Advertisment

தி.மு.க. கூட்டணிக்கு வேட்டு வைக்கும் காங்கிரஸ் உள்ளடி!

congress

ள்கட்சி வில்லங்கத்தால் கூட்டணியில் விரிசலை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூட்டிய கட்சியின் செயற்குழுவினை முக்கிய தலைவர்கள் அனைவரும் புறக்கணித்ததுடன், "திருநாவுக்கரசரை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்கிற கோரிக்கையுடன் ஓரணியில் திரளத் துவங்கியிருக்கிறார்கள் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள்.

Advertisment

congress

காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவற்றை ஆலோசிப்பதற்காக கட்சியின் செயற்குழுவை சத்தியமூர்த்திபவனில் கூட்டியிருந்தார் திருநாவுக்கரசர். கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முகுல்வாஸ்னிக், சென்னாரெட்டி, காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், பீட்டர் அல்ஃபோன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், கோஷ்டி தலைவர்களின் ஆதரவு மாவட்ட தலைவர்கள் என முக்கிய தலைகளில் 90 சதவீதத்தினர் செயற்குழுவினை புறக்கண

ள்கட்சி வில்லங்கத்தால் கூட்டணியில் விரிசலை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூட்டிய கட்சியின் செயற்குழுவினை முக்கிய தலைவர்கள் அனைவரும் புறக்கணித்ததுடன், "திருநாவுக்கரசரை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்கிற கோரிக்கையுடன் ஓரணியில் திரளத் துவங்கியிருக்கிறார்கள் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள்.

Advertisment

congress

காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவற்றை ஆலோசிப்பதற்காக கட்சியின் செயற்குழுவை சத்தியமூர்த்திபவனில் கூட்டியிருந்தார் திருநாவுக்கரசர். கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முகுல்வாஸ்னிக், சென்னாரெட்டி, காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், பீட்டர் அல்ஃபோன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், கோஷ்டி தலைவர்களின் ஆதரவு மாவட்ட தலைவர்கள் என முக்கிய தலைகளில் 90 சதவீதத்தினர் செயற்குழுவினை புறக்கணித்துவிட்டனர்.

Advertisment

இந்த புறக்கணிப்பு டெல்லிவரை எதிரொலிக்க... ""செயற்குழுவுக்கு நான் அனுமதி தரவில்லை. அதை மீறித்தான் செயற்குழுவைக் கூட்டியிருக்கிறார் திருநாவுக்கரசர்'' என ராகுல்காந்தியிடம் புகார் வாசித்திருக்கிறார் முகுல்வாஸ்னிக்.

இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் செயற்குழுவைக்கூட்டி அதில் பேசிய திருநாவுக்கரசர், ""குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் அனைவரையும் நானே தொடர்புகொண்டு செயற்குழுவில் கலந்துகொள்ள அழைத்தேன். "உடல்நலம் சரியில்லாததால் வர இயலாது' என குமரிஅனந்தன் மட்டும் சொன்னார். மற்றவர்கள் வருவதாகச் சொன்னார்கள்... ஆனால், அவர்கள் வரவில்லை. வேண்டுமென்றேதான் அவர்கள் வரவில்லை. கராத்தே தியாகராஜனுக்கு நான்தான் மாவட்ட தலைவர் பதவி வாங்கித் தந்தேன். எல்லா பிரச்சினைகளுக்கும் அவர்தான் காரணமெனத் தெரிகிறது.

மாநிலத் தலைவர் பதவியில் இருப்பதால் எனது கடமையைச் செய்கிறேன். இந்த பதவி எனக்கு நிரந்தரமில்லைங்கிறது தெரியும். ஆனா, இருக்கும்வரையில் கட்சிக்காக உழைப்பேன். அதை யாரும் தடுத்துவிடமுடியாது. செயற்குழு கூட்டத்துக்கு மூன்றுமுறை வரவில்லையெனில் அவர்களை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு இருப்பதால் அதைப் பயன்படுத்த தயங்கமாட்டேன். ஆளும்கட்சியிலிருந்தும், எதிர்க்கட்சியிலிருந்தும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூன்று பேரிடம் அரசியல் செய்தவன் நான். இவர்களெல்லாம் எம்மாத்திரம்? எதிர்க்கட்சிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எதையும் சந்திக்க நான் தயார்'' என ஆவேசப்பட்டிருக்கிறார்.

செயற்குழுவில் கலந்துகொள்ளாதது குறித்து பீட்டர் அல்ஃபோன்ஸிடம் நாம் கேட்டபோது, ""உள்கட்சிப் பிரச்சினைகளை பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார். ஈ.வி.கே.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்திடம் விவாதித்தபோது, ""தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த காங்கிரசின் நிலைப்பாடு. கட்சியின் டெல்லி மேலிடத்தின் எண்ணமும் இதுதான். அப்படியிருக்க, இந்த கூட்டணியை உடைத்து காங்கிரசை வெளியே கொண்டு வரவேண்டும் என்கிற திட்டத்துடனேயே செயல்படுகிறார் திருநாவுக்கரசர். சசிகலா-தினகரன் கட்சியோடு கூட்டணி வைப்பதுதான் அவரது நோக்கம். அதற்காக, தினகரனோடு பேசவேண்டியதெல்லாம் பேசி முடித்துவிட்டார். இந்த நிலையில், தி.மு.க.வுடனான கூட்டணி முறிவதற்கேற்ப, முரண்பாடுகளை உருவாக்கி வருகிறார். இப்படிப்பட்ட சிந்தனைகளோடு இருப்பதால்தான் திருநாவுக்கரசர் கூட்டிய செயற்குழுவை புறக்கணித்தோம்'' என்கிறார் ஆவேசமாக.

congress

இதுகுறித்து திருநாவுக்கரசரின் ஆதரவாளரும் மாவட்டத் தலைவருமான சிவராஜசேகரனிடம் பேசியபோது, ""தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்; மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவேன் என தொடர்ந்து சொல்லி வருகிறார் திருநாவுக்கரசர். தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி வைப்பதற்காக திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரத்தை எதிர்கோஷ்டிகள் செய்து வருகின்றன. இதற்கெல்லாம் திருநாவுக்கரசர் பயந்தவர் அல்ல. அவரை விமர்சிக்கவோ, குற்றஞ்சாட்டவோ யாருக்கும் அருகதை கிடையாது'' என்கிறார் மிக காட்டமாக.

கராத்தே தியாகராஜனால்தான் இந்தப் புறக்கணிப்பு என்று திருநாவுக்கரசர் தரப்பு குற்றம்சாட்டுவது பற்றி அவரிடமே கேட்டபோது... ""மாவட்ட தலைவர் பதவிக்கு தலைவர் சிதம்பரம் என்னைப் பரிந்துரைத்தார். அதனை ஏற்று பதவி கொடுத்தவர் அன்னை சோனியாகாந்தி. திருநாவுக்கரசர் எனக்கு பதவிப் பிச்சை போடவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், நானும் முதல்வர் வேட்பாளர்தான் என பொதுவெளியில் திருநாவுக்கரசர் பேட்டி தருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதானே? கட்சிக்குள் வெடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல், அதனை ஊதிப் பெரிதாக்குவதால்தான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன''’என்கிறார் மிக அழுத்தமாக!

இந்த நிலையில், "திருநாவுக்கரசர் தலைவராக இருந்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர வாய்ப்பில்லை' என காங்கிரஸ் மேலிடத்துக்கு தி.மு.க. தகவல் தந்துள்ளது. "மாநிலத் தலைமையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரும்' என்கிறார்கள் கதர்ச்சட்டை தலைவர்கள்.

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe