"பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி' என ஒட்டுமொத்த தமிழக மக்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் வேளை யில் நம்மைத் தொடர்பு கொண்டார் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற நபர். “""நான் அமெரிக்காவுல வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். சொந்த வேலை காரணமா 2016-ல் பொள்ளாச்சிக்கு வந்தேன். பொள் ளாச்சியில் நடந்த அக்கிரமத்தையும் அநியாயத்தையும் நக்கீரன்ல தொடர்ச்சியா அம்பலப்படுத்திக்கிட்டு வர்றீங்க.

sரெண்டு வாரத்துக்கு முன்னால வந்த நக்கீரன்ல, பொள்ளாச்சியில இருக்குற ஒரு வங்கியின் அக்கவுண்ட் நம்பரைப் போட்டு, அதில் பணம் போடும் பெண்களைப் பத்தியும் எழுதியிருந்தீங்க. அந்த அக்கவுண்ட் நம்பரைப் பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டேன். நான் சில ஆடியோக் களை அனுப்புறேன், அத கேட்டுட்டு மறுபடியும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க''’எனக் கூறிவிட்டு, அந்த ஆடியோக்களையும் நமக்கு அனுப் பினார்.

முதல் ஆடியோவில் ஒரு பெண் குரல், தனக்கு எதிர்முனையில் பேசும் ரமேஷிடம், (நமக்கு ஆடியோ அனுப்பியவர்தான்) "சார், அவனால நான் சூசைட் பண்ணிக்கவும் போய்ட்டேன். உங்களாலதான் உயிரோடு இருக்கேன்'’என்றவாறு மூச்சடக்கி அழுகிறார்.

இரண்டாவது ஆடியோவில் அந்தப் பெண்ணிடம் பேசும் ரமேஷ், ""அவன் உங்ககூட ஸ்லீப் பண்ணனும்னு சொன்னானா''’எனக் கேட்ட தும், ""ஆமா சார்''’என தேம்பி அழுதவாறே சொல்கிறார் அந்தப் பெண்.

Advertisment

மூன்றாவது ஆடியோவில்’""என்னோட குழந்தைகளை நினைச்சாதான் கவலையா இருக்கு. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னோட வீடியோவை வச்சு மிரட்டுறான். என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னிடம் மட்டுமல்ல, நிறைய பெண்களிடம் பழகியிருக்கான்னு இப்பதான் தெரியுது. எனக்கு அம்மா இல்லன்னு சென்ட்டிமென்ட்டா பேசி என்னிடம் பழக ஆரம்பிச்சான்.

திடீர்னு ஒரு நாள் என்னிடம் ஐ லவ் யூன்னு சொன்னான். என்னடா இப்படிச் சொல்றேன்னு கேட்டதுக்கு, "உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா விட்ருங்க, எனக்கு பிடிச்ச உங்களை நினைச்சுக்கிட்டே இருப்பேன்'னு சொன்னான். ரெண்டுநாளா அவன் போன் பண்ணலைன்னதும் எதையே இழந்துட்ட மாதிரி இருந்துச்சு. அவனை பார்க்கணும்போல தோணுச்சு. அதுக்கப்புறம் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைமைக்கு ஆளானேன். "வீடு கட்றதுக்கு பணம் இல்ல, என்னை நீ லவ் பண்றது உண்மைன்னா என்னோட அக்கவுண்ட்ல பணம் போடு'ன்னு சொன்னான். மொதல்ல கெஞ்சிக் கேட்டு பணம் வாங்க ஆரம்பிச்சவன், "உன்னோட நிர்வாண வீடியோ இருக்கு'ன்னு மிரட்டியே பணம் வாங்க ஆரம்பிச்சுட்டான்''’’ என்ற அந்தப் பெண்ணிடம், "அவன் போன்ல இப்படி ஒரு வீடியோ இருக்குன்னு சைபர் க்ரைம்ல சொல்றேன்'’என ரமேஷ் பேசுவதுடன் அந்த ஆடியோ கட் ஆகிறது.

மூன்று ஆடியோக்களையும் கேட்ட பின் நாம் ரமேஷை தொடர்பு கொண்டோம். ""அந்த ஆடியோவில் பேசியவர் பேர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). "உன்னோட நிர்வாண வீடியோவை பொள்ளாச்சியில இருக்கும் என் ஃப்ரண்ட்ஸ்கள் பார்த்துட்டாங்க. நான் கேக்குற பணத்தை கொடுக்கலைன்னா ஊரே பார்க்கும்'னு மிரட்டியிருக்கான்.

Advertisment

அவன் யாருன்னா நக்கீரனில் எழுதியிருந்த ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுரேஷ். பொள்ளாச்சி ஜெயராமனின் சாதிக்காரனான இந்த சுரேஷுக்கு அ.தி.மு.க. கவுன்சிலரா இருந்த ஒருத்தரும் ரொம்ப சப்போர்ட். ஜெயராமன் மகன் பிரவீன் படித்த பி.எஸ்.ஜி. காலேஜில், அவருக்கு சீனியர் தான் இந்த சுரேஷ். இந்த சுரேஷிடம் மோசம் போனதில் என் மனைவி லேகாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருத்தி.

a

எனக்கு அரேஞ்சுடு மேரேஜ்தான். கல்யாணமாகி ஆண் குழந்தை பிறந்ததும், அமெரிக்காவுக்கு போகலாம்னு என் மனைவிகிட்ட சொன்னப்ப, "க்ரீன் கார்டு வரட்டும் போகலாம், அது வரை எங்க அம்மா வீட்லயே இருக்கேன்'னு சொன்னா. நானும் கிளம்பி அமெரிக்கா போய்ட்டேன். ஒரு நாள் என் அண்ணனோட பிரண்டு சுரேஷுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு, நீங்க இருந்த வாடகை வீட்ல இருந்தா அவனுக்கு வேலைக்குப் போக ஈஸியா இருக்கும்'னு சொன்னா. நானும் சரின்னுட்டேன். ஆனா சுரேஷோ என் மனைவி, குழந்தையுடன் பெங்களூரு போய் குடித்தனம் நடத்திருக்கான்.

நகை வாங்கணும்னு என் லேகா கேட்டவுடன் பணம் போட்டேன். ஒரு கட்டத்தில் இது தெரியவந்து ஃபேஸ்புக்கை பார்த்ததும் பகீர்னு ஆகிட்டேன். என் மனைவிட்ட கேட் டப்ப, அந்த சுரேஷ்கிட்டே மோதாதே, பெரிய போலீஸ் அதிகாரிகளெல்லாம் அவன் கையிலன்னு சொன்னாள். நீங்க போட்டிருந்த அக்கவுண்ட் நம்பர்ல என் மனைவியும் பணம் போட்டி ருக்கா. அந்த டஆஒஉ ஏஆசஏ-ஐ பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஒண்டிப் புதூர் போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணியும் பிரயோஜனம் இல்லை. இப்ப என் மனைவியை டைவர்ஸ் பண்ணிட் டேன்''’’ என்றதுடன் முடித்துக்கொண்டார்.

நாம் சுரேஷ்குமாரை தொடர்புகொண்ட போது, தெலுங்கில் பேசிய அவரது மனைவி, அவரிடம் ஃபோனைக் கொடுத்ததும், “""நீங்க எதுக்கு என்னைக் கூப்டுறீங்க, அதான் கோர்ட்ல கேஸ் நடக்குதுல்ல, அங்க நான் பதில் சொல் லிக்கிறேன்''’என போனை கட் பண்ணி விட்டார்.

-அருள்குமார்