இமயமலைக்கு ரஜினி கிளம்பும் முன் 13 மாவட்டங்களுக்கான ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் அதிருப்தி புகைச்சல் கிளம்பியதும், ரசிகர் மன்றத்தின் சீனியர்களைக் கூப்பிட்டு, குளிர்வித்து நிலைமையை சுமுகமாக்கி வருகின்றனர் வி.எம்.சுதாகரும் ராஜு மகாலிங்கமும். இந்த நிலையில் "எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் தருவேன்' எனச் சொன்ன ரஜினி, 15 நாள் பயணமாக இமயமலைக்குக் கிளம்பிவிட்டார். ’"எந்த வேண்டுதலுக்காகவும் செல்லவில்லை, நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் இமயமலைக்குச் செல்கிறேன், பாபாஜி குகையில்
இமயமலைக்கு ரஜினி கிளம்பும் முன் 13 மாவட்டங்களுக்கான ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் அதிருப்தி புகைச்சல் கிளம்பியதும், ரசிகர் மன்றத்தின் சீனியர்களைக் கூப்பிட்டு, குளிர்வித்து நிலைமையை சுமுகமாக்கி வருகின்றனர் வி.எம்.சுதாகரும் ராஜு மகாலிங்கமும். இந்த நிலையில் "எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் தருவேன்' எனச் சொன்ன ரஜினி, 15 நாள் பயணமாக இமயமலைக்குக் கிளம்பிவிட்டார். ’"எந்த வேண்டுதலுக்காகவும் செல்லவில்லை, நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் இமயமலைக்குச் செல்கிறேன், பாபாஜி குகையில் தங்குகிறேன் அவ்வளவுதான்'’என சிம்பிளாக பதில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறார்.
ஆனால் தனிக்கட்சிக்கு 3 பெயர்களை எழுதி எடுத்துச் சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷில் இருக்கும் பி.ஜே.பி. ஆதரவு சாமியார்களிடம் அதைக்காட்டி, நியூமராலஜிபடியும் தனது சாதகத்திற்கு ஏற்றவாறும் எந்தப் பெயரை வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்கும் திட்டத்தில் உள்ளாராம். அதற்கடுத்ததாக, பாபாஜியின் அசரீரி அருள்வாக்கு கிடைத்ததும் சென்னை திரும்பும் திட்டத்துடன் இமயமலைக்குச் சென்றுள்ளாராம் ரஜினி.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ஈரோட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த 08-ஆம் தேதி, சென்னையில் மகளிர் தினத்தை மிகச்சிறப்பாக நடத்தியது மக்கள் நீதி மய்யம். இராயப்பேட்டை -ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணி விழாவுக்கு மாலை 3 மணிவரை அனுமதி கொடுக்கவில்லை போலீஸ். தடை போடும் எண்ணத்தில் இருந்தது மாநில அரசு. கடைசி நேரத்தில் அனுமதி தரப்பட்டது.
இந்நிகழ்ச்சியை அடுத்து, 10-ஆம் தேதி மதியம் கோவை வந்த கமல், அவினாசியில், அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்ட போராட்டக் குழுவினரைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதற்கடுத்து, மாலை 3:45 மணிக்கு, ஈரோடு அருகே உள்ள மாமரத்துப்பாளையத்தில் இயங்கிவரும் சக்தி மசாலா நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு வந்து குழந்தைகளோடு அளவளாவினார்.
பெருந்துறை, ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி போன்ற கொங்கு பெல்ட்டில் கட்சிக் கொடி ஏற்றி, சிறிய அளவிலான பொதுக்கூட்டங்களில் பேசும் கமல், கொங்குமண்டல தொழிலதிபர்களைச் சந்திக்கும் திட்டமும் வைத்துள்ளாராம்.
இதெல்லாம் ஆளும்தரப்புக்கு கடுப்பைக் கிளப்ப, ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, திண்டல் வெள்ளாளர் கல்லூரி நிர்வாகத்திற்கு மிரட்டல் வர... அக்கல்லூரிகளில் மாணவர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுபோல கமல் நிகழ்ச்சிக்கு அரசு தரப்பில் பல தடைகளைத் தொடர்ந்து ஏற்படுத்த திட்டமாம்.
தனியார் நியூஸ் சேனல் ஒன்று 10, 11 ஆகிய தேதிகளில் விவசாயிகள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 11-ஆம் தேதி கமல் கலந்துகொள்வதாலேயே, 10-ஆம் தேதி கருத்தரங்கை தொடங்கி வைக்க மறுத்துவிட்டார் அமைச்சர் செங்கோட்டையன். அரசு நெருக்கடியைக் கடக்கும் வகையில் பெரியாரின் இல்லம் அமைந்துள்ள ஈரோட்டிலிருந்து பயணத்தை வேகப்படுத்தினார் கமல்.
-ஈ.பா.பரமேஷ், ஜீவாதங்கவேல்
-ஜீவாபாரதி