Advertisment

விலை போனதா திரிபுரா? செங்கொடி நிலத்தில் காவிக் கொடி!

tripura

முழுமையான முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துகளை வழங்குவதற்கு பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் நெருக்கமாக இருந்த நேரத்தில், ஜெ.வை மோடி வாழ்த்தினார். ஜெ. மீண்டும் முதல்வரானார்.

Advertisment

அதுபோலவே, வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கான தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையிலேயே "பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி' என்றார் பிரதமர் மோடி. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அதையே சொன்னார்.

Advertisment

modi-amitsha

இதில் மேகாலயாவில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்திலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. திரிபுராவில்தான் மோடி-ஷா மேஜிக் இடதுசாரிகளின் 25 ஆண்டுகால தொடர்ச்சியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியா முழுவதுமுள்ள தோழர்களையும் தோழமை சக்திகளையும் அதிரவைத்துள்ளது.

திரிபுரா வெற்றிக்காக பா.ஜ.க. கையா

முழுமையான முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துகளை வழங்குவதற்கு பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் நெருக்கமாக இருந்த நேரத்தில், ஜெ.வை மோடி வாழ்த்தினார். ஜெ. மீண்டும் முதல்வரானார்.

Advertisment

அதுபோலவே, வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கான தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையிலேயே "பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி' என்றார் பிரதமர் மோடி. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அதையே சொன்னார்.

Advertisment

modi-amitsha

இதில் மேகாலயாவில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்திலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. திரிபுராவில்தான் மோடி-ஷா மேஜிக் இடதுசாரிகளின் 25 ஆண்டுகால தொடர்ச்சியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியா முழுவதுமுள்ள தோழர்களையும் தோழமை சக்திகளையும் அதிரவைத்துள்ளது.

திரிபுரா வெற்றிக்காக பா.ஜ.க. கையாண்ட உத்திகள் மிகக்கேவலமானவை என்கிறார்கள் ஆட்சியை இழந்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகள். திரிபுரா மாநிலத்தில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே பா.ஜ.க. விலைக்கு வாங்கிவிட்டது. அதன்மூலம் தேர்தலைச் சந்திக்காமலேயே மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகியது. காங்கிரஸை ஒருபக்கம் ஊழல்கட்சி என்று குறை சொல்லிக்கொண்டே, அந்தக் கட்சியையே தனது கட்சியாக மாற்றியது. திரிபுரா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 44 பேர் காங்கிரஸ்காரர்கள்.

manicksargarஅதுமட்டுமன்றி, திரிபுராவில் தனிநாடு கோரி போராடும் பழங்குடியினர் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அந்தக் கட்சியின் உதவியோடு, பழங்குடியினருக்கு கேஸ் அடுப்பும் சிலிண்டரும் இலவசமாக வழங்கியது. வாக்காளர்களுக்கு செல்போன் வழங்கியது. மொத்தத்தில் கடந்த 2013 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததில் இருந்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான வாக்காளர்களை விலைபேசி வாங்குவதில் பா.ஜ.க. வெற்றிபெற்றுவிட்டது என்று மார்க்சிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

திரிபுராவில் 2013 சட்டமன்றத் தேர்தலில் இடதுமுன்னணி 48 சதவீத வாக்குகளுடன் 50 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 36 சதவீத வாக்குகளுடன் 10 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. பா.ஜ.க. வெறும் ஒன்றரை சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இடதுமுன்னணி 3 சதவீத வாக்குளை இழந்து 45 சதவீத வாக்குகளை தக்கவைத்துள்ளது. பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் வாக்குகளையும், பழங்குடியினர் மற்றும், அரசு எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் எளிமையான முதல்வர் எனப் பெயர்பெற்றவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல் 4 முறை முதல்வராகி, அரசை நடத்தியவருமான மார்க்சிஸ்ட் கட்சியின் மாணிக் சர்க்காரின் ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. “தேர்தல் களத்தில் வாக்குகளை வாங்கும் உத்திதான் முக்கியமானவை. மார்க்சிஸ்ட்கள் நேர்மையான ஆட்சியைத் தந்தார்கள். அதே நேரத்தில் திரிபுராவில் பழங்குடியின மக்களுக்கும் பழங்குடியல்லாத மக்களுக்குமான இடைவெளியைக் கவனிக்கத் தவறிவிட்டனர். இந்த கேப்பில்தான் பா.ஜ.க., ஊடுருவியிருக்கிறது. அதிருப்தியில் இருந்த பழங்குடியினரை தன் வசமாக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இப்படிப்பட்ட நுட்பமான பிரச்சினைகளில் மோடியும் அமித்ஷாவும் கவனம் செலுத்துவதன் விளைவுதான் 21 மாநிலங்களில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக்கட்சிகளின் ஆட்சியும் நடைபெறக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆர்.எஸ்.எஸ். மூலம் வளர்க்கப்பட்டவரும், தேர்தல் களத்தில் பா.ஜ.க.வை வலிமைப்படுத்தியவருமான பிப்லாப் தேப், புதிய முதல்வராகலாம் என்ற ஆலோசனை ஞாயிறுவரை நடைபெற்றது.

நாகாலாந்து மாநிலத்தில் அந்த மாநில ஆளுங்கட்சியான நாகா மக்கள் முன்னணி 29 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பா.ஜ.க. அணி 28 இடங்களைப் பெற்றுள்ளது. ஆட்சியைத் தீர்மானிப்பதில் ஒரு சுயேச்சை மற்றும் உதிரிக்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களை விலைக்கு வாங்குவது பா.ஜ.க.வுக்கு கஷ்டம் இல்லை என்றே கூறப்படுகிறது.

tripurabjp

மேகாலயாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், மற்ற சிறிய கட்சிகளின் உதவியோடு காங்கிரஸ் அரசு அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அகமது படேலையும், கமல்நாத்தையும் காங்கிரஸ் கட்சி மேகாலயாவுக்கு அனுப்பி இருக்கிறது.

ஆட்சியில் உள்ள மாநிலத்தில் அதைத் தக்கவைக்க காங்கிரஸ் போராடும் நிலையில், பா.ஜ.க.வோ தனது கட்சியே இல்லாத திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கி இன்று ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. நாகாலாந்திலும், மேகாலயாவிலும் அதே பாணியில் பா.ஜ.க. அரசாங்கத்தை எப்படியாவது அமைத்துவிடவேண்டும் என்பதே அமித்ஷாவின் வியூகம். அத்துடன் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. கால் ஊன்றியிருப்பதை முன்வைத்து, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை அமைத்துவிடவேண்டும் என்பதில் மோடியும் அமித்ஷாவும் படு தீவிரமாக இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் தேர்தல் வியூகங்கள் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நிறைய அதிர்ச்சி செய்திகளை முன்வைக்கின்றன.

-ஆதனூர் சோழன்

tripura Amitsha modi Manicksarkar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe