முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் கொள்கையில்லா நடிகர்கள்! -நாட்டு நடப்பை அலசும் தோழர் முத்தரசன்

mutharasan

ப்போதும் சவால்களை சந்தித்துப் பழகிய இடதுசாரிகளுக்கு இது கூடுதல் சவாலான நேரம். திரிபுராவில் கால்நூற்றாண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியிருப்பது, மதச்சார்பற்ற சக்திகளிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரனுக்கு பேட்டி என்று கேட்டதும் உடனே வரச்சொன்னார்.…

சற்று நேரம் அமைதியாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவரிடம்,

ஒக்கி புயல் பாதிப்புக்கு கேரளாவுக்கு குறைவாகவும், தமிழகத்திற்கு தாராளமாகவும் நிதி கொடுப்பதாகக் கூறப்படுகிறதே?

வறட்சி மற்றும் வர்தா புயல் பாதிப்புக்கு 62 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தமிழக அரசு அறிக்கை கொடுத்தது.ஆனால் மத்திய அரசோ இரண்டாயிரம் கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது.தேசிய பேரிடர் நிதி என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அதன்மூலம் நிவாரண நிதி தரவேண்டியது கடமை.

ப்போதும் சவால்களை சந்தித்துப் பழகிய இடதுசாரிகளுக்கு இது கூடுதல் சவாலான நேரம். திரிபுராவில் கால்நூற்றாண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியிருப்பது, மதச்சார்பற்ற சக்திகளிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரனுக்கு பேட்டி என்று கேட்டதும் உடனே வரச்சொன்னார்.…

சற்று நேரம் அமைதியாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவரிடம்,

ஒக்கி புயல் பாதிப்புக்கு கேரளாவுக்கு குறைவாகவும், தமிழகத்திற்கு தாராளமாகவும் நிதி கொடுப்பதாகக் கூறப்படுகிறதே?

வறட்சி மற்றும் வர்தா புயல் பாதிப்புக்கு 62 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தமிழக அரசு அறிக்கை கொடுத்தது.ஆனால் மத்திய அரசோ இரண்டாயிரம் கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது.தேசிய பேரிடர் நிதி என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அதன்மூலம் நிவாரண நிதி தரவேண்டியது கடமை. ஆனால் மத்தியஅரசு தனது கடமையைச் சரிவர செய்வது இல்லை. முதல்வர் இ.பி.எஸ்.சுக்கு வற்புறுத்தும் துணிவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கே சலுகைகள் தரப்படுகின்றன.

mutharasan

கேரள அரசு தனது மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மாற்று வழியில் நிதித் தேவையை சமாளிக்கிறது. தமிழக அரசு மக்கள் மீது சுமையை ஏற்றுகிறதே?

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம். மக்களின் நலன் சார்ந்த வளர்ச்சிப் பணிகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று சிந்திக்கிறது. மக்கள் நலனைப் பாதுகாக்கிற லட்சியத்தோடு கேரள அரசு இருப்பதால் அதற்கேற்ப செயல்படுகிறார்கள். தமிழக அரசிடமும் நிர்வாகத்திறன் உண்டு. ஆனால் மக்கள் நலனைப் பாதுகாக்கிற லட்சியமில்லை. அங்கே லட்சியத்துடன் ஆட்சி நடத்துகிறார்கள். இங்கே லட்சங்களை எப்படிப் பெறுவது என்ற சிந்தனையே இருக்கிறது. திறமையான அதிகாரிகளைப் ஓரங்கட்டிவிட்டு, தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்களே. அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமா?

எல்லா துறையிலும் ஒரு கட்டத்தில் ஓய்வு அவசியம்தான். திரைத்துறையில் இருப்பவர்களும் விலக்கல்ல. ஆனால், அரசியலுக்கு வருவதென்றால் சேவை, மற்றும் தியாகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வருகிற நடிகர்களுக்கு கொள்கையும் இல்லை. சேவை, தியாகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. முதலமைச்சர் நாற்காலி தங்களுக்குக் கிடைக்குமா என்ற குறுகிய எண்ணத்தோடுதான் வருகிறார்கள். திரைப்படம் வேறு, நிஜவாழ்க்கை என்பது வேறு என்பதை அவர்களுக்கு மக்கள் உணர்த்துவார்கள்.

தூத்துக்குடியில் நடந்த சி.பி.எம். மாநாட்டில் கூட்டணி பற்றி பிரகாஷ்காரத், சீத்தாராம்யெச்சூரி ஆகிய தலைவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவியது பற்றி.?

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிப்பதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு கருத்துக்களும் ஹைதராபாத்தில் ஏப்ரலில் நடக்கிற மாநாட்டில் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ன கருதுகிறது என்றால், இப்போதைய பேராபத்து வகுப்புவாதம்தான். அதற்கு எதிராக இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள், ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்கி வகுப்புவாதக் கட்சியான பி.ஜே.பி.யின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் பாசிசம் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும்.

மல்லையா, நீரவ்மோடி போன்றோர் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி மோசடி செய்துவிட்டு ஓடியிருக்கிறார்கள் .இவர்களிடமிருந்து கடன் தொகையை மீட்க முடியாதா?

இந்த மோசடியை திசைதிருப்பி கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றவும், மீண்டும் வங்கிகளைத் தனியார்மயமாக்குகிற சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது. அரசாங்கம் மனது வைத்தால், ஒரு நொடியில் பணத்தை மீட்க முடியும். இந்தக் கொள்ளையால் வங்கிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகும். மக்கள் நிச்சயம் இதை விடமாட்டார்கள். அரசு நம்மை ஏமாற்றுகிறது என்று மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கு எதிரான புரட்சி கண்டிப்பாக வெடிக்கும்.

"பகோடா விற்கலாமே' என்று மோடி சொன்னது பல்வேறு கோணங்களில் சர்ச்சையாகியுள்ளதே?

"ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்' என்று மோடி சொல்லி நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. 8 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு கோடி. இவர்கள் அனைவரும் பகோடா விற்றுப் பிழைக்க முடியுமா? பகோடா விற்பது நல்ல தொழில்தான். அதற்கான முதலீடுகளுக்கு அவர்கள் எங்கே போவார்கள். அத்தனைபேரும் பகோடா போட்டால் யார் வாங்குவது?

சந்திப்பு : பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

இதையும் படியுங்கள்
Subscribe