முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்கும் வாரியங்கள்! -அதிருப்தியில் நாராயணசாமி!

narayanasamy

ங்கே வாலாக இருப்பதைக் காட்டிலும் இங்கே தலையாக இருப்பது பெருமை என்றுதான் கட்சித் தலைமையிலிருந்த நமசிவாயத்தை நகர்த்திவிட்டு புதுச்சேரிக்கு முதலமைச்சரானார் நாராயணசாமி.

இப்போது? தவறு செய்துவிட்டோமே என்று வெம்புகிறார். வருகின்ற ஆண்டில் வரப்போகின்ற எம்.பி. எலெக்ஷனில் மீண்டும் டெல்லிக்குப் பயணமாகத் திட்டமிடுகிறார்.

புதுச்சேரியில் புயலாக மையங்கொண்டுள்ள வாரியத் தலைவர்கள் பதவியும், காங்கிரஸ்காரர்களின் மிரட்டலும், பா.ஜ.க.வும், ஆளுநர் கிரண்பேடியும் போடுகின்ற கிடுக்கிப்பிடியும் சேர்ந்து இப்படியொரு முடிவுக்கு நாராயணசாமியை தயார்படுத்திவிட்டன.

""வாரியத் தலைவர் பதவியென்பது புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதாயம் தரும் இரட்டைப் பதவி. மக்களின் வரிப்பணம் இதனால் விரயமாகிறது'' என்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளார் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி.

narayanasamy-kiranbedi

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ப

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாலன் (சுற்றுலா), ஜெயமூர்த்தி (பி.பி.ஏ.), விஜயவேணி (சாராய ஆலை), தீப்பாய்ந்தான் (குடிசை மாற்று), தனவேல் (பாப்ஸ்கோ), தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிவா (பிப்டிக்), கீதா ஆனந்தன் (பவர் கார்ப்பரேஷன்), வாரியங்களுக்கு தலைவர்களாக பதவியை வகிக்கிறார்கள்.

""பாப்ஸ்கோ வாரியத் தலைவர் தனவேல், டீசலுக்காக 1 லட்சத்து பத்தாயிரம், தீபாவளி வெடிபாக்ஸ் விநியோகம் 5 லட்சத்து 17 ஆயிரம், இனிப்பு வாங்கிக் கொடுத்தது 1 லட்சத்து 25 ஆயிரம், பேனர் வைத்தது மற்றும் இதர செலவுகள் என மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

மிகக் குறைவாகச் செலவு செய்த வாரியத் தலைவர் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா. இவர் 88 ஆயிரம் செலவு செய்துள்ளார். ஏழு வாரியத் தலைவர்களும் சேர்ந்து 63 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்த விபரத்தை தகவலறியும் சட்டம் வாயிலாகப் பெற்றேன். இதனால்தான் புகாரும் அனுப்பினேன்'' என்கிறார் ரகுபதி.

இதேமாதிரி புகார்களை ஆளுநர் கிரண்பேடியும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாராம்.

வாரியத் தலைவர் பதவி மூலம் இரட்டை ஊதியம் பெறுகின்ற எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம் வாரியத் தலைவர் பதவி அதிகாரமற்ற ஆதாயமற்ற வெற்று அலங்காரப் பதவி என்ற விளக்கங்களும் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.

தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா நம்மிடம், ""வாரியத் தலைவருக்கான உதவியாளர்கள் வாரியப் பணியாளர்கள். அவர்கள் சம்பளத்தை எங்கள் கணக்கில் ஏன் சேர்க்க வேண்டும். டெலிபோன் அலுவலகத்தில் உள்ளது. அலுவலகம் பயன்படுத்துகிறது. இந்த ஆட்சி மீது ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக கிளப்புகிறார்கள்'' என்றார்.

pondymla

சுற்றுலா வாரியத் தலைவர் என்.ஆர்.பாலன், ""வாரியத்திலிருந்து நான் கவுரவச் சம்பளம் ஏதும் பெறவில்லை. என் காருக்கான டீசல் செலவைக் கூட எம்.எல்.ஏ. சம்பளத்தில் இருந்துதான் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். காசோலை அதிகாரம் இல்லாத பதவி இது... எப்படி இரட்டை ஆதாயப் பதவியாகும்'' எனக் கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளோ, தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி வேண்டும் என்று கட்சிக்குள் கலவரச் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசின் புதுச்சேரி பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம். ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர், தோற்றாலென்ன? வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் என இரண்டு வருடமாக எதிர்பார்த்து ஏமாந்த அவர், போனவாரம் தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசியக் கூட்டம் போட்டார். இக்கூட்டத்தின் விளைவுகளை உணர்ந்த முதலமைச்சர் நாராயணசாமி அவசர அவசரமாக சென்று ஆறுமுகத்தை சந்தித்து ஆறுதல்படுத்தியுள்ளார்.

இன்னும் இருபதுக்கும் அதிகமான வாரியங்களின் தலைவர் பதவி காலியாகத்தான் உள்ளன.

""கொடுத்த 7 வாரியத் தலைவர்களுக்கே ஏகப்பட்ட தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவர்னர். நிலவரம் சரியாகட்டும். பிறகு பார்க்கலாம்'' என்று அந்த 20 வாரியத் தலைவர் பதவிகளையும் நிரப்பாமல் இழுத்துப் போட்டுக் கொண்டே வந்தார் முதல்வர் நாராயணசாமி.

இதனால் அதிருப்தியும் எரிச்சலுமடைந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளான விநாயகமூர்த்தி, டி.ராமச்சந்திரன், தேவதாஸ், தனுசு, ரகுமான், சுரேஷ், சண்முகம், இளையராஜா உள்ளிட்டவர்கள் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி அலுவலகத்திற்குள் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

பதறிப் போன நாராயணசாமியும் நமச்சிவாயமும் கட்சி அலுவலகம் சென்று சமாதானப்படுத்தினர்.

இப்படி கட்சியினர், கவர்னர், நிதிப் பற்றாக்குறையென பலமுனைத் தாக்குதலால் மனமுடைந்த முதலமைச்சர் நாராயணசாமி, ""நமக்கு இது சரிப்படாது. சி.எம்.மாக நமச்சிவாயத்தை உட்கார வச்சுட்டு, வர்ற எம்.பி. எலெக்ஷன்ல டெல்லிக்கு கிளம்பிட வேண்டியதுதான்...'' நெருங்கிய விசுவாசிகளிடம் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.

புதுச்சேரியில் இருந்து புதுடெல்லிக்கு முதலில் பயணமாகப் போவது நாராயணசாமியா? கிரண்பேடியா? விவாதங்கள் தொடங்கிவிட்டன.

-சுந்தரபாண்டியன்

இதையும் படியுங்கள்
Subscribe