Advertisment

தகுதி புஷ்பவனத்துக்கு! பதவி பிரமிளாவுக்கா? -இசைப் பல்கலைக்கழகத்தில் நிறபேதம்!

anithakuppusamy

பிரிக்க முடியாதது? துணைவேந்தர் நியமனமும் சர்ச்சையும் என்றாகிவிட்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தற்போதைய துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

music

இந்தப் பல்கலைக்கழகம் தமிழ்வளர்ச்சித் துறையின்கீழ் வருகிறது. இதற்கான துணைவேந்தர் நியமனத்தை முதல்வர் முடிவு செய்வார். முன்னாள் முதல்வர் ஜெ. உயிருடனிருந்த போதும், இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக வீணை காயத்ரி துணைவேந்தராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சையெழுந்தது. அது பெரிய விவகாரமாகி, வீணை காயத்ரியின் அலுவலகத்துக்கு பூட்டுப்போடுமளவுக்கு விவகாரம்போனது.

Advertisment

இந்நிலையில்தான் அண்மையில் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரும் புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியுமான அனிதா குப்புசாமி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, “""அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க அம்மாவுக்குப் பின் யாருக்கும் தகுதியில்லை. அனைத்துத் தகுதியுமுள்ள என் கணவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு துணைவேந்தர் பதவி தருவதாகச் சொல்லி நம்பவைத்துவிட்டு, கடைசியில் கழுத்தறுத்துவிட்டார்கள். இது கொள்ளையர்களின் ஆட்சி''’எனக் குமுறினார்.

கடந்த ஓராண்டாகவே தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் துணைவேந்தர் பதவித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. 2017, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15-க்குள் துணைவேந்தர் பதவிக்கான தகுதி உள்ளவர்கள் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்ப

பிரிக்க முடியாதது? துணைவேந்தர் நியமனமும் சர்ச்சையும் என்றாகிவிட்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தற்போதைய துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

music

இந்தப் பல்கலைக்கழகம் தமிழ்வளர்ச்சித் துறையின்கீழ் வருகிறது. இதற்கான துணைவேந்தர் நியமனத்தை முதல்வர் முடிவு செய்வார். முன்னாள் முதல்வர் ஜெ. உயிருடனிருந்த போதும், இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக வீணை காயத்ரி துணைவேந்தராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சையெழுந்தது. அது பெரிய விவகாரமாகி, வீணை காயத்ரியின் அலுவலகத்துக்கு பூட்டுப்போடுமளவுக்கு விவகாரம்போனது.

Advertisment

இந்நிலையில்தான் அண்மையில் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரும் புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியுமான அனிதா குப்புசாமி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, “""அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க அம்மாவுக்குப் பின் யாருக்கும் தகுதியில்லை. அனைத்துத் தகுதியுமுள்ள என் கணவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு துணைவேந்தர் பதவி தருவதாகச் சொல்லி நம்பவைத்துவிட்டு, கடைசியில் கழுத்தறுத்துவிட்டார்கள். இது கொள்ளையர்களின் ஆட்சி''’எனக் குமுறினார்.

கடந்த ஓராண்டாகவே தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் துணைவேந்தர் பதவித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. 2017, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15-க்குள் துணைவேந்தர் பதவிக்கான தகுதி உள்ளவர்கள் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு வலைத்தளத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதற்கான விண்ணப்பத்தை வலைத்தளத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாமென சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி விண்ணப்பித்தார். துணைவேந்தர் பதவிக்காக அரசால் கேட்கப்பட்டிருந்ததற்கும் கூடுதலாகவே அவருக்குத் தகுதிகள் இருந்தன. துணைவேந்தராக வருபவர் கவின்கலையில் முனைவர் பட்டமோ அல்லது கௌரவ டாக்டர் பட்டமோ பெற்றிருக்கவேண்டும். குப்புசாமியோ, நாட்டுப்புறப்பாடலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம், சத்தியபாமா கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டம் என இரண்டையும் வைத்திருந்தார்.

கவின்கலையில் விருதுகள் பெற்றிருக்கவேண்டும். 2006-ஆம் ஆண்டு கலைஞரால் வழங்கப்பட்ட "கலைமாமணி' விருது, அகில இந்திய வானொலியின் "ஏ கிரேடு' தகுதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் "சங்கீத பூஷ்ணம்' விருது என விருதுகளுக்கும் குறைவில்லை. நாடறிந்த கலைஞனாகவும், தொழில்முறை கலைஞனாகவும், கவின்கலைக்கு தொண்டாற்றியவராகவும் இருக்கவேண்டும். இசையில் இரண்டு டாக்டர் பட்டம், பாடல்கள் இயற்றி இசையமைத்து பாடிய மக்களிசைப் பாடல்கள், 300-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள், சமூக சிந்தனையைத் தூண்டும் பாடல் குறுந்தகடுகள் 10, 3000-க்கும் அதிகமான மேடைக்கச்சேரிகள், மக்களிசைப் பாடல்கள் பற்றிய 5 நூல்கள் என இதிலும் கூடுதல் தகுதிகளையே பெற்றிருந்தார்.

anitha-kuppusamy

கவின்கலை பயிற்சியளித்திருக்கவேண்டும், அயல்நாட்டில் கவின்கலை நிகழ்ச்சி செய்திருக்கவேண்டும் என்பது தகுதி. ஆப்ரிக்கா, ஜப்பானைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளில் புஷ்பவனம் குப்புசாமி கச்சேரி செய்துள்ளார். தமிழிசை, தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த பணியில் 30 ஆண்டுகாலம் பணியிலிருந்து பயிற்சியளித்துள்ளார். அப்படியிருந்தும் புஷ்பவனத்தை துணைவேந்தர் பதவிக்குத் தேர்வு செய்யவில்லை. தேர்வுசெய்யப்படாதது குறித்து புஷ்பவனம் குப்புசாமி என்ன நினைக்கிறார்? ""ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபோதே, கவின்கலை பல்கலைக்கழகத்துக்கான அடுத்த துணைவேந்தர் பதவிக்கு என்னிடம் பயோடேட்டா கேட்டார். கார்டன் உதவியாளர் பூங்குன்றன் மூலம் அனுப்பினேன். அவர் மறைந்த நிலையில் முறைகேடாக துணைவேந்தர் பதவிக்கு பிரமிளா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கருப்புநிறத்துக்கும், நாட்டுப்புற கலைகளுக்கும் மதிப்பில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரே தகுதி அவர் பிராமணர். கர்நாடக சங்கீத வித்வான் ராஜம் அய்யரின் பேத்தி என்பதுதான். துணைவேந்தர் பதவிக்கான பெரும்பாலான தகுதிகள் அவரிடம் கிடையாது.

தேர்வுக் குழுவில் இருந்த மூன்றுபேரில் சுதா ரகுநாதன் மட்டுமே இசைத்துறையைச் சேர்ந்தவர். எஸ்.பி. தியாகராஜன் மருத்துவர். தங்கவேலு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இருவருமே கவின்கலைகளுக்குத் தொடர்பில்லாதவர்கள். ஆக, தேர்வுக் குழு அமைக்கப்பட்டவிதமே தவறு.

செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்கவேண்டுமென சொன்னார்கள். அப்போது 17 விண்ணப்பங்கள்தான் வந்தன. அதில் தேர்வான மூவரில் நானும் ஒருவன். இடையில் என்ன நடந்ததோ… விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளில் விண்ணப்ப காலம் மீண்டும் 30 நாள் நீட்டிக்கப்பட்டது. வீணை காயத்ரி மீண்டும் துணைவேந்தராகும் நோக்கத்தில் விண்ணப்பித்தார். அமெரிக்காவில் ஒரு டுபாக்கூர் பல்கலையில் 15 நாட்களில் டாக்டர் பட்டம் வாங்கிவந்தார். இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில், என்னைத் தவிர்ப்பதற்காக மேலும் 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

sudharaghunath-jagi

மொத்தமுள்ள 37 விண்ணப்பங்களிலிருந்து 5 பேரை தேர்வுசெய்தனர். அதில் வயலின் கலைஞர் லலிதா, அங்கயற்கண்ணி, பிரமிளா இவர்களுடன் நானும் இருந்தேன். அப்போதுகூட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் "துணைவேந்தர் பதவி உனக்குத்தான்' என நம்பிக்கை கூறினார். ஆனால் அடுத்த கட்ட தேர்வில், தேர்வுக்குழுவுக்கு தலைமை வகித்த பாடகி சுதா ரகுநாதன் பிரமிளாவைத் தேர்வுசெய்ய அழுத்தம் தந்துள்ளார்.

இந்த பிரமிளாவுக்கு ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் பரிந்துரையும், ஆர்.எஸ்.எஸ். சிபாரிசும் இருந்திருக்கிறது. பிற பல்கலைக்கழகங்கள் ஆளுநரின்கீழ் வரும். மாறாக, இசைப் பல்கலைக்கழகம் முதல்வரின் செல்வாக்குக்கு உட்பட்டது. எனவே, முதல்வர் எடப்பாடியைச் சென்று பார்த்து, ஜெ. இருந்தபோதே அவர் எனது பயோடேட்டாவை வாங்கியதை எடுத்துச் சொன்னேன். எடப்பாடியும் நம்பிக்கை கொடுத்தார்.

பிரமிளா, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தபோது வேல்ஸ் பல்கலைக்கழக பணியில் இருந்தார். துணைவேந்தர் பதவிக்கு வந்து இரண்டு தினங்களுக்குப் பின்பே அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதுவே விதிமீறல். இந்த நியமனம் செல்லாது''’என கொந்தளித்தார். தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழனுக்கும் தமிழக கலைகளுக்கும் மதிப்பில்லாததை சுட்டிக்காட்டினார் புஷ்பவனம் குப்புசாமி.

mafa-pandian

இந்நிலையில் தமிழ்ப் பற்றாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் பிரமிளா குருமூர்த்தி துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இசைப் பல்கலைக்கழகத்துக்கு தமிழிசை மற்றும் மக்கள் இசையில் வல்லமை பெற்றவர்களைத்தான் துணைவேந்தராக நியமிக்கவேண்டும். விதிமுறைகளை மீறி தமிழுக்கு அந்நியமானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென என குரல்கொடுத்து வருகின்றனர். சுதா ரகுநாதன், ஜக்கி வாசுதேவ் எனப் பலரும் கூட்டணி அமைத்து சதி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துறை தொடர்பான அமைச்சரான மாஃபா. பாண்டியராஜன், “"துணைவேந்தர் தேர்வு முறையாக நடைபெற்றுள்ளது' என்கிறார். ஆனால் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஆகியோர் "முறைகேடான தேர்வு' என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலா இருக்கிறது எடப்பாடி அரசு?

-அரவிந்த்

பல கோடி ரூபாய்!

கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தி தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. தேர்வுக்குழுவின் தலைவரான சுதா ரகுநாதனுக்கு கிளீவ்லாந்து பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் பல விருதுகளையும் பட்டங்களையும் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் பிரமிளா குருமூர்த்தி. இந்த நெருக்கத்தின் அடிப்படையில்தான் பிரமிளாவுக்கு அழுத்தமான சிபாரிசு செய்துள்ளார் சுதா என்று சொல்லப்படுகிறது. மேலும், பிரமிளா துணைவேந்தராகப் பொறுப்பேற்றவுடன் அமெரிக்க மாணவர்களுக்கு இசை கற்றுக்கொடுப்பதற்காக கிளீவ்லாந்து பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளார். இது தகுதித் தேர்வே அல்ல. பரஸ்பர கொடுக்கல்- வாங்கல் என விமர்சனம் செய்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

anitha kuppusamy jaggi sudharanganathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe