Skip to main content

தகுதி புஷ்பவனத்துக்கு! பதவி பிரமிளாவுக்கா? -இசைப் பல்கலைக்கழகத்தில் நிறபேதம்!

Published on 18/02/2018 | Edited on 20/02/2018
பிரிக்க முடியாதது? துணைவேந்தர் நியமனமும் சர்ச்சையும் என்றாகிவிட்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தற்போதைய துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குரல்கள் எழுந்துள்ளன. இந்தப் பல்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“எங்கள் இருவரையும் பிரிக்க பலர் முயற்சி செய்தனர்” -  அனிதா குப்புசாமி

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Anitha Kuppusamy Interview

 

நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் தமிழ் இசையுலகில் வெற்றிகரமாகக் கோலோச்சி வரும் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி  இருவரையும் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். 

 

அப்போது அனிதா குப்புசாமி  பேசியதாவது   “எந்த ஒரு பாடலையுமே சரியான முறையில் நாம் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தவறான அர்த்தம் கொண்ட பாடல்களைப் பாடுவதில்லை என்கிற கொள்கை எங்களுக்கு இருக்கிறது. இப்போதிருப்பவர்கள் நாம் சொல்லும் எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இவர் மீது ஒரு நெகட்டிவ் இமேஜ் விழுந்துவிட்டது. தற்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களுக்கு இளம் பாடகர்களிடம் வேலை வாங்குவது எளிதாக உள்ளது. பெரிய ஜாம்பவான்கள் பலர் தற்போது பாடாமல் இருக்கின்றனர். சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு நடிகராகவும் அவர் பெயர் பெற்றார். முதலில் அவர் நடிப்பதை நான் எதிர்த்தேன். அதன்பிறகு ஏற்றுக்கொண்டேன்”. 

 

எங்கள் வீட்டில் புதிய டெக்னாலஜியோடு கூடிய பொருட்கள் அனைத்தும் இருக்கும். அவை நம்முடைய வேலைகளை எளிமையாக்குகின்றன. நான் கேட்கும் அனைத்து மாற்றங்களையும் அவர் உடனே செய்து தருவார். வாஸ்து போன்ற விஷயங்களும் அவருக்கு அத்துப்படி. 25 வயதுக்குப் பிறகு தான் அவர் இசை கற்றுக்கொண்டார். ஆனால் குறைந்த காலத்தில் அவருடைய இசைஞானம் வளர்ந்ததற்கு அவருடைய கடினமான உழைப்பு தான் காரணம். என்னுடைய கணவருக்கு உலகமே நான் தான். என்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டார். சமையல் செய்து கொடுக்கச் சொல்லி எப்போதும் கேட்டதில்லை. அவர்தான் எனக்கு சமைத்துக் கொடுப்பார். சமூக வலைதளங்களில் தற்போது அனைவரையும் பற்றித் தவறாகப் பேசுகின்றனர். என்னுடைய நிறத்தை, சாதியை விமர்சிக்கின்றனர். 

 

இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் அதிகம் எதிர்கொண்டிருக்கிறோம். ஒரு மனைவிக்கு கணவனையும், கணவனுக்கு மனைவியையும் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். இதில் இவர்கள் யார் கருத்து சொல்ல? எங்கள் இருவரையும் பிரிக்க பலர் முயற்சி செய்தனர். வெறும் அனிதா என்றால் என்னை யாருக்கும் தெரியாது. அனிதா குப்புசாமி என்றால் தான் தெரியும். அந்தப் பெருமையைக் கொடுத்தது அவர்தான். நாங்கள் இந்த நிலைக்கு வந்ததற்கு எங்களுடைய உழைப்புதான் காரணம். எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.”

 


 

Next Story

ஜக்கிக்கு மூக்குடைப்பு! தூக்கப்பட்ட படம்! 

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Real estate advertisement of jaggi

 

ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் இரண்டு நாட்களுக்கான மாநாடு மற்றும் பொருட்காட்சி மார்ச் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பீளமேடு PSG வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக ஜக்கியை அழைத்துள்ளதாக நேற்று முன்தினம் ‘தி இந்து’ தினசரி நாளிதழில் ஜக்கி ஃபோட்டோவோடு ஒரு முழுப் பக்க விளம்பரத்தை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள்  கொடுத்திருந்தார்கள். 

 

Real estate advertisement of jaggi

 

இந்நிலையில், ஈஷாவில் சிறைப்பட்டிருக்கும் தன் இரு மகள்களுக்காகவும் ஜக்கிக்கு எதிராகவும் சட்டப் போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகியை தொடர்பு கொண்டு ‘நிகழ்ச்சிக்கு 420 ஜக்கியை அழைத்தால் அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் சார்பாக நிகழ்ச்சி நடைபெறும் PSG வளாகத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

Real estate advertisement of jaggi
ஜக்கி படம் தூக்கப்பட்ட விளம்பரம்  

 

அவரின் எச்சரிக்கையை அடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள், பேராசிரியர் காமராஜை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பேசிய பேராசிரியர் காமராஜ், “தந்தை பெரியார் திராவிட கழக  ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (16ம் தேதி) ஆளுநருக்கு சாம்பல் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.


இதற்கிடையே அதே இந்து தினசரி நாளிதழில் இன்று (16.03.2023) வந்த ஒரு முழுப் பக்க விளம்பரத்தில் 420 ஜக்கியின் ஃபோட்டோ இல்லாமல் அதே ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் இரண்டு நாட்களுக்கான மாநாடு மற்றும் பொருட்காட்சி குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இது நமது இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதேபோல் ஜக்கி எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.