டி.டி.வி. தினகரன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி வெளியேறிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை குமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள வீட்டில் சந்தித்தோம்...
நக்கீரன்: டி.டி.வி. தினகரனை விட்டு திடீரென்று வெளியேறக் காரணம்?
சம்பத்: திடீரென்றோ திடுதிப்பென்றோ நான் வெளியேறவில்லை. புதிய அமைப்பின் பெயர் சூட்டுகிறேன் என்கிற பெயரால் எந்த சொல் இந்த மண்ணின் மந்திரச் சொல்லாக மதிக்கப்பட்டதோ, எந்தச் சொல் மொட்டுக்களை மலர வைக்குமோ, எந்தச் சொல் விட்டு விடுதலையாகி வெற்றியை தருவதற்கு விடிகாலைப் பொழுதை சந்திப்பதற்கு தோரணம் அமைத்துத் தருமோ அந்த சொல் "திராவிடம்.
இருண்டு கிடக்கிற இதய கிழக்குகள் விடிவதற்கு விடிய, விடிய ஒரு காலச்சேவலாக கூவிய தலைவன் அண்ணா. அவர் விரல் தேய எழுதினார், குரல் தேய பேசினார், கால் தேய நடந்தார். அந்தக் காவியத்தலைவன் அண்ணாவின் பெயரையும், தமிழர்களின் கருவூலமாக கருதப்படுகிற திராவிடம் என்கிற பெயரையும் தூக்கி தூர எறிந்து, பட்டப்
டி.டி.வி. தினகரன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி வெளியேறிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை குமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள வீட்டில் சந்தித்தோம்...
நக்கீரன்: டி.டி.வி. தினகரனை விட்டு திடீரென்று வெளியேறக் காரணம்?
சம்பத்: திடீரென்றோ திடுதிப்பென்றோ நான் வெளியேறவில்லை. புதிய அமைப்பின் பெயர் சூட்டுகிறேன் என்கிற பெயரால் எந்த சொல் இந்த மண்ணின் மந்திரச் சொல்லாக மதிக்கப்பட்டதோ, எந்தச் சொல் மொட்டுக்களை மலர வைக்குமோ, எந்தச் சொல் விட்டு விடுதலையாகி வெற்றியை தருவதற்கு விடிகாலைப் பொழுதை சந்திப்பதற்கு தோரணம் அமைத்துத் தருமோ அந்த சொல் "திராவிடம்.
இருண்டு கிடக்கிற இதய கிழக்குகள் விடிவதற்கு விடிய, விடிய ஒரு காலச்சேவலாக கூவிய தலைவன் அண்ணா. அவர் விரல் தேய எழுதினார், குரல் தேய பேசினார், கால் தேய நடந்தார். அந்தக் காவியத்தலைவன் அண்ணாவின் பெயரையும், தமிழர்களின் கருவூலமாக கருதப்படுகிற திராவிடம் என்கிற பெயரையும் தூக்கி தூர எறிந்து, பட்டப் பகலில் ஒரு படுகொலையைச் செய்திருக்கிறார் டி.டி.வி. தினகரன். இந்த நாசச்செயலை வன்மையாகக் கண்டித்து இந்தப் பாவச்செயலுக்கு நானும் பக்கத்தில் இருந்தேன் என்ற பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக டி.டி.வி. தினகரனை விட்டு வெளியேறினேன்.
நக்கீரன்: அப்படியென்றால் திராவிடத்தை கட்சி பெயரில் கொண்டிருக்கிற கட்சிக்கு போகப் போகிறீர்களா?
சம்பத்: நான் ஒரு தனி மனிதனாக திராவிடத்தைப் பற்றி என்னால் பேச முடியும். அதற்காக இனி ஒரு கட்சியில் சேர்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதனால தி.மு.க.விலோ, ம.தி.மு.க.விலோ போய் சேருவேன் என்ற கேள்விக்கு இடம் இல்லை.
நக்கீரன்: கட்சிக் கொள்கை, கோட்பாடை மீறி பேசியதாக கே.சி.பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்படி அ.தி.மு.க. வின் கொள்கை கோட்பாடுதான் என்ன?
சம்பத்: இப்போது அ.தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடு என்பது மோடியின் காலில் விழுந்து கிடப்பது. மோடியின் கண் அசைவைப் புரிந்துகொண்டு நடப்பது. மோடியின் கட்டளை யை நிறைவேற்றிக் கொடுப்பது.
நக்கீரன்: கமல்ஹாசன் கட்சியில் நட்சத்திர பேச்சாளருக்காக உங்களுக்கு தூதுவிட்டதாகக் கூறப்படுகிறதே...
சம்பத்: என்னை எல்லோரும் அழைப்பாங்க. அதற்கான மேடை அனுபவம், மேடைத் தமிழ் என்னிடம் இருக்கு. அதற்காக அழைத்தார்கள் என்பதற்காக அவர்களை நான் ஏற்க முடியாது. அதுவும் நிகழ்காலமே இல்லாத கமல்ஹாசனின் கட்சியை சிந்திக்க முடியாது.
நக்கீரன்: தி.மு.க., ம.தி.மு.க. அடுத்து அ.தி.மு.க.வுக்கு சென்ற நீங்க, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு தலைமை ஏற்கத் தகுதி இல்லையென்று அவரை எதிர்த்தீர்கள். பிறகு அவருடன் ஐக்கியமாகி டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்ட நீங்கள் அவரையும் விட்டு வெளியேறி விட்டீர்கள். இப்படி கட்சி மாற்றிக்கொண்டிருப்பது உங்களுக் குச் சரியாகப்படுகிறதா?
சம்பத்: அடிப்படையில் நான் ஒரு விமர்சகர். அரசியல்வாதி அல்ல. நான் ஏற்றுக்கொள்கிற கருத்தை பேசுவதற்கு உகந்த இடம் எந்த இடம்னு தேர்வு செய்து மேடையில் அந்த கருத்துக்கு வலிமை சேர்க்கிற கருவியாகவும், ஆயுதமாகவும் கலைஞருக்கும், வைகோவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பயன்பட்டவன். இப்போது அந்த கடமையை தினகரனுக்கு செய்யலாம்னு நினைத்திருந்தேன். அவர் என்னுடைய நினைப்பில் கல்லெறிந்து விட்டார்.
நக்கீரன்: பா.ஜ.க., உங்களுக்கு மறைமுகமாக நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறதே...
சம்பத்: மறைமுகமாக அல்ல நேரிடையாகவே தந்தார்கள். என் வீட்டில் வந்து தாக்கினார்கள். பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 12 சட்டங்கள் என்மீது ஏவப்பட்டன. என்னை கொலை செய்யவும் முயற்சித்தார்கள். இதன் பின்னணியில் இருந்தவர்கள்தான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் தமிழ்நாடு அரசின் காவல்துறை.
நக்கீரன்: மு.க.ஸ்டாலின் முதல்வராவதைத் தடுப்பதற்காக மறைமுகமாக வைகோ செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்த நிலையில்... இன்று "ஸ்டாலினை முதல்வராக்குவேன்' என மேடைக்கு மேடை வைகோ முழங்குகிறார். அவரை "ராசி இல்லாதவர்' என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்களே?
சம்பத்: வைகோவை இழித்தும் பழித்தும் சமூக வலைத்தளங்களில் சிலர் செய்திகளை வெளியிடுவது அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. வைகோ, தி.மு.க. பக்கம் வந்தது தி.மு.க.வுக்கும் ஸ்டாலினுக்கும்தான் வலிமை. வைகோவின் கடந்தகால அரசியல் பயணமே அதற்குச் சான்று.
நக்கீரன்: ஸ்டாலின் பற்றி உங்கள் கருத்து....
சம்பத்: ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர், அவர் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்கால தமிழகத்தை ஆளுவதற்கான வாய்ப்பைப் பெற்ற தலைவர்.
நக்கீரன்: ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறாரே?
சம்பத்: மன்னித்துவிட்டேன் என்று ராகுல்காந்தி சொன்னதன் மூலம் அவர் வானத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடிய பக்குவம்தான் காந்தியம். மன்னித்து விட்டேன் என்று சொன்னதோடு நிற்காமல், அதை நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
-சந்திப்பு: மணிகண்டன்