Advertisment

பொள்ளாச்சி! கோஷ்டி பூசலில் தி.மு.க! முன்னேறும் அ.தி.மு.க!

pp

"அண்ணா அடிக்காதீங்கண்ணா ப்ளீஸ்..' காண் போரை கண் கலங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வீடியோ. இது நடந்தது அ.தி.மு.க. ஆட்சி யில். அதன் பின்ன ரும் பொள்ளாச்சி மக்க ளவைத் தொகுதிக்குண்டான ஆறு சட்டமன்றங்களையும் அ.தி. மு.க.வே கைப்பற்றியது. அதற்கெல் லாம் யார் காரணம்..? இப் பொழுதுவரை விழித்துக்கொண்டதா தி.மு.க.? இல்லை... "கட்சியின் கோஷ்டிப் பூசலால் நடைபெற வுள்ள பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் நிலை கேள்விக்குறிதான்' என்கின்றனர் விவரமறிந்த தொண்டர்கள்.

Advertisment

ss

மாவட்டத்தில் தொண்டா முத்தூர், கிணத்துக்க

"அண்ணா அடிக்காதீங்கண்ணா ப்ளீஸ்..' காண் போரை கண் கலங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வீடியோ. இது நடந்தது அ.தி.மு.க. ஆட்சி யில். அதன் பின்ன ரும் பொள்ளாச்சி மக்க ளவைத் தொகுதிக்குண்டான ஆறு சட்டமன்றங்களையும் அ.தி. மு.க.வே கைப்பற்றியது. அதற்கெல் லாம் யார் காரணம்..? இப் பொழுதுவரை விழித்துக்கொண்டதா தி.மு.க.? இல்லை... "கட்சியின் கோஷ்டிப் பூசலால் நடைபெற வுள்ள பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் நிலை கேள்விக்குறிதான்' என்கின்றனர் விவரமறிந்த தொண்டர்கள்.

Advertisment

ss

மாவட்டத்தில் தொண்டா முத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறையும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி களையும் உள்ளடக்கியது பொள் ளாச்சி மக்களவைத் தொகுதி. சிட்டிங் எம்.பி. தி.மு.க. என்றாலும், அதன்பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தையே கபளீ கரம் செய்து தன் வசம் வைத்துள் ளது அ.தி.மு.க. தற்பொழுது நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் களமிறங்கியிருப்பவர் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி. அ.தி.மு.க. சார்பில் வேட்பாள ராக களமிறங்கியிருப்பவர் திவான்சா புதூரைச் சேர்ந்த கார்த்திகேயன். வசந்தராஜன், பா.ஜ.க .சார்பில் களமிறங்கியுள்ளார்.

"தொகுதியைப் பொறுத்தவரை கள வேலை என்பதே இதுவரை இல்லை. தி.மு.க.வை பொறுத்தவரை பொள்ளாச்சி ந.செ.நவநீதகிருஷ்ணன், தென்றல் செல்வராஜ், தமிழ்மணி, டாக்டர் மகேந்திரன், வால்பாறை அமுதபாரதி உள் ளிட்டோர் வேட்பாளருடன் பிரச்சாரத் திற்கு வருகிறார்கள், போகின்றார் கள். தாங்களும் இருக்கின் றோம் என்கின்ற வருகையை பதிவு செய்வதே அவர்களது நோக்கம். அதன்பின் தேர்தல் தொடர்பாக எந்தவொரு பணி யும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.விலோ தனித்தனியாக டீம் போட்டு பணி செய்கின்றனர். அடிப்படையில் தே.மு.தி.க.விலிருந்து வந்து மா.செ.வானவர் என்பதால் தன்னுடைய வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்து கின்றார் கோவை தெற்கு மா.செ. தளபதி முருகேசன். இங்கே அனைவரும் தனித் தனியாக ஆவர்த்தனம் செய்வது கண்கூடாகத் தெரிகின்றது. அ.தி.மு.க. லிபா.ஜ.க. வாக்குகள் பிரிந்து விட்டால் தி.மு.க. சுலபமாக வெற்றிபெறும் என்கின்ற கணக்கில் அசால்டாக இருக்கின்றனர். நிர்வாகிகளிடையே உள்ள ஈகோக்களை சரி செய்து சாட்டையை சுழற்றினால் மட்டுமே தி.மு.க.விற்கு ஓரளவு வாய்ப்பிருக்கின்றது'' என்கின்றார் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த அன்பு.

Advertisment

அ.தி.மு.க. தரப்போ, "எங்களிடம் சீனியர், ஜூனியர் பிரச்சனை இருந்தாலும் அதனை தேர்தல் வேலைகளில் காட்டு வதில்லை. ஆனைமலை பேரூராட்சி உள்ளிட்ட 3 பேரூராட்சிகளி லும், 19 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி நிலை யானது. எங்களுடைய கட்டமைப்பும் வலுவானது. தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல் எங்களுக்கு பலமே." என்கின்றது.

"மோடி சர்க்கார், மக்களுக்கு கொடுத்த திட்டங்கள் எண் ணற்றவை' என ஒன்றிய அரசின் திட் டங்களைக் கூறி வாக்குகளை கவர்வதில் ஈடுப்பட்டு வருகின்றது பா.ஜ.க.

nkn130424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe