவில்லை, ஒரு பாமரப் பெண்ணா பார்க்கும்போது குற்றவாளிகளுக்கு இன்னும் கடுமையான தண்டனை தரணும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் பெண்களுக்கு எதிரா எந்த குற்றச் செயல்களும் நடக்காது'' என்றார் அவர்.

"நான் பிறந்தது வளர்ந்தது கல்யாணம் பண்ணதெல்லாம் பொள்ளாச்சிதான், முன்னாடி பொள் ளாச்சின்னு சொன்னதும், இயற்கை வளம் மிக்க ஊருன்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா இந்த ஆறு வருட காலமாக நிறைய பொம்பளப் பிள்ளைகளை ரேப் பண்ணாங்களே அந்த ஊரான்னு கேக்கு றாங்க. ஒரு கட்டத்துல இந்த ஊரை விட்டு போயிடலாம்னு தோணுச்சு, ஆனா இப்ப வந்த தீர்ப்பு எங்களுக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. இருந்தாலும் வெளிநாடுகள்ல பெண்களுக்கு எதிராக நடக்கிற குற்றங்களுக்கு கொடுக்கிற தண்டனை மாதிரி இங்கேயும் கடுமையா இருக்கணும். அப்பதான் பொம்பளப் புள்ளைய தொடுறதுக்கே எல்லாரும் யோசிப்பாங்க, பெண்களுக்கு எதிரா குற்றங்களும் நடக்காது'' என்கிறார் குமரன் நகரை சேர்ந்த மஞ்சுளா.

ss

Advertisment

65 வயது ராஜாம்மாளின் விருப்பமோ, "நான் இந்த பொள்ளாச்சில 50 வருஷத்துக்கு மேல இருக்கேன். ஆனா என் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு கொடுமையான சம்பவத்தை நான் கேட்டது இல்லை. இந்த கொடுமை நடந்ததை நான் கேள்விப்பட்டதும், அதுவும் நம்ம வாழ்ற பொள்ளாச்சில நடந்திருக்குனு தெரிஞ்சதும் ரொம்பவும் மன வருத்தமா இருந்துச்சு. உடம்பே நடுங்கிருச்சு. கொஞ்ச நாளாவே கேஸ் போயிட்டு இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க. நானும் என்னடா ஒண்ணுமே காணோம்னு நினைச்சுகிட்டு இருந்தேன், தீர்ப்பு வந்திருக்குங்க,. சந்தோசம் தான், இன்னும் ஒரு படி மேல உயிர் பயத்தை காண்பிக்கிற மாதிரி தீர்ப்பு வந்திருந்தா வரும் காலத்துல எல்லாரும் ஒழுக்கமா இருப்பாங்க'' என்றார்.

ss

"நான் பிறந்ததிலிருந்து பொள்ளாச்சிலதான் இருக்கேன். பொள்ளாச்சிய உலுக்கிய இந்த பாலியல் வன்கொடுமைக்கு இப்ப வந்த தீர்ப்ப ஒரு பெண்ணா நான் வரவேற்கிறேன். குற்றவாளிகளை சுட்டுக் கொன்று இருக்கணும், அதுதான் சரியா இருந்திருக்கும். இருந்தாலும் இந்த தீர்ப்பை வரவேற்கின்றேன்'' என்கிறார் ஜோதி நகர் செல்வி.

"இந்தப் பாலியல் வழக்குல ஒன்பது பேர் குற்றவாளியா இருக்காங்க, அதுல ரெண்டு பேரு எங்க வீட்டு பக்கத்துலதான். அவங்கள பாக்கும்போது சாதாரணமா தான் இருந்தாங்க. ஆனா கைது பண்ற அன்னைக்குத்தான் இந்த காமக் கொடூரன்களின் உண்மையான முகம் எங்களுக்கு தெரிஞ்சுச்சு. இந்தத் தீர்ப்பு வந்ததுனால பொள்ளாச்சி மேல இருந்த sஅழுக்கு முழுசா போயிருக்கு. இந்த அருமையான தீர்ப்பை வழங்கின தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதிகளுக்கும் பொள்ளாச்சி மக்கள் சார்பாக என்னோட வாழ்த்தை தெரிவிக்கிறேன், மத்தபடி தீர்ப்பு நல்ல தீர்ப்புதான்'' என்கிறார் செந்தில்குமார்.

பி.கே.எஸ். காலனியை சேர்ந்த வைஷ்ணவியோ, "பொள் ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பொள்ளாச்சி, இயற்கை அன்னை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஊர்ல ஒரு கருவேல மரம் வளர்ந்தால் அதை வேரோடு புடுங்குவாங்க. அது மாதிரி இந்த அரக்கன்களை வேரோடு புடுங்கி இருக்கணும், அப்பதான் வருங்காலத்தில இந்த மாதிரி கெட்ட எண்ணங்கள் உள்ளவங்க பயப்படுவாங்க. அதுதான் எல்லாருக்கும் ஒரு பாடமா இருந்திருக்கும்'' என்கிறார் கோபத்துடன்.

பொள்ளாச்சி கொடூரங் களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலை வரும் இதழில்.

படங்கள் :விவேக், முத்துகுமாரசுவாமி