பரோலில் சசிகலா வெளிவருவதற்கு அ.தி.மு.க.வின் கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன் கையெழுத்துப் போட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள எம்.பி. நாகராஜனுடன் தொடர்புகொண்டோம்.
அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.பி.க்கள் யாரும் சசிகலா வெளியேவர ஆர்வம் காட்டாதபோது உங்களுக்கு மட்டும் என்ன அக்கறை?
நாகராஜன்: அக்கறை என்பதைவிட விசுவாசம் என்று சொல்லலாம். வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் என்னிடம் கையெழுத்து கேட்டார், போட்டேன். மற்ற எம்.பி.க்கள் யாரிடமாவது அவர் கேட்டாரா,
பரோலில் சசிகலா வெளிவருவதற்கு அ.தி.மு.க.வின் கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன் கையெழுத்துப் போட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள எம்.பி. நாகராஜனுடன் தொடர்புகொண்டோம்.
அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.பி.க்கள் யாரும் சசிகலா வெளியேவர ஆர்வம் காட்டாதபோது உங்களுக்கு மட்டும் என்ன அக்கறை?
நாகராஜன்: அக்கறை என்பதைவிட விசுவாசம் என்று சொல்லலாம். வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் என்னிடம் கையெழுத்து கேட்டார், போட்டேன். மற்ற எம்.பி.க்கள் யாரிடமாவது அவர் கேட்டாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது .
ஒரு கையெழுத்து போடக்கூட மத்திய அரசின் ஒப்புதல் வாங்கவேண்டும் என்கிற சூழலில் தான் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் சசிகலா பரோல் நிகழ்வு அப்பட்டமாய்க் காட்டுகிறதே..?
நாகராஜன்: எனக்கு அப்படித் தெரியவில்லை. ஆனால் அம்மா இருக்கும்போது தமிழ்நாட்டு எம்.பி.க்கள் என்றால், இந்த டெல்லியில் அப்படியொரு மதிப்பு இருந்தது என்பது உண்மைதான். அது மாறிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்நேரம் எங்க அம்மா இருந்திருந்தால் மத்திய அரசு தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்குள்ளும் மூக்கு நீட்டி முகர்ந்து பார்க்க முடியாது.
தினகரனின் ஸ்லீப்பர்செல் நீங்கள்தானா..?
நாகராஜன்: ஸ்லீப்பர்செல் என்று என்னை எப்படிச் சொல்ல முடியும்..? சொல்லப் போனால் நான் ஓப்பன்செல். நான் சின்னம்மா சசிகலாவின் விசுவாசி என்பது எல்லோருக்கும் தெரியும்படிதான் என்னை தகவமைத்திருக்கிறேன். அதனால், கட்சி நிகழ்வுகளில்கூட புறக்கணிக்கப்படுகிறேன். ஏன் மத்திய அரசின் விழாக்களில்கூட நான் தவிர்க்கப்படுகிறேன்.
ஜெயலலிதா இல்லாமல் ஓராண்டு ஆட்சியை அ.தி.மு.க. நிறைவு செய்வதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாகராஜன்: ஓராண்டு என்ன..? எஞ்சியுள்ள வருடங்களையும் நாங்கள் கடந்து விடுவோம். இங்குள்ள அனைவருமே, நான் உட்பட சின்னம்மாவைப் பார்த்துதான் அம்மாவிடம் பதவி வாங்கினோம். அதையெல்லாம் மறந்துவிட்டு சின்னம்மா மீது கொலைப்பழி போடுகிறார்கள். சின்னம்மா, அம்மாவின் பெயரால் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஒரு டிரஸ்டியாக இருக்கத்தான் விரும்பினார். ஆனால் "நீங்கள்தான் முதலமைச்சராக வேண்டும்' என்று சின்னம்மாவின் காலில் விழுந்து கதறியவர்களின் பெயரைக்கூட என்னால் சொல்ல முடியும். இப்போது சொல்கிறேன்.. அம்மா சிகிச்சைபெறும் பல படங்களும், அப்பல்லோவில் அட்மிட் ஆனபோது அம்மாவும், சின்னம்மாவும் பேசிக்கொள்ளும் ஆடியோவும் எங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் ஆணையத்தில் ஒப்படைத்திருக்கிறோம். சின்னம்மா மீதான கொலைப்பழி துடைத்தெறியப்படும்.
-அ.அருள்குமார்