ந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது மும்பையை நோக்கிய மராட்டிய விவசாயிகளின் பேரணி. ஆனால் தமிழக விவசாயிகள், இந்திய தலைநகர் டெல்லிவரை சென்று போராடியும் கண்டுகொள்ள ஆள் இல்லை. இந்நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக மாநாடு மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது த.வா.க.

velmurugan

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு மாநில மாநாடு, செயலாளர் பாபு தலைமையில்... வழக்கமாக அரசியல் கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடக்கும் திலகர் திடலில் நடந்தது. ஏனோ பேரணிக்கு அனுமதி கேட்கவில்லை. ஆனாலும் மாலைநேரம் நடந்த மாநாடு பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பச்சைத் துண்டுகளுடன் விவசாயிகளாக கலந்துகொண்டனர். மாநாட்டில் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் மற்றும் காவிரி பிரச்சினைக்காக உயிர்நீத்தவர்களின் படங்களைத் திறந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலியில் சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தினார்கள்.

வேல்முருகன் பேசும்போது... ""தமிழகத்தின் அனைத்து நிர்வாகங்களும் ஸ்தம்பித்து மக்கள் நிம்மதி இழந்து வாழ்கிறார்கள். இதை பெரிய கட்சிகள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கின்றன. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்துகிறது.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் ஆறுவார காலத்திற்குள் அமைக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை இணைத்து போராட்டம் நடத்துவோம். மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம். அப்போது தமிழக அரசு, தமிழக காவல்துறைக்கு போராட்டத்தை தடுக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும்.

velmurugan-meet

தமிழகத்தில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். தண்ணீர் வரும் என்று நம்பி, கடன் வாங்கி பயிர்செய்த விவசாயிகள் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு கடனையும் கட்டமுடியாமல் தற்கொலைவரை சென்றுள்ளனர்.

Advertisment

மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களை டெல்டா பகுதிகளிலிருந்து வாபஸ் பெறவேண்டும். கடலூர், அரியலூர், புதுகை, திருவாரூர், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை கைவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும். நெல், குவிண்டாலுக்கு ரூபாய் மூவாயிரமும், கரும்பு டன்னுக்கு ரூபாய் நான்காயிரமும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-இரா.பகத்சிங்