சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், முன்னாள் அ.தி.மு.க. இளைஞரணி இணை செயலாளர் ஹெரன் பால், பாபு ஆகியோரின் செல்போன், லேப்-டாப்பில் இருந்து இளம் பெண்களை பாலியல் ரீதியாக இம்சிக்கும் வீடியோக்களையும், போட்டோக்களையும் வைத்தே கைதுப் படலத்தை அரங்கேற்றி ஆளுங்கட்சியை அரண்டு போக வைத்திருக்கிறோம் என்கிறது சி.பி.ஐ போலீஸ்.

pollachi-issue

இந்த மூன்று பேரும் சிக்கிக் கொண்டாலும் மேலும் 3 பேர் மீதும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் புகார் தெரிவித்ததை அறிந்து கொண்டு அந்த மூவரும் தலை மறைவாகி விட்டார்கள் .

பொள்ளாச்சி முன்னாள் நகராட்சித் தலைவரும், சிட்டிங் நகர அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணகுமாரும் , முன்னாள் கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா , கிருஷ்ணகுமாரின் நண்பரும், ரிசார்ட் உரிமையாளருமான வசந்த் ஆகியோர்தான் அடுத்த குறி என பரபரக்கிறது.

Advertisment

இளம்பெண்கள் மீதான பாலியல் கொடூரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பொள்ளாச்சி தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம்.

""வசந்த்தோட அப்பா பாலு 35 வருஷத்துக்கு முன்னால ஹைவேஸ் போலீஸ்ல டி.எஸ்.பி.யோட ட்ரைவரா ஜீப் ஓட்டிட்டு இருந்தாரு. டி.எஸ்.பி. பேரை வச்சி செல்வாக்குதேடுவதா புகார் வந்ததால சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் நாய் பண்ணை வச்சு நாய் பாலுவா ஆனாரு.

2011-ல தன் மகன் வசந்தை காங்கிரஸ் ஆதரவோடு சுயேட்சையா கவுன்சிலர் தேர்தல்ல நிக்க வச்சு ஜெயிக்க வச்சாரு . ரெண்டாவது நாளே அ.தி.மு.க. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் மூலமா ஜெயலலிதாவை சந்திச்சு அ.தி.மு.க.வுல இணைச்சிட்டாங்க. வசந்தோட அப்பா பாலு, கம்பெனிகளுக்கு செக்யூரிட்டிக்கு ஆட்களை அனுப்புற காண்ட்ராக்டை எடுத்து பண்ணிட்டு இருந்தாரு.

Advertisment

பொள்ளாச்சி நகராட்சி முழுக்க இருக்கற 11 வாட்டர் டேங்குகள் பாதுகாப்புக்குன்னு 1 டேங்குக்கு தினமும் 3 ஆட்கள் வீதம்னு பொய் கணக்கு காட்டி 3 மாசத்துக்கு 20 லட்ச ரூபாய் பில் கொடுப்பாங்க. ஆனா, ஒரு ஆளைக் கூட வேலைக்கு போட்டிருக்க மாட்டாங்க. சேர்மன் கிருஷ்ணகுமார் மூலமா பில் செட்டிலாயிடும். கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜாவோட சேர்ந்து மூணு பேரும் பணத்தைப் பிரிச்சுக்குவாங்க. கிருஷ்ண குமாருக்கு எல்லா சப்ளையும் இந்த இரண்டு பேரும்தான்.

pollachi-issue

கிருஷ்ணகுமார் சிபாரிசில் அர்பன் பேங்க்ல சீட் வாங்கி சேர்மன் ஆன முல்லை ஒயின்ஸ் கனகராஜ் தங்கி இருக்கும் மகாலிங்கபுரம் வீடுதான், கிருஷ்ணகுமார், ஜேம்ஸ் ராஜா, வசந்த் ஆகியோருக்கு எல்லாத்துக்குமான கெஸ்ட் ஹவுஸ்.

பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் உள்ள லாட்ஜூக்கு வரும் பெரிய மனிதர்களுக்கும் சப்ளை நடக்கும். இதற்காக பல பெண்கள் மிரட்டி பணிய வைக்கப்பட்டிருக்காங்க. கிருஷ்ணகுமார், வசந்த், ஜேம்ஸ்ராஜா, முல்லை கனகராஜ் இவங்க வேலை என்னன்னு பொள்ளாச்சிக்காரங்களுக்கு நல்லா தெரியும்'' என்கிறார் எக்ஸ் கவுன்சிலரான நவநீதகிருஷ்ணன் .

""பாதிக்கப் பட்ட சில மாணவிகளை சந்திச்சு நாங்க வாங்கிய பாலியல் புகார்ல இந்த மூணு பேர் இல்லாமல் இன்னும் இந்த வழக்குல மறைஞ்சு இருக்கற முக்கிய லிஸ்டை நாங்க எடுத்தோம். அதுல... முல்லை ஒயின்ஸ் கனகராஜ் பேர் முதல்ல இருக்கு'' என்கிறது சி.பி.ஐ தரப்பு.

அதேபோல அந்த லிஸ்ட்ல அதிரடி அருணாச்சலம், வடுகை கனகுன்னு ரெண்டு பேரை குறிச்சு வச்சு இருக்கறோம். அந்த அதிரடி அருணாச்சலம்... பொள்ளாச்சி லாட்ஜ்கள்ல ரூம் பாயா இருந்த ஆளு. கிருஷ்ணகுமார் அன் கோ ஆட்களோட அறிமுகம் கிடச்சதுமே அமோக வளர்ச்சி. கட்சியில மாவட்டப் பிரதிநிதி, அர்பன் பேங்க்ல இயக்குனர், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்னு ஏகப்பட்ட பதவிகள்.

பள்ளிப்படிப்பே இல்லாமல் எப்படி இத்தனை பதவி என விசாரித்தபோது, அருணாச் சலம் என்ற பெயரில் இருக்கும் இன்னொருவரின் பள்ளி சான்றிதழைக் கொடுத்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இந்தப் பிரச்சனை பூதாகரமாய் எழுந்த போது, பொள்ளாச்சி வி.ஐ.பி.தான் அருணாச்சலத்தை காப்பாற்றினார்.

அதற்கு வேண்டி வி.ஐ.பி.யின் வாரிசுக்கு தேவையானவற்றை சப்ளை செய்ததும் நடந்துள்ளது.

அதே போலத்தான் இந்த வடுகை கனகுவும். பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முறுக்கு, பர்பி, இரவில் டீ விற்பனை எனச் சொல்லிக் கொண்டு கஞ்சா, பெண்கள் சப்ளை... என சட்ட விரோத செயல்களை செய்ததின் மூலமாகவே, கிருஷ்ண குமார் மட்டுமல்லாது அ.தி.மு.க. வி.ஐ.பிகளோடு மிக நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டார்.

pollachi-issue

கிருஷ்ணகுமாரை சந்திக்க வேண்டுமென்றால் இவர்களை சந்தித்தால் நடக்கும். அதனால்தான் கிருஷ்ணகுமார், ஜேம்ஸ் ராஜா, வசந்த் ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், கண்டிப்பாய் நாம் அடுத்த தூக்கலில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்து முல்லை கனகராஜ், அதிரடி அருணாச்சலம், வடுகை கனகு ஆகியோர் சுதாரித்து தப்பி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பொள்ளாச்சியில் தங்கி இருந்து இந்த தகவல்களை சேகரித்து இருக்கிறோம். சம்பந்தப் பட்ட எல்லாரையும் தூக்கி விடுவோம்...'' என்கிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். ஆளுந்தரப்பு வி.ஐ.பிகளுடன் மீடியா தரப்பில் உள்ளவர்களுக்கும்- செய்தி வராமல் இருப்பதற்காக சிறப்பு கவனிப்புகளை கிருஷ்ணகுமார் டீம் செய்திருக்கிறதாம்.

பொதுவாகவே பேஸ்புக் , வாட்ஸ் அப் போன்ற பொது வெளியில் அ.தி.மு.க. வி.ஐ.பி.களைப் பற்றி எழுதினாலே வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைப்பது, கோவை-பொள்ளாச்சி ஆளுந்தரப்பில் அதிகம். அதிலும் குறிப்பாக தி.மு.க. நிர்வாகிகளை நடுராத்திரியில் அரெஸ்ட் செய்யும் ஜெ பாணியை கோவை மாவட்டத்தில் இப்போதும் காணலாம்.

ஆனாலும், இந்த பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் வி.ஐ.பி.களின் படங்களைப் போட்டு... பதவி விலகு... என பொள்ளாச்சி தி.மு.க. இளைஞர் அணியினரால் பொள்ளாச்சி முழுக்க போஸ்டர் ஒட்டியும், ஆளுந்தரப்பில் யாரும் அந்த போஸ்டர்களை கிழிக்கவில்லை. 9ந் தேதி வரை வழக்கும் பதிவாகவில்லை.

ஆளுந்தரப்பினருக்குப் பதிலாக, லோக்கல் போலீஸ்காரர்கள்தான் விடிய விடிய போஸ்டரை கிழித்தார்கள்.

ஆளுந்தரப்பில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆட்டம் அத்துமீறி இருந்ததையும், அதில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போன்ற இளம் பெண்கள் சீரழிக்கப்பட்டிருப்பதும் மனசாட்சியுள்ள அ.தி.மு.க.வின் உண்மையானத் தொண்டர்களாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்.

-அ.அருள்குமார்