பாலியல் வல்லூறுகளால் வேட்டை யாடப்பட்ட நிர்பயாவிற்கு ஏற்பட்ட கொடூரத் தையும் தாண்டியது... "அண்ணா வலிக்குதுண்ணா... தாங்க முடியலண்ணா... பெல்ட்டால அடிக்காதீங் கண்ணா..." என்று துடிக்கத்துடிக்க வேட்டையாடப் பட்ட பெண்ணின் கதறல்கள்! தமிழகத்தில் ஒவ்வொருவரின் இதயத்தையும் நொறுங்கச்செய்தது இந்த சித்ரவதை!

தற்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த விவகாரத்தில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சபாநாயகர் அப்பாவு குமுறலோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ss

அவர் கூறுகையில், "2019 பிப்ரவரி 12ஆம் தேதி, கூட்டு பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண், அதுகுறித்த புகாரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார். அங்க உள்ள அதிகாரிங்க அவுகள மகளிர் காவல் நிலையத்துக்குப் போகச் சொன்னாங்க.

அந்த மனுவோட அங்க போன அந்தப் பெண்ண மகளிர் போலீஸ் அதிகாரிக, எஸ்.பி.கிட்ட போகச் சொல்ல. அந்தப் பெண் எஸ்.பி.யிடம் கொடுக்கப் போயிருக்கார். எஸ்.பி. பாண்டிய ராஜனோ புகாரை வாங்காமல், டி.எஸ்.பி.கிட்ட போய்க் குடுக்கச் சொன்னாரு. டி.எஸ்.பி.யோ அவங்கள மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கே போகச் சொன்னாரு. மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கே போச்சு. இப்படி பதினாலு நாட்களா இந்தப் புகார் மனு டிராவல் பண்ணியிருக்கு.

இதுக்கு இடையில, முதன்முதலா நக்கீரன் பத்திரிக்கை இந்த சம்பவத்தை ஆதாரத்தோட அம்பலப்படுத்தினதோட, தொடர்ந்து இத வெளிக் கொண்டுவந்து, கடும் நடவடிக்கையை வலியுறுத்தியது. அதனால் அதிர்ந்துபோன அந்த காவல் நிலையம், அதுக்கப்புறம் தான் கம்ப்ளைண்ட் பார்ட்டிய வரவழைச்சி ஃப்ரெஸ்ஸா ஒரு கம்ப்ளைண்ட வாங்குறாங்க. அதுக்குப் பிறகுதான் பிப்ரவரி 24ஆம் தேதி எப்.ஐ.ஆரே போடுறாங்க. 14 நாளா அலைக்கழிக்கப்பட்டு இந்தப் புகார் இப்டில்லாம் டிராவல் பண்ணிருக்கு. ஆனாலும் தொடர்ந்து நக்கீரன் தன் புலனாய்வுத் திறமையால இதில் நடந்த அவலத்தத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுட்டே வர, அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பிச்சது. அதன் நிமித்தமா தான் வழக்குப் பதிவு பண்றாக.

ஆரம்பத்தில விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி., முதன்முதலா சபரிராஜன் வீட்ல கம்ப்யூட்டரக் கைப்பத்திச்சி. அதுல முக்கிய தடயங்கள், ஆவணங்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்ட பெண்களின் படங்கள், அதிலும் முக்கியமா, நக்கீரன் அம்பலப்படுத்திச்சே... "அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க"ன்னு கதர்ற படம்லாம் கைப்பற்றப் பட்டிருக்கு.

நா அரசியலுக்காகச் சொல்லல. நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் வலுவாச் செயல்பட்டதன் விளை வாகத்தான், தமிழ் பெண் களின் அவலத்தைப் போக்கும் வகையில் ஒரு அருமையான தீர்ப்பு கெடைச்சிருக்கு'' என்றார்.

- ப.இராம்குமார்