புது மதம் லிங்காயத்!

Lingayat

ர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர்கள்தான். இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். வீரசைவர்கள் என்றும் அழைக் கப்படுகின்றனர். 12-ம் நூற் றாண்டில் சாதிய பாகுபாடு களை களைய பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதியான பசவேஷ் வரா இந்த சமூகத்தின் மிக முக்கிய முன்னோடியாக இம் மக்களால் கருதப்படுகிறார்.

Lingayat

இந்து மதத்தில் உள்ள வர்ண சாஸ்திரங்களை இவர்கள் எதிர்ப்பவர்கள், தொடக்கம் முதலே தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டுள்ள வர்கள்.

இந்த சமூகத்தினர்

இந்த சமூகத்தினர் தங்களை தனிமதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்து மதத்தில் இருந்து லிங்காயத்துகள் பிரிந்தால் இந்துமதம் கர்நாடகாவில் பலவீனமாகும் என்று கருதியது ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவ ரான மோகன்பகவத், லிங்காயத் சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து பலமுறை சந்தித்துப் பேசினார். ஆனால் லிங்காயத் சமூகத்தினர் ""நாங்கள் வீரசைவர்கள். எங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை. அப்படியிருக்கும்போது, எங்களை ஏன் இந்து மதத்தில் தான் இருக்கவேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்துகிறீர்கள். உங்கள் ஆலோசனையை நாங்கள் கேட்கமாட்டோம். இனி நீங்க இவ்விஷயத்தில் தலையிடக்கூடாது'' என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

பின்னர் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை லிங்காயத் சமூக பிரதிநிதிகள் சந்தித்து, "தங்களை தனி மதமாக அரசு அறிவிக்க வேண்டும்' என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

gowrilinkeshகொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் இதனை வலியுறுத்தி வந்தவராவார். இதையடுத்து நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அவர்களது கோரிக்கையை ஆராய உத்தரவிட்டது கர்நாடக காங்கிரஸ் அரசு. அந்தக்குழு தமது அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், சட்டசபையில் லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிப்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இந்த கோரிக்கைக்கு மார்ச் 19-ஆம் தேதி ஆதரவளித்தது. இதையடுத்து லிங்காயத்துகள் மதரீதியிலான சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் அங்கீகாரத்துக்காக இம்முடிவை கர்நாடக அரசு அனுப்பிவைத்துள்ளது.

தேர்தல் களத்தில் லிங்காயத்துகளின் ஆதரவு எடியூரப்பாவுக் கும், பா.ஜ.க.வுக்குமே பெரும்பாலும் கிடைத்துவந்தது. இந்து மதத்தி லிருந்து லிங்காயத்துகளை தனிமதமாக பிரிப்பதை பா.ஜ. ஆதரிக்க வில்லை. கர்நாடக மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அதிரடி முடிவு பா.ஜ.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. லிங்காயத்து கள் தனிமதம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஆதரிக்கப்போகிறதா,… மறுக்கப் போகிறதா?…அல்லது காவிரி நதிநீர் ஆணைய விவகாரம்போல தேர்தலுக்குப் பின் முடிவெடுக்கலாமென ஒத்திவைக்கப் போகிறதா?

-ஜீவாதங்கவேல், க.சுப்பிரமணி

Lingayat New religion
இதையும் படியுங்கள்
Subscribe