Advertisment

உளறும் எச்.ராஜா! -கொந்தளிக்கும் தலித் தலைவர்கள்!

hraja

வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகும் இன்னும் வேண்டும் என்பது போலவே செயல்பட்டுவருகிறார் எச்.ராஜா.

Advertisment

நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒட்டன்சத்திரம் வந்த எச்.ராஜா, ""தி.க.வுக்கு முன்னோடியான நீதிக்கட்சி வெளியிட்ட அரசாணையில், தமிழ்மொழி பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள் "ஆதி திராவிடர்கள்' என அழைக்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறது. தெலுங்கு பேசுபவர்கள் "ஆதி தெலுங்கர்' என்றால் தமிழ் பேசும் தாழ்த்தப்பட்டவர்களை "ஆதி தமிழர்கள்' என்றுதானே கூறியிருக்க வேண்டும்'' என பேச... ராஜாவுக்கு எதிராக கொந்

வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகும் இன்னும் வேண்டும் என்பது போலவே செயல்பட்டுவருகிறார் எச்.ராஜா.

Advertisment

நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒட்டன்சத்திரம் வந்த எச்.ராஜா, ""தி.க.வுக்கு முன்னோடியான நீதிக்கட்சி வெளியிட்ட அரசாணையில், தமிழ்மொழி பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள் "ஆதி திராவிடர்கள்' என அழைக்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறது. தெலுங்கு பேசுபவர்கள் "ஆதி தெலுங்கர்' என்றால் தமிழ் பேசும் தாழ்த்தப்பட்டவர்களை "ஆதி தமிழர்கள்' என்றுதானே கூறியிருக்க வேண்டும்'' என பேச... ராஜாவுக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள் தலித் சமூகத் தலைவர்கள்.

Advertisment

ஆதி திராவிடர்கள் குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவரும், மூத்த தலித் சமூக தலைவருமான இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசனிடம் பேசியபோது, ""நீதிக்கட்சி வந்த பிறகுதான் "ஆதி திராவிடர்கள்' என தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெயர் வைத்ததாகவும், அவர்களை "ஆதி தமிழர்' என அழைக்க வேண்டியதுதானே என்றும் எச்.ராஜா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. 75 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாகாண சபையில் இப்பிரச்சனைகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டபோது, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரும் பகுத்தறிவுச் சிந்தனையாளருமான அயோத்திதாச பண்டிதர், அன்றைய காலகட்டத்திலேயே இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதாவது, நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களாக இருந்தவர்கள், பிராமணரல்லாதோர் சங்கம் துவக்கியபோது, "அவர்களை எதிர்க்க அவர்களது பெயரைத் தாங்கியே அமைப்பை கட்டியமைக்கணுமா? நமக்கென்று சுயமில்லையா? அடையாளம் இல்லையா?' என திராவிட சிந்தனைகளையே கேள்வி எழுப்பி, "ஆதி திராவிடர்கள்' என நெடுங்காலமாக இருந்ததை பல ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் அயோத்திதாசர். அதனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதிக் கட்சிதான் "ஆதி திராவிடர்கள்' என பெயர் வைத்ததாக ராஜா சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

சுமேரியர், மங்கோலியர், திராவிடர், ஆரியர் என வகைப்படுத்தப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட மக்களை "பூர்வீக திராவிடர்கள்' என்றும், "பூர்வீக பௌத்தர்கள்' என்றும் வரலாற்று மொழி ஆய்வு அறிஞர்கள் பலரும் 120 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக இருந்த திவான்பகதூர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், தந்தை சிவராஜ் ஆகியோர் சென்னை மாகாண சபையிலும், பெருந்தலைவர் எம்.சி.ராஜா மத்திய மாகாண சபையிலும் ஆதி திராவிடர்களின் வரலாறுகளை விவாதித்து இதனை பதிவு செய்திருக்கிறார்கள். ஆதி திராவிடர்களின் வரலாற்றை திரித்து திசைதிருப்பி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே மோதலை உருவாக்குவதே எச்.ராஜா பேச்சின் பின்னணி. வரலாறு தெரியாமல் உளறும் எச்.ராஜாவும் பா.ஜ.க.வும் எங்களின் அடையாளங்களை இனியும் தவறாக சித்தரித்தால் அவர்கள் நடமாட முடியாது'' என எச்சரிக்கிறார்.

-இளையர்

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe