டந்த ஆட்சியில், பொள்ளாச்சியில் கதறிய அந்த இளம்பெண்ணின் குரல் இன்னமும் நெஞ்சை அறுக்கிறது. பா-யல் கொடூரன்கள் திருநாவுக்கரசு, சபரிராஜன் வரிசையில் ஒரு சிறுமியை 6 பேர் பா-யல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அதில் ஒருவன் இன்னும் 18 வயதை நெருங்காதவன்.

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நம்மிடம், "வயிறு வ-க்குது அம்மா..ன்னு அழுத அந்த 14 வயது சின்ன பொண்ணு, இந்த பொள்ளாச்சியில ஒரு குக்கிராமத்துல இருக்கறா. அந்தச் சிறுமிய பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அவளோட அம்மாவும் அப்பாவும் கூட்டிட்டு வந்திருக்காங்க. அந்த சின்னப்பொண்ணை பரிசோதிச்ச டாக்டர்கள் அதிர்ந்துபோயிட்டாங்க. காரணம்... 5 மாசம் கர்ப்பமா இருந்ததுதான். அந்த சிறுமியிடம், நிறையபேர் உறவு கொண்டதற்கான தடயங்கள், அவள் உடம்பில் காண்ப்பட்டதும் அதிர்ச்சியின் அளவைக் கூட்டியிருந்தன.

pollachi

அவளைப் பெத்தவங்க இதை காதுல கேட்டதும் பேயறைஞ்ச மாதிரி நின் னுட்டாங்க. "என்ன, ஏது? எப்படி இது நடந்துச்சு'ன்னு? பெத்தவங்களும் டாக்டர்களும் கேட்ட கேள்விக்கு அந்த சின்னப் பொண்ணுகிட்டயிருந்து எந்த பதிலும் இல்லை. குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறாள். அதனால எங்ககிட்ட அந்த சின்னப்பொண்ணைக் கூட்டிட்டு வந்தாங்க.

Advertisment

இன்ஸ்பெக்டர் வீரம்மாள் உள்ளிட்ட நாங்க அந்த சின்னப் பொண்ணுகிட்ட ஆறுதலான வார்த்தைகளைக் கொட்டியதில், அவள் வயிற்றைத் தடவிக் கொண்டே நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள். "மேம்... நான் எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற அருணை (பெயர் மாற்றப் பட்டுள்ளது ) லவ் பண்ணினேன். அடிக்கடி நைட் நேரத்துல சந்திச்சுப் பேசுவோம். உன்ன நான் கல்யாணம் பண்ணிக் கறேன்னு சொல்லி அப்ப என்கிட்டே அருண் தப்பா நடந்துக்கிட்டான். அப்படி ரெண்டு, மூணு தடவை தப்பு பண்ணினதை, எங்க சொந்தக்கார அண்ணன் மகரஜோதி (31) பார்த்துட்டாரு. என்னைய மெரட்ட ஆரம்பிச்சுட்டாரு.

"இப்படி தப்பு பண்ணிட்டு இருக்கறதை உங்கப்பன், ஆத்தாகிட்ட சொல்லட்டுமா'ன்னு மெரட்டினவரு... திடீர்னு, என் கூட அப்படி இருந்தா வெளியே சொல்ல மாட்டேன்னு என்னைய ரொம்ப இம்சை பண்ணிட்டாரு. அது மட்டுமில்லாம, தப்பு பண்றதை செல்போன்ல ரெக்கார்டு பண்ணி, அதை எங்க ஏரியாவுல இருக்கற பிரவீன் (19), முத்து முருகன் (19), நாகராஜ் (19), அப்புறம்... சின்ராசு (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என அவுங்களோட செல்போனுக்கு அனுப்பி விட்டுட்டாரு. அவுங்க எல்லாரும்... அந்த வீடியோவை வெளியே விட்ருவோமுன்னு சொல்லி... என்னைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க மேம்.

எனக்கு உடம்புல என்னென்னெமோ பண்ணுது. வாந்தி வருதுன்னு சொன்னேன். ஆனா அவுங்க கேட்கற மாதிரி இல்லை மேம். என்கூட தப்பா இருக்கத்தான் வற் புறுத்தறாங்க. படுக்கலீன்னா அடிக்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைங்க. சூசைட் பண்ணிக்கலாம்னு கூட முயற்சிபண்ணினேன் மேம். இப்ப வீட்டுக்கு தெரிஞ்சுபோச்சு. என்ன பண்றதுன்னே தெரியலைங்க மேம் என அழுத அவளைத் தேற்ற முடியாமல் நாங்களே அழுது விட்டோம்.

Advertisment

டி.எஸ்.பி. தமிழ்மணி மேடமும் நேரடியா அந்த சின்னப்பொண்ணுகிட்ட விசாரிச்சவரு, டென்ஷனாயிட்டாரு. அந்த 6 பேரையும் உடனடியா தூக்கிட்டு வரச்சொல்லி, இப்போ போக்சோ சட்டத்தில் கைதுபண்ணி சிறையிலே தள்ளிட்டாங்க.

18 வயசு கூட நிரம்பாத அந்த சின்ராசு பையன், செல்போன் முழுக்க நெறைய ஆபாசப் படங்கள்தான். ஏற்கனவே இந்த பொள்ளாச்சி பாலியல் விசயத்துல அசிங்கமாய் பகிரங்கப்பட்டு போயிருக்கு. இப்போ புதுசா இவனுக முளைச்சிருக்கறானுக. பெண்கள் விஷயம்ங்கறதால அவனுக 6 பேரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்கவிருக்கிறோம்'' என்கிறார்கள் தலையிலடித்துக் கொண்டு .

"மீண்டும் பொள்ளாச்சியில் இப்படியோர் சம்பவமா? புதிய வக்கிரன்கள் உருவாகிவிட்டார்களா?' என்கிற அதிர்ச்சிக்கிடையே, அந்த சின்னப்பொண்ணு தன் வயிற்றில் ஒரு கருவை சுமந்துகொண்டு காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறாள்.