Advertisment

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி கட்டாயமில்லை! -ஜி.ஆர்.பேட்டி!

GR

ந்திய அளவிலும் தமிழக அளவிலும் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் தருணம் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக மாணவர்களும் தொடர்போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நடிகர்கள் ரஜினியும் கமலும் அரசியல் கட்சி தொடங்க தயாராகிவருகிறார்கள். இத்தகைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்...

Advertisment

மத்திய அரசின் பட்ஜெட்டில், கார்ப்பரேட் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினால், 30 சதவிகிதத்தில் இருந்த வட்டியை 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவில்லையே?

Advertisment

ஜி.ஆர்: 7-ஆவது ஊதிய ஆணைக்குழுவுக்குப் பிறகு ஊதியஉயர்வு கிடைத்தாலும் அவர்களில் நடுத்தரவர்க்க ஊழியர்களும் மக்கள்

ந்திய அளவிலும் தமிழக அளவிலும் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் தருணம் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக மாணவர்களும் தொடர்போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நடிகர்கள் ரஜினியும் கமலும் அரசியல் கட்சி தொடங்க தயாராகிவருகிறார்கள். இத்தகைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்...

Advertisment

மத்திய அரசின் பட்ஜெட்டில், கார்ப்பரேட் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினால், 30 சதவிகிதத்தில் இருந்த வட்டியை 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவில்லையே?

Advertisment

ஜி.ஆர்: 7-ஆவது ஊதிய ஆணைக்குழுவுக்குப் பிறகு ஊதியஉயர்வு கிடைத்தாலும் அவர்களில் நடுத்தரவர்க்க ஊழியர்களும் மக்கள்தானே. அவர்களுடைய ஊதியவரம்பை உயர்த்தவில்லை. எனவே இது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சாதகமான பட்ஜெட்தான். அதேபோல் பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி.யால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களுக்கும் இந்த பட்ஜெட்டால் பயன் இல்லை.

பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவரும் இந்த நேரத்தில், சி.பி.எம். மட்டும் "காங்கிரசோடு கூட்டு இல்லை' என்று முடிவெடுத்திருக்கிறதே?

ஜி.ஆர்.: மதவாத பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடிப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். அதேநேரம் இதற்காக இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. கேரளாவில் காங்கிரசுக்கும் எங்களுக்கும்தான் போட்டி. நாங்க எப்படி காங்கிரசுடன் அணி சேர முடியும்?

gr

பா.ஜ.க வை வீழ்த்த மாநிலத்துக்கு மாநிலம் அதற்கு தகுந்தபடி வியூகம் அமைப்போம். அதற்காக காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 2004-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைந்தபோதும் கேரளா, திரிபுரா, மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு எதிராகத்தான் போராடினோம். "காங்கிரசுடன் இனி கூட்டு இல்லை' என்ற மத்திய தலைமையின் முடிவில் மாற்றம் வராது.

நக்கீரன்: தமிழகத்தில் ம.தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தி.மு.க.வை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. சி.பி.எம். மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது?

ஜி.ஆர்: தேர்தல் கூட்டணியை தேர்தல் வரும்போது முடிவு செய்வோம். அப்போது அது தி.மு.க.வுடனோ, வேறு அணியுடனோ இருக்கலாம்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு, "தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்' என்ற குரலை எழுப்பியுள்ளது. சி.பி.எம். நிலை என்ன?

ஜி.ஆர்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியும். அது தமிழனா? ஆந்திராக்காரனா? கர்நாடகாக்காரனா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

ரஜினிக்கு பின்னால் பா.ஜ.க.வும், கமலின் அரசியலுக்கு பின்னால் கம்யூனிஸ்ட்டும் இருப்பதாக கூறுகிறார்களே?

ஜி.ஆர்.: இது யூகமான கேள்வி. கமல் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். பின்னர் கொள்கையை அறிவிக்கட்டும். அதன்பிறகு கமலின் பின்னால் கம்யூனிஸ்ட் இருக்கிறதா? என்ற எல்லோருடைய யூகத்துக்கும் பதில் கிடைத்துவிடும். ரஜினி கட்சியைத் தொடங்குவதற்கு முன் ஆன்மிக அரசியல்னு சொல்வது தவறானது. ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக இணைக்கக்கூடாது.

அப்படியென்றால் இருவரும் கட்சி தொடங்கமாட்டார்கள் என்கிறீர்களா?

ஜி.ஆர்.: நான் அப்படிச் சொல்லவில்லை தொடங்கினால்தானே எல்லாம் தெரியும்.

போக்குவரத்துத் துறையின் நஷ்டத்தை புரிந்துகொள்ளாமல் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வீணாகப் போராடுவதாக முதல்வர் கூறுகிறாரே?

ஜி.ஆர்.: போக்குவரத்துத்துறை லாப நோக்கோடு செயல்படக்கூடிய துறை அல்ல. மக்களுக்கு சேவை செய்கிற துறை. 50 சதவீத வழித்தடங்கள் வருமானம் ஈட்டமுடியாத வழித்தடங்கள். 30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ். இதெல்லாம் வச்சு நட்டம்னு அரசு சொல்லக்கூடாது.

மாணவர்களின் பஸ் பாஸ் காரணமாக ஏற்படும் இழப்பை, அரசுதான் போக்குவரத்துத் துறைக்கு கட்டணும். ஆனால் அரசாங்கம் கட்டுறது இல்லை.

மொத்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை வருவாய் இழப்பு என்பது 1.5 சதவிகிதம்தான். இதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாதா? மருத்துவத்துறை போன்று சேவைத் துறையாகத்தான் போக்குவரத்துத்துறையையும் அரசு பார்க்கவேண்டும்.

"ஜெயலலிதா விட்டுச்சென்றதை நாங்க தொடருகிறோம்' என்று இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். கூறுகின்றனரே?

ஜி.ஆர்.: ஜெயலலிதா விட்டுச்சென்றது இரண்டே இரண்டு. ஒன்று ஆட்சி, இன்னொன்று கட்சி. ஆட்சியை வைத்து அடிக்க வேண்டியதை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியைத் துண்டு துண்டாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

-சந்திப்பு: மணிகண்டன்

GR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe