ஏழு பேரை மன்னிப்பதற்கு ராகுல்காந்தி யார்? -சீமான் சீற்றம்!

seeman

ரோலில் வந்திருக்கும் ராஜீவ் கொலை வழக்கு - ஆயுள் கைதி ரவிச்சந்திரனை சந்திப்பதற்கு அருப்புக்கோட்டை வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நக்கீரனிடம் வெளிப்படுத்திய ஆதங்கம் இதோ...

seeman

""காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேமாட்டார்கள். எந்தக் கட்சி மத்தியில் அதிகாரத்துக்கு வந்தாலும், கர்நாடக தேர்தல் வெற்றியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் இப்போ

ரோலில் வந்திருக்கும் ராஜீவ் கொலை வழக்கு - ஆயுள் கைதி ரவிச்சந்திரனை சந்திப்பதற்கு அருப்புக்கோட்டை வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நக்கீரனிடம் வெளிப்படுத்திய ஆதங்கம் இதோ...

seeman

""காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேமாட்டார்கள். எந்தக் கட்சி மத்தியில் அதிகாரத்துக்கு வந்தாலும், கர்நாடக தேர்தல் வெற்றியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் இப்போது இருக்கின்ற பாரதிய ஜனதா அரசு தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாது. பிரதமர் இதுகுறித்து வாய் திறக்கிறாரா? சரி, மத்திய காங்கிரஸ் தலைமையின் கருத்தென்ன? ஒண் ணுமே கிடை யாது. ஏனென் றால், கர்நாடகத் தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி பேசு கிறதோ, அந்தக் கட்சி தோற்கும். காவிரி நீர் என்பது நமக்கு உயிர்ப் பிரச்சனை. அவர் களுக்கு அது அரசியல். இறை யாண்மை, தேசிய ஒருமைப்பாடு, உயர்ந்த நீதியை மதிப்பதெல்லாம் தமிழர்களுக்கு மட்டும்தான். மற்ற மாநிலங்களுக்கு கிடையாது.

ravichandranரவிச்சந்திரன் 27 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அவருக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். இனிமேல்தான் அவர் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். இவருக்கு மட்டுமல்ல. தம்பி பேரறிவாளனிலிருந்து தம்பி ராபர்ட் பயாஸ் வரைக்கும் எல்லாருக்குமே இதே பிரச்சனைதான். 161-வது விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவர்களை விடுதலை செய்வதற்கான உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக் கிறதா? இந்த முடிவு எடுப்பதற்குள் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கின்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? மேலே இருக்கிற பி.ஜே.பி. என்ன சொல்லுதோ அதைச் செய்யுது. ஒவ்வொரு நாளும் ஆட்சியை தக்க வைப்பதே இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களிடம் 7 பேரின் விடுதலை raghulgandhiகுறித்துப் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்களை மன்னிப்பதற்கு ராகுல் காந்தி யார்? நாங்கள்தான் அவரை மன்னிக்க வேண்டும். மொத்த இனத்தையும் கொன்று குவித்துவிட்டு, பிணமாக்கிவிட்டு, என்ன மன்னிக்கிறது? 10 ஆண்டு காலம் பதவியில் இருந்தபோது, மன்னித்து விடுதலை செய் திருக்கலாமே? தூக்குப் போடுகின்ற இடத்தில் கேமராவை வைத்தீர்களா? இல்லையா? ரசிக்க வேண்டும் என்பதற்காக. பாலச்சந்திரனைப் பிடித்து இலங்கை ராணுவம் வைத்திருந்தபோது, பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரும் உயிரோடு இருக்கக்கூடாது என்று சொன்னது யாரு? என்ன மன்னிக்கிறது? எதை மன்னிக்கிறது?''

-சி.என்.இராமகிருஷ்ணன்

seeman
இதையும் படியுங்கள்
Subscribe