Advertisment

மோடிக்கு மாற்று ராகுல்! ரஜினிக்கு எம்.ஜி.ஆர். உதவி! -விவரிக்கும் திருநாவுக்கரசர்!

thirunavukarasar

ந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து, காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மூன்றாம் அணி அமைப்பதற்கான வேலைகளை மாநிலக் கட்சிகள் மேற்கொள்கின்றன. இடதுசாரிகள் நெருங்க மறுக்கிறார்கள். தமிழகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகி வருகின்றன. இந்தச்சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசரிடம் கேள்விகளை அடுக்கினோம்.

Advertisment

thirunavukarasar

2014-ஆம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்தே வருவது அதன் வீழ்ச்சியாகத்தானே பார்க்கப்படுகிறது?

திருநாவுக்கரசர்: பஞ்சாபில் பா.ஜ.க.தானே ஆட்சியில் இருந்தது. அங்கே இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ்தான் மீண்டும் வெற்றிபெறப் போகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. குஜராத் என்பது மோடி, அமித்ஷா, அதானியின் சொந்த மாநிலம். அரசியல் மற்றும் பண பலத்தால் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க.விற்கு இடங்கள் குறைந்திருக்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் கூடியிருக்கிறது. தேர்தல் வரும்போது மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது. சோனியா தலைமையைத் தொடர்ந்து, ராகுல்காந்தி பொறுப்புக்கு வந்தபிறகு, காங்கிரஸ் வெற்றிப் படிக்கட்டில் ஏறி வருகிறது.

Advertisment

முந்தைய காங்கிரஸ் ஆட்சி

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களுக்காக உங்கள் கட்சிப் பிரமுகர்களும் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து கைது செய்யப்படுவது இமேஜை பாதிக்காதா?

திருநாவுக்கரசர்: பா.ஜ.க. ஆட்சிக்கோ, கட்சிக்கோ விரோதமாக இருக்கக்கூடிய மம்தா தொடங்கி நாராயணசாமிவரை இருக்கின்ற மாநில முதல்வர்களாக இருக்கட்டும், மாயாவதி -முலாயம் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம், அவரின் மகன் கார்த்திசிதம்பரம் உட்பட பலரின் அரசியல் செயல்பாட்டை முடக்கும் வகையிலும், பழிவாங்கும் நோக்கிலும் இடையூறை ஏற்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கிலும்... அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பா.ஜ.க. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கையை அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் வழக்குமன்றங்களில் சந்தித்து வருகிறார்கள்.

rajini

வங்கிப் பணத்தை மோசடி செய்த பலரும் தற்போது தலைமறைவாகியிருக்கிறார்களே?

திருநாவுக்கரசர்: நீரவ்மோடி உட்பட பலரும் வங்கியில் ஊழல் செய்திருப்பதுடன் தலைமறைவாகவும் இருக்கிறார்கள். இன்னும் பலர்மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்த அரசு ஏழைகளின் பணத்தை எடுத்து பணக்காரர்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாகவும், வசதியானவர்களைத் தப்ப வைக்கக்கூடிய அரசாகவும்தான் இருக்கிறது. "பணக்கார ஆட்சியாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடி பதில் சொல்லவே இல்லை.

காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாம் அணியை அமைக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளதே?

திருநாவுக்கரசர்: பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும், மோடியை அகற்ற வேண்டும் என்று நினைக்கக்கூடிய கட்சியினரில் சிலருக்கு, உதாரணமாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு காங்கிரசுடன் சேரத் தயக்கம் இருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியாகவும், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் காங்கிரசுடன் சேரத்தயங்குவதற்குக் காரணமிருக்கிறது. இப்போது தனியாகப் போனாலும் மார்க்சிஸ்ட் அல்லது அவர்களுடன் சேர்ந்துவரும் எம்.பி.க்கள், பா.ஜ.க.வை ஆதரிக்கப் போவதில்லை. தேர்தலுக்கு முன்போ, பின்போ வெளியிலிருந்துகூட காங்கிரசுக்கு ஆதரவு தரக்கூடிய சூழல் ஏற்படும். அதனால் மூன்றாவது அணி அமைக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் அது எந்தக் காலத்திலும் நிரந்தர ஆட்சியைத் தந்த முன்னுதாரணம் இல்லை. அந்த அணி தேர்தலுக்குப் பின்பாவது காங்கிரசுக்கு ஆதரவு தருவது காலத்தின் கட்டாயமாக ஏற்படும். பா.ஜ.க.விற்கு மாற்று என்பது காங்கிரஸ்தான். அதனால், மோடிக்கு மாற்றாக ராகுல்காந்திதான் பிரதமராக வரப்போகிறார்.

மோடி, அமித்ஷா இருவரும் "எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்று செயல்பட்டு வருகிறார்கள். இருவரையும் ராகுல்காந்தி சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கிறாரா?

மோடியும் அமித்ஷாவும் வேறு அல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டும் சேர்ந்தால்தான் நாணயம் செல்லும். முன்னர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தலைவர்கள் "பா.ஜ.க., ஜனசங்கம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்று சொன்னது இல்லை. இந்தியா பல கட்சிகள் கொண்ட நாடு. "அரசியல் கட்சிகளை ஒழிப்போம்' என்று சொல்வது குரோத எண்ணத்தையும் ஜனநாயக விரோத சிந்தனையையும்தான் காட்டுகிறது. வாஜ்பாய்-அத்வானி போன்றவர்கள்கூட அப்படிச் சொன்னதில்லை. "காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பது அவர்களின் பகல் கனவு. அதனால்தான், அவர்களின் கட்சியில் இருந்தே அதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை யாரும் கற்பனை செய்யமுடியாது.

thirunavukarasar

எடப்பாடியின் ஓராண்டுகால ஆட்சி எப்படி இருக்கிறது?

திருநாவுக்கரசர்: எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மையை வைத்து எடப்பாடி முதல்வராக வந்திருக்கிறார். இப்போது அந்த பெரும்பான்மையும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த அரசு மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களுடைய தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆட்சியாகக் கூடத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. அரசை திருப்திபடுத்த தமிழக மக்களின் நலன் பல்வேறு வகையில் காவு கொடுக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமரிடம் அப்பாயின்ட்மெண்ட்கூட வாங்கித்தர முடியாத முதல்வரால் தமிழ்நாட்டின் எந்த நலன் காப்பாற்றப்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நலனைக் காக்க, மீதம் இருக்கும் காலம்வரை நடத்தப்படும் ஆட்சி, தேர்தலில் மக்களால் தூக்கி வீசப்படும்.

எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து பேசிய ரஜினி, தனக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்ததைச் சொல்லி அதற்கு திருநாவுக்கரசர் சாட்சி என்று சொல்லியிருக்கிறாரே? திருநாவுக்கரசர்: எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்து அவரது பண்புகள் பற்றிப் பேசிய ரஜினி, தனது ராகவேந்திரா கல்யாண மண்டபம் கட்டுவதற்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கிடைத்த உதவியைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த இடத்தைப் பெறுவதற்கு ரஜினியும், இன்னொரு தொழிலதிபரும் மனு செய்திருந்தார்கள். இருவரும் எம்.ஜி.ஆருக்கு தெரிந்தவர்கள். துறை அமைச்சராக நான் இருந்ததால் சாதக பாதகங்களைக் கேட்டார். அதில் ரஜினிக்கு ஆதரவாக கோப்புகள் இருந்த காரணத்தாலும் , அந்தத் தொழிலதிபருக்கு இந்த விஷயம் இல்லை என்றால் மற்றொரு விஷயத்தில் உதவி செய்ய முடியும் என்ற அடிப்படையிலும் ரஜினியின் மனுவை பரிசீலிக்கலாம் என்பது எனது அபிப்பிராயமாகவும், எம்.ஜி.ஆரின் அபிப்ராயமாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. அந்த உதவியை பெருந்தன்மையுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். அந்தத் தொழிலதிபரின் பெயரை அவரும் சொல்லவில்லை. நானும் சொல்ல விரும்பவில்லை.

"எம்.ஜி.ஆர். போல ஆக முடியாது, ஆனால், எம்.ஜி.ஆர். போன்று ஆட்சி தர முடியும்' என்று ரஜினி சொல்லி இருப்பது குறித்து?

தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி மறைந்த காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோரைப் பேசித்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

-சந்திப்பு: சி.ஜீவாபாரதி

படங்கள்: அசோக்

thirunavukarasar interview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe