Advertisment

தி.மு.க. வளரக்கூடாது! ஓ.பி.எஸ்.ஸுக்கு மோடி அட்வைஸ்! -நத்தம் சொல்லும் நிலவரம்!

nathamviswanathan

சிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பல நிர்வாகிகள் நின்றனர். இ.பி.எஸ். உடனான இணைப்புக்குப் பிறகு துணைமுதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பி.எஸ். வந்தவுடனே தனது ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டார் என்ற பேச்சு பரவலாக எதிரொலிக்கிறது.

Advertisment

இந்தநிலையில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் ஒரு மினி பேட்டியைத் தொடர்ந்தோம்.

nathamviswanathanநக்கீரன் : பிரதமர் மோடி சொன்னதுனாலதான் இணைந்தேன் என ஓ.பி.எஸ். வெளிப்

சிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பல நிர்வாகிகள் நின்றனர். இ.பி.எஸ். உடனான இணைப்புக்குப் பிறகு துணைமுதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பி.எஸ். வந்தவுடனே தனது ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டார் என்ற பேச்சு பரவலாக எதிரொலிக்கிறது.

Advertisment

இந்தநிலையில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் ஒரு மினி பேட்டியைத் தொடர்ந்தோம்.

nathamviswanathanநக்கீரன் : பிரதமர் மோடி சொன்னதுனாலதான் இணைந்தேன் என ஓ.பி.எஸ். வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரே?

விசுவநாதன் : அது உண்மைதான். பிரதமரைப் பார்க்கச் செல்லும்போது நானும்தான் போயிருந்தேன். அப்பொழுது "தி.மு.க.வை வளரவிடக்கூடாது, அதனால் இரு அணிகளும் இணையுங்கள். சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிவிடுங்கள்' என பிரதமர் மோடி சொன்னார். அதைத்தான் அண்ணன் ஓ.பி.எஸ். இப்போது பேசியிருக்கிறார்.

Advertisment

நக்கீரன் : பிரதமர் மோடி, தி.மு.க. வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவராக இருந்திருந்தால் கலைஞரிடம் நலம் விசாரிக்கப் போயிருப்பாரா?

விசுவநாதன் : எதற்காகச் சந்தித்தாரோ? ஆனால் அவர் சந்தித்ததால்தான், பா.ஜ.க.-தி.மு.க. கூட்டணி ஏற்பட்டுவிடும் என்ற பயம் ஆர்.கே.நகர் சிறுபான்மை வாக்காளர்களுக்கு ஏற்பட்டது. அதனால்தான் தி.மு.க. ஜாமீன் தொகை இழந்தது.

நக்கீரன் : ஓ.பி.எஸ். துணைமுதல்வராக ஆன உடனே தர்மயுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த உங்களைப் போன்றவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டார் என்ற பேச்சு அடிபடுகிறதே?

விசுவநாதன் : அப்படியெல்லாம் இல்லை. போனில் அடிக்கொருக்க பேசுகிறார். பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்துச் சொல்லப்போனேன். மற்றவர்களிடம் பேசுகிறாரா என்று தெரியாது.

நக்கீரன் : மந்திரி திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் "ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு ஒண்ணும் செய்யக்கூடாது' என்று சொல்கிறார்களாமே?

விசுவநாதன் : அம்மா ஆட்சியில் முப்பெருந்துறை அமைச்சராக இருந்து கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள்வரை அவர்களுடைய கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுத்தேன். அதுபோல் இப்பவும் எதிர்த்துப் போகும் கட்சிக்காரர்களிடம் அப்படிப் பேசுகிறார்கள். அது என் காதிற்கும் வந்தது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நக்கீரன் : உங்கள் துணைவியார் சென்னையில் ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்றபோது அங்கு வந்த டி.டி.வி. துணைவியாரான அனுராதா, உங்கள் துணைவியாரைப் பார்த்து "அண்ணனை எங்க அணியில் சேரச்சொல்லுங்கள்' என வலியுறுத்தியதாக பேச்சு அடிபட்டு வருகிறதே?

விசுவநாதன் : பொய்யான தகவலைப் பரப்பியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அம்மா வளர்த்த கட்சியில்தான் இருப்பேன். எனக்கு கட்சிதான் முக்கியம். டி.டி.வி. பக்கமெல்லாம் போகமாட்டேன்.

-சந்திப்பு : சக்தி

kalaingar modi natham viswanathan
இதையும் படியுங்கள்
Subscribe