Advertisment

போஸ்டர் போட்டு பொளக்குறோம்’’ -கடலூர் தி.மு.க. நிலவரம்!

cuddalore-dmk

ட்சிக்குள் நடக்கும் அனைத்து உள் குத்துகளுக்கும் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதற்காகத் தான் அண்ணா அறிவா லயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார் தி.மு.க.வின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலின். செயல்படாத, செயல்படவிடாத நிர்வாகிகள் மீது ஸ்டாலினிடம் நேரடியாகவும், அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியிலும் உடன்பிறப்புகள், புகார்களைக் குவித்து வருகின்றனர்.

Advertisment

cuddalore-dmk

கடலூர் மாவட்ட களஆய்வுக் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே, மாவட்டத்தில் உட்கட்சி மல்லுக்கட்டு ஆரம்பமாகிவிட்டது. கடலூர் கிழக்கு மா.செ.வாக மாஜி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், மேற்கு மா.செ.வாக திட்டக்குடி எம்.எல்.ஏ. சி.வெ.கணேசனும் இருக்கின்றனர். மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ஒருங்கிணைந்த மா.செ.வாக இருந்த எம்.ஆர்.கே.வின் கைதான் இப்போதும் ஓங்கியிருக்கிறது. மேற்க

ட்சிக்குள் நடக்கும் அனைத்து உள் குத்துகளுக்கும் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதற்காகத் தான் அண்ணா அறிவா லயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார் தி.மு.க.வின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலின். செயல்படாத, செயல்படவிடாத நிர்வாகிகள் மீது ஸ்டாலினிடம் நேரடியாகவும், அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியிலும் உடன்பிறப்புகள், புகார்களைக் குவித்து வருகின்றனர்.

Advertisment

cuddalore-dmk

கடலூர் மாவட்ட களஆய்வுக் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே, மாவட்டத்தில் உட்கட்சி மல்லுக்கட்டு ஆரம்பமாகிவிட்டது. கடலூர் கிழக்கு மா.செ.வாக மாஜி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், மேற்கு மா.செ.வாக திட்டக்குடி எம்.எல்.ஏ. சி.வெ.கணேசனும் இருக்கின்றனர். மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ஒருங்கிணைந்த மா.செ.வாக இருந்த எம்.ஆர்.கே.வின் கைதான் இப்போதும் ஓங்கியிருக்கிறது. மேற்கு மா.து.செ. குரு.சரஸ்வதி, இளைஞரணி துணை அமைப் பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார், மாஜி கவுன்சிலர்கள் ஆட்டோ பாண்டியன், நம்பிராஜன், தளபதி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிரவன், மாஜி ஒ.செ. வேல்முரு கன், பாசிகுளம் திருஞானம், வக்கீல் சுப்பிரமணியன் போன்ற எம்.ஆர்.கே. ஆதரவாளர்கள் கணேச னைக் கண்டுகொள்வ தேயில்லை.

mkpannerஇந்தக் கோஷ்டி இப்படி என்றால்... கணேசன் கோஷ்டிக்குள்ளேயே நகர்மன்ற முன்னாள் தலைவர் வை.தட்சிணாமூர்த்தி, மா.து.செ. அரங்க பாலகிருஷ்ணன், இலக்கியஅணி பட்டி கருணாநிதி, விவசாயஅணி துணை அமைப்பாளர் அறிவுடை நம்பி, மாஜி ந.செ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனி கோஷ்டியும் உண்டு. என்னதான் தன்னைக் கண்டுகொள்ளாவிட்டாலும் மாற்றுக் கட்சியினரை தி.மு.க.வுக்கு இழுப்பதில் வேகம் காட்டிவருகிறார் கணேசன். இவரின் முயற்சியால் தான் தே.மு.தி.க.வின் மாஜி எம்.எல்.ஏ. முத்துக் குமார், பா.ம.க. முன்னாள் ந.செ. சிங்காரவேல், அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி அருள்குமார் என பலரையும் தி.மு.க.வுக்கு இழுத்தார் கணேசன்.

Advertisment

இப்போது பல திசைகளிலும் இழுபடுகிறார் கணேசன். சமீபத்தில் விருத்தாசலத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிலர் "குழந்தை தமிழரசனை மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும்' என பேசியபோது, உடனே எதிர்ப்புக் கோஷம் கிளம்பியது. அதேபோல் "கணேசனே நிரந்தர மா.செ.' என்ற போது, "இது என்ன ஏ.டி.எம்.கே.வா?' என சவுண்ட் கிளம்பியது.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்த சில நாட்களிலேயே விருத்தாசலம் நகரில் ஒரு போஸ்டரை ஒட்டி அனலைக் கிளப்பியுள்ளனர். ‘"கழகத்தின் நகரச் செயலாளர், கழகத்தை அழித்த வர லாறு’ நூல் வெளியீட்டு விழா, அனைவரும் வாரீர்! வாரீர்' என அழைத்து பகீர் கிளப்பினர். மேலும் அந்தப் போஸ்டரில் "“நான்கு முறை ந.செ.வாக இருந்தும் கட்சிக்கென சொந்த அலுவலகம் கட்ட துப்பில்லாதவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்த துரோகம், எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் கலெக்ஷன், வரப்போகும் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்பணம்...'’’ என விருத்தாசலம் ந.செ. தண்டபாணியைப் பற்றி பொளந்து கட்டியிருந்தார்கள்.

"ஏங்க இப்படி? என்னதாங்க நடக்குது கடலூர் தி.மு.க.வுல?' சீனியர் உ.பி.யான து.பன்னீர்செல்வத்திடம் கேட்டோம். “

dandapandi""குழந்தை தமிழரசனைக் குறிவைத்து தோற்கடித்தார்கள். அதற்கடுத்த தேர்தல்களில் விருத்தாசலம் தொகுதி, கூட்டணிக் கட்சிக்குப் போனபிறகும் தோற்கடிப்பதையே வேலையாக வைத் திருந்தார்கள். உட்கட்சித் தேர்தலின்போது, தண்டபாணிக்கு எதி ராக யாரும் நாமினேஷன் தாக்கல் செய்யமுடியாத அளவுக்கு நிலைமை இருந்தபோது, அறிவாலயம்வரை போராடி தேர்தலை நடத்த வைத்தேன். ஏகப்பட்ட சூழ்ச்சியால் தோற்கடிக்கப் பட்டேன். புதுசாக கட்சிக்கு வந்தவர்களிடம் காசை வாங்கிக் கொண்டு பொறுப்புகளை வழங்குவது வாடிக்கையாகிவிட்டன. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கத் தயங்குகிறார் மா.செ. கணேசன். அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடப்பதற்கு முன்பாக நல்லதீர்வு கிடைத்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி''’என்றார் ஏக்கப் பெருமூச்சுடன். எல்லாவற்றையும் மா.செ. கணேசனிடம் கூறிய போது, ""சில நிர்வாகிகளின் ஆர்வக்கோளாறுகளால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பது உண்மைதான். அதேநேரம் சில எதிரி களும் துரோகிகளும் கட்சிக்காரர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் தலைமையிடம் தெரிவித்திருக் கிறேன், தலைமையின் வழிகாட்டுதல்படி நடப்பேன்''’என்றார்.

விருத்தாசலத்தில் ஆரம்பமாகியுள்ள போஸ்டர் யுத்தம் மாவட்டத்தின் மற்ற ஏரியாக்களுக்கும் பரவாமல் தடுக்க, கட்சியின் செயல்தலைவர் சீக்கிரம் ஆவன செய்யவேண்டும் என்பதே, கடலூர் மேற்கு, கிழக்கு உ.பி.க்களின் பேராவல்!

-சுந்தரபாண்டியன்

CVGanesan MKPannerselvam cuddalore dmk status
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe