Advertisment

பரோல் முடிவதற்குள் ஜெயில்! "தியாகி'யான சசி!

sasikala

ரோல் காலம் முடியும் முன்பே பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்பிவிட்டார் சசிகலா. கணவர் நடராஜனின் மறைவையொட்டி, இறுதிச் சடங்குகளில் பங்குபெறுவதற்காக 15 நாட்கள் பரோலில் வந்தவர், நக்கீரன் முன்கூட்டியே சொன்னது போல, மூன்று நாட்கள் மீதமிருந்த நிலையில் சிறை திரும்பியிருக்கிறார்.

Advertisment

mnatarajan

மார்ச் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை -தமிழ் அரசி மண்டபத்தில் ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. காலை 9 மணி முதலே திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் நிகழ்ச்சிக்கு

ரோல் காலம் முடியும் முன்பே பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்பிவிட்டார் சசிகலா. கணவர் நடராஜனின் மறைவையொட்டி, இறுதிச் சடங்குகளில் பங்குபெறுவதற்காக 15 நாட்கள் பரோலில் வந்தவர், நக்கீரன் முன்கூட்டியே சொன்னது போல, மூன்று நாட்கள் மீதமிருந்த நிலையில் சிறை திரும்பியிருக்கிறார்.

Advertisment

mnatarajan

மார்ச் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை -தமிழ் அரசி மண்டபத்தில் ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. காலை 9 மணி முதலே திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர். தினகரன் மண்டபத்துக்குள் அமர்ந்து தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

காலை 10:30 மணிக்கு தோழர் நல்லகண்ணு வந்ததும் தலைவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். நல்லகண்ணு படத்தைத் திறந்துவைக்க, ஆசிரியர் வீரமணி மலரை வெளியிட, திவாகரன் பெற்றுக்கொண்டார்.

Advertisment

""முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைய முழுமையாக நின்றவர் நடராஜன்'' என தோழர் நல்லகண்ணு நினைவுகூர்ந்தார்.

மலர் வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “""திராவிடத்தால்… தமிழால் வளர்ந்தவர் நடராஜன். சசிகலாவும் இவரும் செய்த தியாகங்கள் கணக்கிலடங்காதவை''’என்று பாராட்டிப் பேசினார். தோழர் தா. பாண்டியன், தொல் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலரும் நடராஜனையும் சசிகலாவையும் தியாகிகளாக சித்தரித்தனர்.

sasi

மேடையில் பேசியவர்கள் பலரும் தினகரனின் அரசியல் பிரவேசத்தை முன்னிறுத்திப் பேச... அதனை மேடையில் அமர்ந்தபடி ரசித்துக்கொண்டிருந்தார் தினகரன்.

அதேசமயம் இப்படியான பேச்சுகள் அதிகம் வரும்போது, "அடுத்தவர்கள் பேச இடம்கொடுங்கள்' என துண்டுச்சீட்டு எழுதியனுப்பினார் திவாகரன். காலை 10:15 மணிக்கு மண்டபத்துக்குள் நுழைந்த தினகரனின் தம்பி பாஸ்கரன், "பாஸ் பேரவை' என பேட்ஜ் அணிந்திருந்த தொண்டர்கள் சூழ உள்ளே நுழைந்து, மேடைக்கு கீழே தனியாக படம் திறந்தார்.

30-ஆம் தேதி நடராஜன் நினைவுப் படம் திறக்கப்பட்ட நிலையில், மார்ச் 29-ஆம் தேதி மாலை, வண்ண உடையணிந்த ஒல்லியான ஐ.பி.எஸ். அதிகாரி வந்ததாகவும், அவருடன் சசிகலா நீண்ட நேரம் உரையாடியதாகவும் சொல்லப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியைச் சந்தித்த சசி, துக்க நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத எடப்பாடி தரப்பு மீதான கோபத்தில், அவர் அனுப்புவதாகச் சொன்ன தூதுவர்களை அனுப்பவேண்டாமென மறுத்துவிட்டாராம்.

படத்திறப்பு விழா முடிந்து மறுநாளில், தஞ்சை அருளானந்தம் வீட்டுக்கு வந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சசிகலாவுக்கு ஆறுதல் சொன்னது திடீர் திருப்பம். சனிக்கிழமை காலை 8:50 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி பெங்களூரு நோக்கிச் சென்றார் சசி.

உறவுகளின் அதிகார மோதல், ஒற்றுமையின்மை, எடப்பாடி தரப்பின் அலட்சியம் இவற்றைக் கண்டு கனத்த இதயத்துடனே சிறை சென்றிருக்கிறார் சசிகலா.

Mn natarajan sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe