Advertisment

அலறிய அரசாங்கம்! திணறடித்த தி.மு.க. கூட்டணி! -தமிழக மக்கள் "பந்த்'!

dmkprotest

ட்சிகள் நடத்தும் "பந்த்' என்றாலே கடுப்பாகும் பொதுமக்கள், நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு முழு அடைப்புக்கு 90% ஆதரவு கொடுத்ததை ஏப்ரல் 5-ந் தேதி தமிழகம் முழுவதும் காண முடிந்தது.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் சூழலில், கடந்த 5-ஆம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

dmkprotest

உளவுத்துறை கண்ணில் மண்

தலைமைக்கழக நிர்வாகிகள் முதல் பகுதிச் செயலாளர்கள்வரை அனைவரையும் வைத்து ஒரேநேரத்தில் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி சென்னையைத் திணறவைத்தனர் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர். முழு அடைப்பு போராட்டத்தின்போது, ஸ்டாலின் எங்கு போராடவிருக்கிறார் என்பதை கடைசிவரை தி.மு.க. தலைமை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டது.

Advertisment

போராட்ட தினத்தன்று சென்னை அண்ணாசாலையில் மறியல் செய்யப்போவதாக செய்திகள் பரவின. மொத்த காவல்துறையும், உளவுத்துறையும் அண்ணாசாலையில் குவிந்தது. குறைந்தளவில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை போராட்டக்காரர்கள் சிறைப்பிடிக்க. காவலர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பிவைத்தனர். அப்போது ராணுவ வண்டியொன்று வர... அதையும் மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

காலை 9:30 மணியளவில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.நே.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அபுபக்கர், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா உள்ளிட்ட தலைவர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

எப்போதும் நடைபெறுவதுபோல மறியல் போராட்டம் முடிந்தபின்னர் கைதாகிவிடுவார்கள் என்றுதான் காவல்துறை அதிகாரிகள் நினைத்துக்கொண்டு, வாகனத்தை ரெடியாக வைத்திருந்தனர். கைதுசெய்யத் தயாராக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெரினாவை நோக்கி தலைவர்களும் தொண்டர்களும் நடக்கத் தொடங்கவே ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ச்சியடைந்தது.

மெரினாவை நெருங்கவிடக்கூடாது என்று காவல்துறை தடுப்பரண்களாலும் வாகனங்களாலும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தது.

ட்சிகள் நடத்தும் "பந்த்' என்றாலே கடுப்பாகும் பொதுமக்கள், நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு முழு அடைப்புக்கு 90% ஆதரவு கொடுத்ததை ஏப்ரல் 5-ந் தேதி தமிழகம் முழுவதும் காண முடிந்தது.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் சூழலில், கடந்த 5-ஆம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

dmkprotest

உளவுத்துறை கண்ணில் மண்

தலைமைக்கழக நிர்வாகிகள் முதல் பகுதிச் செயலாளர்கள்வரை அனைவரையும் வைத்து ஒரேநேரத்தில் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி சென்னையைத் திணறவைத்தனர் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர். முழு அடைப்பு போராட்டத்தின்போது, ஸ்டாலின் எங்கு போராடவிருக்கிறார் என்பதை கடைசிவரை தி.மு.க. தலைமை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டது.

Advertisment

போராட்ட தினத்தன்று சென்னை அண்ணாசாலையில் மறியல் செய்யப்போவதாக செய்திகள் பரவின. மொத்த காவல்துறையும், உளவுத்துறையும் அண்ணாசாலையில் குவிந்தது. குறைந்தளவில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை போராட்டக்காரர்கள் சிறைப்பிடிக்க. காவலர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பிவைத்தனர். அப்போது ராணுவ வண்டியொன்று வர... அதையும் மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

காலை 9:30 மணியளவில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.நே.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அபுபக்கர், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா உள்ளிட்ட தலைவர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

எப்போதும் நடைபெறுவதுபோல மறியல் போராட்டம் முடிந்தபின்னர் கைதாகிவிடுவார்கள் என்றுதான் காவல்துறை அதிகாரிகள் நினைத்துக்கொண்டு, வாகனத்தை ரெடியாக வைத்திருந்தனர். கைதுசெய்யத் தயாராக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெரினாவை நோக்கி தலைவர்களும் தொண்டர்களும் நடக்கத் தொடங்கவே ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ச்சியடைந்தது.

மெரினாவை நெருங்கவிடக்கூடாது என்று காவல்துறை தடுப்பரண்களாலும் வாகனங்களாலும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தது. போராட்டக் குழுவினர் அதைத் தூக்கி எறிந்துவிட்டு நடக்கத் தொடங்கினர். அதிவிரைவுப் படை மூலம் கூட்டத்தைத் தடுக்க முற்பட்டனர். காவல்துறை உயரதிகாரிகள் பலரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், தடுப்புகளை அகற்ற முயன்றவர்களை இணை ஆணையர் அன்பு அடித்துவிரட்டக் கூறினார். இதைப் பார்த்த தி.மு.க. தொண்டர்கள் எதற்கு அவர்களை அடிக்கச் சொல்கிறீர்கள் என்று அவரைச் சூழ்ந்துகொண்டனர். அனுப்பிய காவலர்களை திரும்ப வரச்சொன்ன பின்னரே அங்கிருந்து தொண்டர்கள் நகர்ந்துசென்றனர்.

அத்துமீறல்- குண்டுக்கட்டு!

போராட்டக்காரர்கள் மத்தியிலிருந்து திடீரென வந்த கல், கூடுதல் துணைஆணையர் குமாரின் தலையில் பட்டு காயம் ஏற்படுத்தியது. அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அதிவிரைவுப் படையைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கல்தாக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மெரினாவில் உழைப்பாளர் சிலையருகே அமர்ந்த தலைவர்களைத் தொடர்ந்து தொண்டர்கள் கூட்டமும் சாலைமறியலில் அமர்ந்தது. சிறிது நேரம் பொறுத்திருந்த காவல்துறை போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தொடங்கினர். உயரதிகாரிகளைக் கொண்டு ஸ்டாலினை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றினர்.

தலைவர்களை ஏற்றிய வண்டியை நகரவிடாமல் வண்டியின்முன் போராட்டக்காரர்கள் அமரவே அதிவிரைவுப் படையினர் ரொம்பவே சிரமப்பட்டனர். கடைசியில் போலீஸ் வேன் மீது கட்சிக் கொடிகளுடன் தொண்டர்கள் ஏறி நிற்க, வேனின் முன்னும் பின்னும் டூவீலர்களில் தொண்டர்கள் அணிவகுக்க புரசைவாக்கத்தில் ஒரு மண்டபத்தில் தலைவர்கள் காவல் வைக்கப்பட்டனர். தொண்டர்களை பல்வேறு இடங்களில் அடைத்து வைத்தனர். அதிகவெயில் காரணமாக மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியன் உட்பட பலர் மயங்கினர்.

dmkprotest

வெறிச்சோடிய டெல்டா

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வர்த்தகர்களே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர். தனியார் பேருந்துகள் முற்றிலும் இயங்காத நிலையில், அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் பயணிகளின்றி ஓடிக்கொண்டிருந்தன. தஞ்சை மாவட்டத்தில் 89 இடங்களில் சாலை மறியல்கள் நடந்தன. 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 5000-க்கும் அதிகமான பேர் கைதாகினர். தஞ்சையில் ரயில் மறியலுக்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்ட நிலையில், அதைத் தடுக்க காவல்துறை ஆயத்தமாக இருந்தது. ஆனால் ரயில்வே நிலையத்துக்கு ஒரு கிலோமீட்டர் முன்பாக கணபதி நகரிலே சி.பி.எம். மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் ரயிலை மறித்துவிட, காவல்துறை ஏமாந்துபோனது. தஞ்சை மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ளே புகுந்த நாம் தமிழர் கட்சியினர், அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பரபரப்பாக்கினர். தஞ்சாவூரில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராட வந்தது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

திருவாரூரில் 41 இடங்களில் நடந்த சாலைமறியலில் 3500-க்கும் அதிகமான பேர் கைதாகினர். திருவாரூரில் போராட்டத்துக்கு நடுவில் மறைத்து எடுத்துவந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தி.மு.க. மோகன், போலீசாராலும் போராட்டக்காரர்களாலும் சரியான சமயத்தில் தடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 58 இடங்களில் சாலை மறியல்கள் நடந்ததில், 4000 பேர் கைதாகினர். போராட்டத்தில் கைதாகி மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் மதியத்துக்குமுன்பே அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தனர். எதிர்பாராமல் விசிட் வந்த எஸ்.பி. இதைக் கவனித்து இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை ஆர்.ஆருக்கு மாற்றினார்.

dmkprotest

பொங்கிய தென்மாவட்டம்

வைகை பாயும் மதுரைக்காரர்கள், தமிழ் மண் மீதான பாசத்தால்... காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற முழு அடைப்புக்கு ஆதரவாகத் திரண்டனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டன.

தி.மு.க.வின் மா.செ.க்கள் தளபதி, வேலுச்சாமி, ஜெயராமன் தலைமையிலான கூட்டத்துடன், வி.சி.க.வின் பாண்டியம்மா, ஆற்றலரசு தலைமையிலான கூட்டமும், தோழமைக் கட்சியினரின் கூட்டமும் ரயில் நிலையத்திற்குள் புகுந்து, புறப்படத் தயாராக இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். ஒரு மணி நேரத்துக்கு அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. புறநகரில் மூர்த்தி தலைமையில் போராட்டக்காரர்கள் ஊமச்சிகுளத்தில் அதிரடி கிளப்பினர்.

தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் பதாகைகளுடன் பேரணியாக வந்தது... மாவட்ட காவல்துறையை மட்டுமின்றி... கல்வித்துறை மேலிடத்தையும் அதிரவைத்தது.

திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி தலைமையில் தோழமைக் கட்சியினர் 3000-க்கும் அதிகமானோர் திரண்ட நிலையில் பேரணியை இடையில் தடுத்தது காவல்துறை. இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட, விஷயம் ஐ.ஜி. காதுவரை சென்று பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டது. வாணி விலாஸ் அருகே பேரணி, பஸ் மறியலில் ஈடுபட காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கியது.

நெல்லையில் அனைத்துக் கட்சியினர் பங்குபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 600 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி, அம்பை, சங்கரன்கோவில் என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரயில் போராட்டமும் கைது நடவடிக்கையும் தொடர்ந்தன. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் தூத்துக்குடியும், காவிரிப் போராட்டத்தில் பங்குபெறத் தவறவில்லை.

திரண்ட பத்திரிகையாளர்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் வெயிலைப்போல போராட்டமும் கொதிப்பாகவே இருந்தது. தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க, முஸ்லீம் லீக், த.ம.மு.க., என பல கட்சித் தொண்டர்களும் போராட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். விழுப்புரத்தில் பொன்முடி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதாகினர். வடக்கு மா.செ. மஸ்தான் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்னொரு புறம் கைதாகினர்.

dmkprotest

உளுந்தூர்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட 200 பேரை காவல்துறை சிறைவைக்க, அவர்களை விடுவிக்கச் சொல்லி ஒ.செ. வைத்தியநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சின்னசேலத்தில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக கைதான மூன்று பேரை விடுவிக்கச் சொல்லி தெற்கு மா.செ. அங்கயற்கண்ணி, எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தினர். பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை அடையாளம் காட்டச்சொல்லி பத்திரிகையாளர் ஒருவரைக் கேட்க, அடையாளம் சொல்ல மறுத்தவரை தியாகதுருவம் காவல் நிலையத்தில் போலீசார் அடைத்து வைத்த கேலிக்கூத்தும் நடந்தது. பிறகு பத்திரிகையாளர்கள் திரண்டுவந்து வாக்குவாதம் செய்தபின் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல்போய், பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையில் 24 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசு அலுவலகங்களை பூட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவுடையார்கோவிலில் போராட்டத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த தி.மு.க. தொண்டர் சாம்பான் திடீரென மயங்கிவிழுந்து மரணமடைந்தது சோக உணர்வைத் தூண்டியது.

கடைமடையில் கடையடைப்பு

காவிரி பாசனத்தின் கடைமடையான புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டம் வீரியமாக நடைபெற்றது. மத்திய அரசு மீது வழக்குத் தொடர தடையாக இருக்கும் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை இளைஞர் காங்கிரஸ் முற்றுகையிட முயன்றது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூரில் 21 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு, கோவையில் கைதான தி.மு.க.வினர் "சரக்கு' அடிக்க உரிமைகோரி போலீசாரிடம் மோதியது, கரூரில் பெண் உறுப்பினரிடம் தகாத முறையில் நடந்ததாக வெளியான குற்றச்சாட்டு என விரும்பத்தகாத சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழ்ந்திருந்தாலும், பரந்த அளவில் தி.மு.க. தன் பழைய வலிமையைக் காட்டி மத்திய-மாநில அரசுகளை, தோழமைக் கட்சிகளின் துணையுடன் அதிரவைத்துள்ளது. "சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்' என்ற அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியே இதற்குச் சான்று.

மொத்தத்தில்... காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், தமிழ்நாட்டின் அதிருப்தி அனைத்துக் கட்சியினரின் முழு அடைப்புப் போராட்டம் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறதென்றே சொல்லவேண்டும். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க, பல இடங்களில் நூற்றுக்கணக்கானோரை கைது செய்யாமல் விட்டுச்சென்றது காவல்துறை. அப்படியும் தனது கணக்குப்படியே 85,000 பேரை கைதுசெய்து விடுதலை செய்திருக்கிறது தமிழக காவல்துறை. சாக்குப்போக்கு சொல்லும் மத்திய அரசும், மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டும் மாநில அரசும் இனியாவது விழிக்குமா பார்க்கலாம்.

-சி.ஜீவாபாரதி, எஸ்.பி.சேகர், பரமசிவன், சக்தி, க.செல்வகுமார்,

து.ராஜா, அண்ணல், இரா.பகத்சிங், சுந்தரபாண்டியன்

கெத்து காட்டிய பெண் உ.பி.!

dmk-protest

காலை 9 மணிக்கே ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்துவிடவேண்டுமென தி.மு.க. ந.செ. ஆறுமுகம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆம்பூர் 28-வது வார்டைச் சேர்ந்த நகர மகளிரணி துணைச்செயலாளர் 54 வயது தெய்வநாயகி அனைவருக்கும் முன் 8:30 மணிக்கே ஆஜராகியிருந்தார். திருப்பத்தூரிலிருந்து வேலூர் சென்ற அரசு விரைவுப்பேருந்து பேருந்து நிலையத்துக்கு வெளியே ஆட்களை ஏற்றிக்கொண்டு வர... தனிஆளாய் சாலையின் குறுக்கே இறங்கி பேருந்தை மறித்தார். அதைப் பார்த்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். பின்னர், ரயில் மறியலிலும் கலந்துகொண்டு கைதானார். காட்சி ஊடகங்களால் வைரலான தெய்வநாயகியின் ஆர்வத்தையும், உறுதியையும் கெத்தையும் கேள்விப்பட்ட ஸ்டாலின், தெய்வநாயகியை சென்னைக்கு அழைத்துவரச் செய்து நேரில் பாராட்டினார்.

dmk cauvery protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe