"சி.பி.ஐ.யால் பதிவுசெய்யப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒன்பது நபர்களுமே குற்றவாளிகள்." என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பினை வாசித்து, இதுநாள் வரை பெண்களின் இதயத்தை இறுக்கிப்பிடித்த ஒட்டுமொத்த கனத்தையும் இறக்கிவைத்துள்ளார். இதற்கு நக்கீரனும் ஒரு காரணம் எனச் சொல்லத் தேவையில்லை. "எங்கெல்லாம் நீதி வென்றிருக்கின்றதோ, அங்கெல்லாம் நீதிக்கு உறுதுணையாக நக்கீரனின் பங்கு அளப்பரியதாக இருக்கும். நீதியையும், நக்கீரனையும் பிரித்துப்பார்க்க இயலாது".

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (202/2020) இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வருகின்ற 13-05-2025 அன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என 28/04//2025 அன்று அறிவித்தது கோவை மகளிர் மன்றம்.

s

அதே தினத்தில் கோவை மகளிர் மன்ற நீதிபதி, கரூர் மகளிர் மன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானது. ஐந்து வருடங்களாக வழக்கினை தீவிரமாக விசாரணை செய்துவந்த நீதிபதி நந்தினிதேவி இடமாற்றமானால் எப்படி தீர்ப்பு கிடைக்கும்? புதிதாக வரும் நீதிபதி விசாரணை செய்யாமல் எப்படி தீர்ப்பினை வழங்குவார்? வழக்கு இழுத்தடிக்கப்படுமே? குற்றவாளிகள் தப்பி விடுவார்களே? குற்றவாளிகளுக்கு சாதகமாகத்தான் இந்த தீர்ப்பு அமையும் என பல்வேறு விவாதங்கள் மக்கள் மனதில் எழும்பியது. "இல்லையில்லை! இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான்! வழக்கினை யார் விசாரணை செய்து வருகிறார்களோ அவர்களே தீர்ப்பு வழங்குவார்கள். அதுபோக இவர்கள் இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி. ஆகையால் இவர் கூறியதுபோல், கூறிய தேதியில் வழக்கிற்கான தீர்ப்பினை வழங்குவார்'' என்றனர் சட்ட வல்லுநர்கள்.

தீர்ப்பிற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்து 624 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளார் நீதிபதி நந்தினி தேவி. வழக்கின் தீர்ப்பிற்கான நாள். 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. நீதிமன்ற காம்பவுண்ட் வாசலுக்கு வருபவர்கள் காவல் துறையின் பரிசோதனையிலிருந்து தப்ப இயலவில்லை. தண்ணீர் கேன் கூட நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுசெல்ல இயலாத நிலை.

Advertisment

pollachi

தேசிய ஊடகங்கள் வரை நீதிமன்ற வளாகத்திற்குள் குவிந்த நிலையில் காலை 8 மணி வாக்கிலேயே குற்றவாளிகள் 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் முன்பு கொண்டு வரப்பட்டனர். எப்பொழுது தீர்ப்பினை வாசிப்பார்கள்.? தண்டனை கிடைக்குமா.? கிடைக்காதா? என அனைவரும் தங்களுக்குள் வாதிட்ட நிலையில் நக்கீரன் மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என நம்பியது. சரியாக 9.55 மணிக்கு மகளிர் மன்ற நீதிபதி நந்தினிதேவி காரிலிருந்தபடியே நீதிமன்ற வளாகத்திலிருந்த விநாயகருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நீதிமன்றத்தின் வாசலில் இறங்கி, சுற்றியுள்ள ஊடகத்தினருக்கு வணக்கத்தை தெரிவித்தார்.

முன்னதாக ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்கு வரவியலாதவாறு, நீதிமன்றம் முன்பு பேரிகார்டு போட்டு தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர் காவல் துறையினர். நீதிபதி தன்னுடைய இருக்கையில் அமர்ந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் சரியாக 10.05 மணி வாக்கில் அந்த வரலாற்றுத் தீர்ப்பினை வாசித்து, தண்டனை விபரத்தை 12 மணி வாக்கில் அறிவிக்கின்றேன் என்றார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் அனைவரும் குற்றவாளி களே என்றதும் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisment

பொள்ளாச்சியில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பை வழங்கிய தி.மு.க.வின் முன்னாள் மா.செலிவும், மாநில சட்ட திட்டக்குழு உறுப்பினரான தென்றல் செல்வராஜோ, "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறோம். 2019-ல் சம்பவம் நடந்ததாக தகவல்கள் வந்த அன்றே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலு வலகத்தில் கழகத்தோழர்களு டன் சென்று மனு கொடுத்து உடனே சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்யக் கோரினோம். அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அதில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம்.

அனைத்துக் கட்சிகள், மாதர் சங்கத்தினர் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றி, அதன்படி கடையடைப்பு, மனிதச் சங்கிலி போராட்டமும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்ட அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டமும் வழக்கினை விரைவுபடுத்தியது. தொடர்ச்சியாக வழக்கு தொய்வில்லாமல் செல்ல கண்களில் கறுப்புத் துணி கட்டியும் போராட்டம் நடத்தினோம். இப்படியெல்லாம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். அதுவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றத்தை தலைதாழ்த்தி வணங்குகிறோம்'' என்றார் அவர். இதே வேளையில் நீதிமன்ற வளாகத்தினுள் இனிப்புக்களை வழங்கி, தீர்ப்பினை வரவேற்பதாக கோஷம் எழுப்பினர் மாதர் சங்கத்தினர்.

pollachi

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஐ.யின் அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகனோ, "முதலில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படுகிறது, அதன்பிறகு 20 நாட்களில் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்படுகிறது, பிறகு 40 நாட்களில் சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்படுகிறது, மூன்று மாத காலத்திற்குள் மூன்று ஏஜென்சிகளுக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ.க்கு வழக்கு மாறியதும், எந்தப் பெண்ணும் இதில் புகார்கொடுக்க முன்வராததால், சி.பி.ஐ. குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு தரப்பிலிருந்து 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஒரு சாட்சிகூட பிறழ் சாட்சியாக மாறவில்லை, அனைத்துப் பெண்களும் பயமின்றி சுதந்திரமாக வந்து சாட்சி சொல்லியிருக் கிறார்கள். வழக்கை நிரூபிப்பதற்கு மின்னணுக் கருவிகளின் சாட்சியங்கள், மிக முக்கிய மானவையாக இருந்தது. பாதிக்கப் பட்டவர்களைக் கண்டறியவே அதுதான் உதவியாக இருந்தது. வீடியோ எடுக்கப்பட்ட தேதி, இடங்கள் அனைத்தும் தெளிவாக விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

வழக்கினைப் பொறுத்தவரை 376 உ கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்டவையும், வன்முறையும் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் உள்ளிட்ட பரிசீலனையையும் வைத்திருக்கிறோம். இளம் வயதினர், குற்றவாளிகளுக்கு வயதான பெற்றோர்கள் உள்ளனர், குடும்பத்திற்கு ஒரே மகன் போன்ற கோரிக்கைகளை குற்றவாளிகள் தரப்பினர் முன் வைத்துள்ளனர்'' என்றார் அவர்.

pollachi

சரியாக 12.05 மணியளவில், " 376 உ (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(ச) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் ஒன்பது நபர்களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படு கின்றது. ஏனைய மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் எனத் தனித்தனியாகவும் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இதில், முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனையும், நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ஒன்பதாம் குற்றவாளி அருண் குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகின்றது. இதுபோக பாதிக் கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக ரூ. 85 லட்சம் வழங்கவேண்டும். அதில் பாதிக்கப்பட்ட விக்டிம் ஆக்கு 2 லட்சம், இக்கு 15 லட்சம், ஈக்கு 10 லட்சம், உக்கு 10 லட்சம், ஊக்கு 8 லட்சம், எக்கு 15 லட்சம், ஏக்கு 25 லட்சம் எனப் பிரித்து வழங்கவேண்டும். இதில் விக்டிம் ஐ நீதிமன்ற நிகழ்விற்கு வராததால் அவருக்கு இழப்பீடு இல்லை. குற்றவாளிகள் 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்'' என வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கினார் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி.

வழக்கின் பாதை:

12.02.2019- பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தன்னுடைய கழுத்துச் சங்கிலியை பறித்துக்கொண்டு, தன்னை பலவந்தம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

24.2.2019- சபரிராஜன், திருநாவுக் கரசு உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவலறிக்கை பதியப்பட்டது. இதே நாளில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் புகாரளித்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய பொழுதே சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

26.2.2019- ஏன் புகார் கொடுத்தாய்.? என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக புதிய புகார் பதிவானது.

அதற்கடுத்த தினங்களில் "பெல்ட்டால அடிக்காதீங்க அண்ணா' என பெண் கதறும் வீடியோக்கள் நக்கீரன் இணையதளத்தில் வெளியாகி நாடே கொந்தளிப்பானது.

pollachi

இதேவேளையில் தலைமறைவாக இருந்த இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டான்.

5.3.2019- நக்கீரனின் தொடர் செய்தி வெளியீட்டாலும், பொதுமக்களாலும் காவல்துறை திருநாவுக்கரசை கைதுசெய்தது. கைதுசெய்யப்பட்ட திருநாவுக்கரசின் ஆப்பிள் போனில் பாதிக்கப்பட்ட பெண்களின் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் 100-க்கும் அதிகமாக இருந்ததை போலீஸார் கைப்பற்றினர்.

5.3.2019- செய்தி காரணமாக நக்கீரன் செய்தியாளர் அருள்குமார் பொள்ளாச்சி. ஜெயராமனால் மிரட்டப்பட்டார். இதே நாளில் வழக்கில் 5-வது குற்றவாளியாக மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டான்

6.3.2019- அப்போதைய ஆளுங்கட்சி அழுத்தத்தால் நக்கீரனை மிரட்டும் நோக்கில் "செய்தி வெளியிடக்கூடாது. இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக அமையும்' எனப் பேட்டி யளித்தார் கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன். இதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க வரக்கூடாது என்கின்ற நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் வெளியிட்டார்.

11.03.2019- நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்ட அந்த வீடியோவை வெளியிட்டு தன்னுடைய பெருங்கோபத்தை காணொலியில் காண்பித் தார். அன்றைய நாளி லேயே பாலியல் வழக் கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜனை கட்சியிலிருந்து நீக்கியது அ.தி.மு.க.

12.03.2019- பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திலிருந்த வழக்கு எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி.க்கு மாறியது. அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வழக்கு தீவிர மடைந்தது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள் குறித்தும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுகின்ற அப்போதைய மாவட்ட நிர்வாகத்தைக் குறித்தும் அதன் பின்னணியில் உள்ள அ.தி.மு.க. அரசின் முகத்திரை குறித்தும் நக்கீரன் தொடர்ச்சியாக எழுதியும், வீடியோ பேசியும் வந்த நிலையில், நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. நக்கீரன் ஆசிரியருக்கு சாட்சி கூற வாருங்கள் என சம்மன் அனுப்பியது. சிறிய விசாரணை அறைக்குள் வரவழைக்கப்பட்ட ஆசிரியரிடம் மிரட்டும் தொனியில் கேள்வி கேட்டுள்ளனர் அங்கிருந்த எஸ்.பி.க்களான நிஷா பார்த்திபன் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி பெரியவர் கக்கன் பேத்தி ராஜேஸ்வரி எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள்.

pollachi

"மிகச்சிறிய அறை அது! எனக்கு ஒரு இருக்கை. எனக்கு முன்னே ஒரு சிறிய மேஜை. எனக்கு எதிர்ப்புறம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளான நிஷா பார்த்திபனும், ராஜேஸ்வரியும். இதில் ராஜேஸ்வரி எனும் அதிகாரி தன் காலை என் இரு கால்களுக்கு இடையே வைத்து எனக்கு அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கினார். சாட்சிக்காக, உங்களுடைய உதவிக்காகத்தான் அழைத்தீர்கள். குற்றவாளியை நடத்துவதுபோல் நடத்துகிறீர்கள். எங்களுக்குக் கிடைத்த வீடியோக் களை உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்றுதான் கொடுத் துள்ளோம்.

உங்களுடைய ரூடான கேள்விகள், ஏன் இதைச் செய் தீர்கள்? ஏன் எழுது கிறீர்கள்? என்பது போல் இருக்கின்றது என்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். முழுக்க முழுக்க பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும் அதன் பின்னணியி லுள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள் குறித்தும் எழுதக்கூடாது என்பதற்காக வரவழைத்து மிரட்டியது சி.பி.சி.ஐ.டி.".

pollachi

சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும் சி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் உண்மை வெளிவரும் என்று உயர்நீதிமன்றத்தில் பெட்டிசன் தாக்கல் செய்தார் நக்கீரன் ஆசிரியர்.

13.3.2019-ல்- இதுபோன்று பல காரணங் களால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான டீம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்தனர்.

இது இப்படியிருக்க, வழக்கு சி.பி.ஐ.க்கு சென்ற நிலையில், "பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தல்களால் வர மறுக்கின்றார்கள். எங்களிடம் பேச உதவுங்களேன்.'' என சி.பி.ஐ. வேண்டுகோள் விடுக்க, எப்பொழுதும் நீதியின் பக்கம், நீதிக்காக உதவும் நோக்கில் நக்கீரன் பயணிக்கும் என்பதால் அவர்களுக்கு நக்கீரன் ஆசிரியர் உதவியது தனிக்கதை.

15.03.2019- பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக எஸ்.பி. பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவித்தார் நீதிபதி கிருபாகரன்.

pollachi

17.03.2019- செய்தியாளர்களை வலிய வந்து அப்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இனிமேல் செய்திகளை வெளி யிடக்கூடாது என மிரட்டியது குறிப்பிடத் தக்கது.

09.04.2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிக்கு துணைநிற்கும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கோவையில் தி..மு..க. தலைவர் ஸ்டாலின் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கடுத்த தினங்களில் சவுண்ட் புரூப் செய்யப்பட்டு, வீட்டி லிருந்து கத்தினால் சத்தம் வெளியே கேட்காதவாறு அறைகள் வடிவமைக் கப்பட்ட மாக்கினாம்பட்டி அருகேயுள்ள திருநாவுக்கரசின் சின்னப்பபாளையம் வீடு கண்டறியப்பட்டது.

4.05.2019- சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ.யால் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

03.11.2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் விடுவிக்கப்பட்டது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளி யிட்டார்.

06.01.2021 அ.தி.மு.க.வின் பொள்ளாச்சி மாணவர் அணி அருளா னந்தம், ஹரேன்பால் மற்றும் பாபு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அன்றைய தினமே அருளானந்தம் கட்சியி லிருந்து நீக்கப்பட்டான்.

pollachi

10.01.2021 குற்றவாளிகளை காப் பாற்றும் அ.தி.மு.க. அரசிற்கு எதிராக எம்.பி. கனிமொழி தலைமையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்.

22.2.2021- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. தொடர் விசாரணையில் அருண்குமார் என்பவன் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்.

16.08.2021 பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

pollachi

20.10.2021: கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர்களது பெற்றோரும் உறவினரும் சந்திக்க காவல்துறை அனுமதித்தது. அத்துடன் அவர்கள் கொண்டுவந்த மட்டன் பிரியாணியையும் சாப்பிட அனுமதித்தது. இது சர்ச்சையான நிலையில் 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். இதன் எதிரொலியாக சேலம் சிறையில் வைத்தே, வீடியோ கான்பரன்சில் குற்றவாளிகள் ஆஜராக உத்தர விட்டார் நீதிபதி.

23.02.2024 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்.

28.04.2025 தீர்ப்பிற்கான தேதி அறிவிப்பு

13.05.2025 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகளே எனத் தீர்ப்பினை அறிவித்து தண்டனையும் வழங்கியது கோவை மகளிர் நீதிமன்றம்.

pollachi

"பொள்ளாச்சி பாலியல் வழக்கினைப் பொறுத்தவரை கல்லூரி மாணவிகள் 4, வேலை தேடிய பெண், நகைக்கடையில், பியூட்டி பார்லரில் பணியாற்றிய பெண்கள் உள்ளிட்டவர்களே பாதிக்கப்பட்டதாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இதில். 61 சாட்சியங்கள், 69 சான்றாவணங்கள் ஆகியன சி.பி.ஐ. தரப்பில் முன்வைக்கப்பட்டது. 1500 பக்கத்தில் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் வீடியோ ஆவணங்களையும், கைப்பற்றிய பொருட்களையும் குறிப்பிட்டு, இது இவர்களுடையதே என்பதை நீதிமன்றத்தில் உறுதி செய்தது. குறிப்பாகVIDEO 0001479, 0001483, 0001488, 0001410, VIDEO IMG 1510, 0001128, IMG 20180601200330, 180603093249, 20180601 200330 மற்றும் 20180603093249 உள்ளிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், சில்வர் கலர் ஹூண்டாய் வெர்னா, க்ரே கலர் போர்டு, ஸ்க்யூஸ் கலர் போர்டு, வெள்ளைக்கலர் மாருதி 800, கறுப்பு நிற போர்டு மற்றும் சில்வர் கலர் வோல்ஸ்வேகன் ஆகிய வாகனங்கள் மற்றும் வழக்கிற்கு இதயமாக இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசின் ஐபோன் ஆகியன வழக்கிற்கு உதவின. அந்த ஐபோன் மூலம் 'டிஎன் 41 அட்டாக் பாய்ஸ்' என்கின்ற வாட்ஸ் அப் குழுவை இயக்கி, அதன்மூலம் இவர்களின் பாலியல் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதும் உதவியது.

வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதனால் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரி விசாரிக்கக்கூடாது. டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி தான் விசாரிக்கவேண்டும் என அழுத்தம்வந்தது. சாதியரீதியில் மணிப்பூர், வாச்சாத்தியில் நடைபெற்றது போன்று குறிப்பிட்ட சமூகம், இனம் அடிப்படையில் இந்த பாலியல் குற்றங்கள் நடைபெறவில்லை. பாலியல் குற்ற வாளிகளிலும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். ஆதலால் வழக்கை விசா ரிக்கலாம் என சி.பி.ஐ. வாதிட்டு பிரச் சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது'' என்கின்றனர் உளவு அதிகாரிகள்.

அதுபோக வழக்கின் தன்மை கருதி கைதான 9 பேருக்கும் ஜாமீன் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப் பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்சிகள் என யாரும் பிறழ்சாட்சியாக கடைசி வரை மாறவில்லை. விசாரணை முழுவதும் சி.பி.ஐ. கண்காணிப்பாளரின் நேரடிப் பார்வையில் நடைபெற்றது. ஒவ்வொரு வாய்தாவின்போதும், பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையிலிருந்தபடியே வீடியோ கான் ஃபரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.

pollachiபொள்ளாச்சி பாலியல் வழக்கில், விக்டிம் A, முதல் குற்றவாளி சபரிராஜன், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு, மூன்றாம் குற்றவாளி சதீஷ், நான்காம் குற்றவாளி வசந்தகுமார் மற்றும் ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணன் ஆகிய ஐவராலும், விக்டிம் B, முதல் குற்றவாளி சபரிராஜன், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு, மூன்றாம் குற்றவாளி சதீஷ், நான்காம் குற்றவாளி வசந்தகுமார் மற்றும் ஏழாம் குற்றவாளி ஹெரன்பால் ஆகிய 6 நபர்களாலும், விக்டிம் C-யோ இரண்டாம் குற்றவாளி திருநாவுக் கரசு, ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணன் மற்றும் ஆறாம் குற்றவாளி பாபு ஆகிய மூவராலும், விக்டிம் D-யோ இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு, மூன்றாம் குற்றவாளி சதீஷ், ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணன் மற்றும் ஆறாம் குற்றவாளி பாபு ஆகியோ ராலும், விக்டிம் E, முதல் குற்றவாளி சபரிராஜன், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு, நான்காம் குற்றவாளி வசந்தகுமார், ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணன் மற்றும் ஏழாம் குற்றவாளி ஹெரன்பால் ஆகிய ஐவராலும், விக்டிம் F, முதல் குற்றவாளி சபரிராஜன், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசு, மூன்றாம் குற்றவாளி சதீஷ் மற்றும் ஏழாம் குற்றவாளி ஹெரன்பால், ஒன்பதாம் குற்றவாளி அருண்குமார் ஆகிய ஐவராலும், விக்டிம் G, முதல் குற்றவாளி சபரிராஜன், இரண்டாம் குற்றவாளி திருநாவுக் கரசு, மூன்றாம் குற்றவாளி சதீஷ், நான்காம் குற்றவாளி வசந்தகுமார் மற்றும் ஏழாம் குற்றவாளி ஹெரன்பால் ஆகிய ஐவராலும் மற்றும் கடைசி விக்டிம் H, முதல் குற்றவாளி தொடங்கி தொடர்ச்சியாக எட்டு குற்றவாளிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எட்டு விக்டிம்களை சிதைத்த குற்றவாளிகள் மீது 34 R, 376 D, 366. 354 A, 354 B, 370, 509 SecTNPHW Act , 2002 மற்றும் Sec 66E மற்றும் 67 IT Act பிரிவின்கீழ் குற்றச்சாட்டும் பதிவுசெய்து அதனடிப் படையிலேய தண்டனைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரித்திரத் தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி என்றாலும், அப்போதைய ஆட்சி அதிகாரத்தின் நெருக்கடியால் பலர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்கின்ற பரவலான குற்றச்சாட்டு பொள்ளாச்சியில் தற்பொழுது வரை உண்டு.

குறிப்பாக, முன்னாள் நகர மன்றத் தலைவரும், பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணகுமார், மாவட்ட சிறுபான்மையினர் செயலாளர் ஜேம்ஸ் ராஜா, பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் வசந்த், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் (முன்னாள்) புளியம்பட்டி தாமோதரன், அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளரான ரகுபதி, ஆச்சிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆகியோர்களின் பெயரும் அடிபட்டதுண்டு. இது இப்படியிருக்க, பாலியல் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர் என அ.தி.மு.க. நிர்வாகி பார் நாகராஜின் பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

pollachi

இதேவேளையில் பொள்ளாச்சி ஜெய ராமன் மகன் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் எனவும் செய்திகள் பரவியது. இதில் பிரவீன், ஜெயராமன் மகன் அப்போதைய எம்.பி.யான மடத்துக்குளம் மகேந்திரனை அழைத்துக் கொண்டு மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனிட மும், மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடமும் சென்று, எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறியதையும் மக்கள் இன்று வரை நினைவுகூர்கின்றார்கள். இதுபோல் பார் நாகராஜனும் மாவட்ட நிர்வாகத்தை எளிதாக அணுகியது குறிப்பிடத் தக்கது.

வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய பொள்ளாச்சி வழக்கறிஞர் சந்தோஷோ, "வழக்கின் தீர்ப்பானது, பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ஒரு ஆறுத லாக மற்றும் இந்த சமுதாயம் சட்டத்தின் கரங்களில் பாது காப்பாக உள்ளது என்பதை புலப் படுத்தும். இந்த தண்டனை செய்தி யானது, பெண்ணை போகப்பொருளாக்கி பொருள் ஈட்டும் கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மேற்படி இந்த ஈனச்செயலின் உச்சகட்டம் என்ன வென்றால், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் அதனை வீடியோ பதிவுசெய்து., மிரட்டி, அதிகார உச்சத்தில் இருப்பவர்களின் இச்சைக்கு இரையாக்கி பொருளீட்ட முனைந்துள்ளார்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியின் பெருமையைச் சீர்குலைத்து தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது இந்த கயவர்களின் செயல்கள். மேற்படி குற்றவாளிகள் பல ஆண்டுகளாக பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து., ஆட்சி அதிகாரம் கொண்டவர்களின் வளையத் தில் பாதுகாப்பாக செயல்பட்டுள்ளார்கள். இதனை நக்கீரன் வெளிச்சம் கொடுக்காமல் இருந்திருந்தால் பெண்களை போகப் பொருளாக்கும் மாபியா கும்பல் வலுப் பெற்றிருக்கும். எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும். நக்கீரனுக்கு வாழ்த்துகள்'' என்றார் அவர்.

எங்கு தவறு நடந்தாலும் பாதிக்கப் பட்டவர்களின் குரலாக, நீதிக்கு உறுதுணையாக நக்கீரன் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஓர் உதாரணம்.

படங்கள்: விவேக், முத்துக்குமாரசுவாமி