Advertisment

சொந்தக் கட்சிக்கு சூனியம்! விழுப்புரம்-நாகை தெற்கு தி.மு.க. புலம்பல்!

VPM

டந்த ஜன.29-31 நக்கீரன் இதழில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.வில் நடந்த உள்குத்து கலாட்டாக்களை விலாவாரியாக எழுதியிருந்தோம். இத்தகைய களேபரங்கள் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க.விலும் பஞ்சமில்லாமல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்த நக்கீரனைப் படித்துவிட்டு, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட உடன்பிறப்புகள் சிலர் நம்மைத் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.

Advertisment

vpm

இரண்டு மாவட்டங்களின் எல்லைக்கப்பால் ஒரு இடத்தில் நம்மைச் சந்தித்த அடுத்த நிமிஷமே பேச ஆரம்பித்தார் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த அந்த உ.பி. ""எங்க நாகபட்டினம் தெற்கு மாவட்டத்துல வேதாரண்யம் வடக்கு, தெற்கு, நாகபட்டினம், தலைஞாயிறு, திருமருகல் வடக்கு, தெற்கு, கீழ்வேளூர் வடக்கு, தெற்கு, கீழையூர்னு எட்டு ஒன்றியங்கள் இருக்கு. மாவட்டத்தை ரெண்டா பிரிச்சபோது ஏ.கே.எஸ்.விஜயனின் ஆளான மீனவர் சமூகத்தைச் சேர்ந்த கௌதமனை மா.செ.வாக்குனாரு தளபதி.

Advertisment

இதுக்குப் பின்னால ஒரு கதையே இருக்கு. சட்டமன்றத் தேர்தலப்போ சீட் கிடைக்காத கோபத்தில் இருந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் வடவூர் ராஜேந்திரன், தனது மகனுக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த மாவட்ட அவைத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், திருக்குவளை மேகநாதன் இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் விஜயனுக்கு ஆப்பு வைத்தார்கள்.

கௌதமன் மா.செ.ஆனதும் கீழ்வேளூர்

கௌதமன் மா.செ.ஆனதும் கீழ்வேளூர் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மதிவாணன், தனது வளையத்துக்குள் கொண்டு வந்து ஒரு டீமை செட் பண்ணுனாரு. ஆனாலும் விஜயனின் ஆட்களே மாவட்டம் முழுக்க பரவி இருப்பதால், கௌதமனால் ஆக்டிவாக வேலை செய்ய முடியவில்லை. ஒ.செ.க்களான கீழையூர் தாமஸ் ஆல்வா எடிசன், தலைஞாயிறு மகாகுமார், திருமருகல் செல்வசெங்குட்டுவன், நாகூர் ந.செ.செந்தில்குமார் இவர்களைத் தவிர, மற்றவர்கள் கௌதமனுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கேட்டா மாவட்டத்துக்கு மரியாதை கொடுக்கத் தெரியலைன்னு சொல்றாங்க. வருகிற 22-ஆம் தேதி எங்க மாவட்டத்து நிர்வாகிகளை அறிவாலயத்தில் சந்திக்கும் தளபதி, எல்லா உள்குத்துகளுக்கும் வேட்டு வச்சா நல்லா இருக்கும்''’என்ற ஆசையை வெளிப்படுத்தினார் அந்த உ.பி.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மற்றொரு சீனியர் உ.பி.யோ, ""கீழ்வேளூரில் போட்டியிட்ட மதிவாணனை தோற்கடிக்கும் வேலைகளில் இறங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் விஜயனை நீக்கியது தலைமை. ஆனால் ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக, அப்பட்டமாக வேலை பார்த்த மா.மீனாட்சிசுந்தரத்தின் மீது எந்த ஆக்ஷனும் எடுக்கல. நக்கீரனில் வந்த வடக்கு மாவட்ட கதை தான் இங்கேயும். அதாவது, அமைச்சருடன் கூட்டு, சொந்தக் கட்சியினருக்கு வேட்டு, காசு வாங்கிக் கொண்டு கட்சிப் போஸ்டிங்னு ஒரு ரூட்ல போய்க்கிட்டிருக்கு எங்க மாவட்ட தி.மு.க.''’என்றார் வருத்தம் கலந்த குரலில்.

vpm2

நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்க, அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளராக இருந்து இப்போது தி.மு.க.வில் ஐக்கியமாகியிருப்பவர் வாய்மேடு பழனியப்பன். திவாகரனின் விசுவாசியான இவர், ஆங்கிலப் புத்தாண்டு அன்று, மன்னார்குடிக்கு சென்று, திவாகரனைச் சந்தித்து ஆசி பெறுவது வழக்கமாம். மாவட்ட உ.பி.க்களின் வாட்ஸ்-அப் குரூப்பில், திவாகரனை, பழனியப்பன் சந்தித்த போட்டோ ஒன்று ஸ்பீடாகப் பரவ ஆரம்பித்ததும்... "அது போன வருஷம், ஆனா நான் இந்த வருஷம் இருக்குறது தி.மு.க.வுல'’என பழனியப்பன் சமாளித்த கூத்தும் நடந்தது.

பணபலம் கிடையாது. பந்தா அரசியல் கிடையாது என மா.செ. கௌதமனுக்கு ப்ளஸ்பாயிண்ட்டுகள் இருந்தாலும், உள்ளடி வேலைகளால் சொந்தக் கட்சிக்கே சூனியம் வைக்கப்பட்டுகிறது. நாகப்பட்டினம் நகராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட நாகை ந.செ. போலீஸ் பன்னீரின் மனைவி தங்கபிள்ளை தோற்கடிக்கப்பட்டது அதற்கொரு உதாரணம் என்கிறார்கள் உ.பி.க்கள்.

மாஜி மீன்வளத்துறை அமைச்சரான அ.தி.மு.க. ஜெயபாலுடன் இருக்கும் நெருக்கத்தால், மீனவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டபோது, தி.மு.க.வினர் அதிகம் இருக்கும் நம்பியார்நகர் மீனவர்களுக்கு எதிராகவும் ஜெயபாலின் அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு ஆதரவாகவும் பஞ்சாயத்துப் பேசியவர் கௌதமன். இவை எல்லாவற்றையும் கணக்குப் போட்டு, கௌதமனுக்கு எதிராக பகிரங்கமாகவே முண்டா தட்டுகிறார்கள் விஜயனின் ஆதரவாளர்கள்.

இதன் எஃபெக்ட்டாக பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தில் ஐம்பது அறுபது பேர்தான் கலந்துகொண்டார்கள். எல்லாவற்றிற்கும் நிரந்தரத் தீர்வு தளபதி ஸ்டாலின் கையில்தான் இருக்கு''’என்கிறார்கள் நாகை தெற்கு மாவட்டத்தின் பெரும்பாலான உ.பி.க்கள்.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வில் சொந்தக் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டு, குழி பறிப்பு என படு சீரியசாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் நிர்வாக வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, மத்தி, தெற்கு என மூன்றாகப் பிரித்தது தலைமை. மா.செ.க்களாக முறையே மஸ்தான், பொன்முடி, அங்கயற்கண்ணி நியமிக்கப்பட்டனர்.

இந்த மாவட்டத்தில் வன்னியர்களும் தலித்துகளும் அதிகளவில் இருந்தும் தி.மு.க. மா.செ.க்களாக ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை என்ற விரக்தி அந்த சமூக மக்களிடம் இருக்கவே செய்கிறது. அதனால் இப்போது மா.செ. பதவியைக் கைப்பற்ற வன்னிய சமூகத்தைச் சேர்ந்த வசந்தவேல், மாஜி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், வண்டிப்பாளையம் வீரபாண்டியன் ஆகியோர் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.

அதேசமயம் உடையார் சமூகத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தன்கார்த்தி, மாஜி எம்.பி.ஆதிசங்கர், கணையார் விஜயகுமார், தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ணனின் மகன் மணிமாறன் ஆகியோரும் மா.செ. ரேஸில் குதித்துள்ளனர். பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், அங்கயற்கண்ணியை எப்படியாவது கழற்றிவிட்டு, அந்த இடத்தைக் கைப்பற்ற காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்த சாதிரீதியிலான சடுகுடு ஆட்டம் ஜனவரி 25-ஆம் தேதி பகிரங்கமாக வெடித்தது. அன்றைய தினம் உளுந்தூர்பேட்டையில் பொன்முடி தலைமையில் மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியைக் குறிவைத்து வசந்தன் கார்த்தியை பூஸ்ட்-அப் பண்ணி வருகிறது ஒரு கோஷ்டி. நாங்க மட்டும் என்ன இனாவாயனுகளா என்ற கோதாவில் குதித்தது, இதே தொகுதியில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போன திருநாவலூர் ஒ.செ. வசந்தவேல் கோஷ்டி.

வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஃப்ளக்ஸ் பேனர்களில் வசந்தன் கார்த்தி படத்தை பெரிதாகவும் வசந்தவேல் படத்தை சிறிதாகவும் போட, வினை வெடித்து ஒரு கோஷ்டியைப் பார்த்து இன்னொரு கோஷ்டி சவுண்டைக் கொடுக்க, பொன்முடி முறைத்துப் பார்த்ததும் அடங்கினர். ஆனாலும் கூட்டம் முடிந்ததும் பொன்முடியை சாப்பிட அழைப்பதில் இருதரப்புக்கும் கர்புர் தொடர... நொந்துபோன பொன்முடி, "எனக்கு சாப்பாடே வேணாம்ப்பா' எனச் சொல்லிவிட்டு கடலூருக்குப் பறந்துவிட்டார்.

மார்ச் 12, 14-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டங்களின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக அனைத்து உள்ளடிகளும் அடங்குமா, இல்லை மேலும் கொந்தளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-எஸ்.பி.சேகர், செல்வகுமார்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe