2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்த தி.மு.க. தலைமை, தெற்கிற்கு என்.பெரியசாமியையும் வடக்கிற்கு கழுகுமலை சுப்பிரமணியனையும் மா.செ.வாக நியமித்தது. பெரியசாமியின் மறைவுக்குப் பின், அவரது மகள் கீதாஜீவன் வடக்கு மா.செ.வானார். தெற்கு மா.செ.வானார் அனிதா ராதாகிருஷ்ணன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/geethajeevan.jpg)
அனிதாவின் தீவிர ஆதரவாளரான, தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜோயல், கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக மற்றொரு துணைச்செயலாளரான அன்பில் மகேஷை அழைத்து வந்து தூத்துக்குடி நகரின் நான்கு இடங்களில் 65 அடி உயரத்தில் கட்சிக்கொடி ஏற்றி விழாவை நடத்தி, உதவிகளும் வழங்கினார்.
இந்த கொடிக்கம்பங்கள் ஆளும்தரப்பு கண்ணை உறுத்தவே, சடபுடவென கொடிக்கம்பத்தைத் தூக்கியது போலீஸ். இப்போது கோர்ட் படி ஏறியிருக்கிறார் ஜோயல். அந்தக் கதை அப்படி போய்க் கொண்டிருக்க... கொடிக்கம்பம் இருக்கும் இடத்தின் கதைதான் இப்போது உள்கட்சி விவகாரமாக வெடித்திருக்கிறது. ஜோயல் கொடி ஏற்றிய உப்பாற்று ஓடை ரவுண்டானா, எஃப்.சி.ஐ. குடோன் ஆகிய ஸ்பாட்டுகள் வடக்கு மாவட்டத்திலும் மற்ற இரண்டு இடங்கள் தெற்கு மாவட்டத்திலும் இருக்கின்றன.
ஜோயலின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு ஆஜரானார் தெற்கு மா.செ. அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் வடக்கு மா.செ. கீதாஜீவனோ ஆப்சென்ட்டாகிவிட்டார். ’""அடுத்து வரப்போகும் உட்கட்சித் தேர்தலில் வடக்கு மா.செ.வாகும் முயற்சியில் இப்போதே தனது ஆதரவாளர்களை இனம்காண ஆரம்பித்திருக்கிறார் ஜோயல். கீதாஜீவனும் தன் பங்கிற்கு வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டார். இதன் எஃபெக்ட்தான் ஜோயல் நிகழ்ச்சியை கீதாஜீவன் புறக்கணித்தது''’என்கிறார்கள் உள்நிஜம் தெரிந்த உ.பி.க்கள்.
ஜோயலிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, ""கீதாஜீவனிடம் தேதி கேட்டுத்தான் கொடி ஏற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். நிகழ்ச்சிக்கு முதல்நாள் இரவுகூட அவரின் வீட்டிற்குச் சென்று ஞாபகப்படுத்தினேன். ஏனோ அவர் வரவில்லை, இருந்தாலும் மீண்டும் அவரை அழைப்பேன். மற்றபடி மா.செ. பதவிக்காக இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை''’என்றார்.
கீதாஜீவனோ, ""கட்சியின் விதிப்படி அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏதோ பேருக்குக் கூப்பிட்ட மாதிரிதான் இருந்தது. நிகழ்ச்சிக்கான போஸ்டர்களில் எனது பெயரோ, படமோ இல்லை. பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா. எல்லாத்தையும் தலைமைக்குத் தெரியப்படுத்திட்டேன்''’என கொந்தளித்துவிட்டார்.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-23/geethajeevan-n.jpg)