Advertisment

அரசியலுக்கு பயன்படுமா அஞ்சலி? -இமானுவேல் சேகரன் நினைவு நாள்!

afaf

ந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியிலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியதால் பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுலமக்கள்.

Advertisment

இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல்சேகரன் நினைவுதினமும், அக்.30-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையும் விமரிசையாக கொண்டாடப்படும்போது, சமூக மோதலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மாநில அரசுகள் செயல்படும்.

Advertisment

ii

எனவே 2013-ஆம் ஆண்டிலிருந்து ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இன்று வரை அதை நீட்டித்து வந்தது இராமநாதபுர மாவட்ட நிர்வாகம். ""வாடகை வாகனங்களில் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் வந்தாலும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்குமேல் வரக்கூடாது. 1 கி.மீ-க்குள்தான் தொடர் ஓட்டமாக ஜோதியை எடுத்து வரவேண் டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.'' இதற்காக மாவட்டத்தில் 5000 காவலர்களை நிறுத்தி, சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா

ந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியிலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியதால் பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுலமக்கள்.

Advertisment

இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல்சேகரன் நினைவுதினமும், அக்.30-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையும் விமரிசையாக கொண்டாடப்படும்போது, சமூக மோதலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மாநில அரசுகள் செயல்படும்.

Advertisment

ii

எனவே 2013-ஆம் ஆண்டிலிருந்து ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இன்று வரை அதை நீட்டித்து வந்தது இராமநாதபுர மாவட்ட நிர்வாகம். ""வாடகை வாகனங்களில் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் வந்தாலும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்குமேல் வரக்கூடாது. 1 கி.மீ-க்குள்தான் தொடர் ஓட்டமாக ஜோதியை எடுத்து வரவேண் டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.'' இதற்காக மாவட்டத்தில் 5000 காவலர்களை நிறுத்தி, சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா மினி உளவு விமானத்தின் கண்காணிப்புடன் பரமக்குடியை வட்டமடித்தது காவல்துறை.

இமானுவேல்சேகரனுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்தும் செல்லூர் கிராம மக்கள், காலை 7.50-க்கே அஞ்சலி செலுத்திவிட்டு வெளி யேற, அதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட் டுக் கழகமும் அஞ்சலி செலுத்த, அ.தி.மு.க. சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.

iii

ஆளுங்கட்சியாக இருந்தால் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், எதிர்க்கட்சியாக இருந்தால் சுப.தங்க வேலன். இவர்கள் இருவரில் ஒருவர் தி.மு.க. சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் கள்.. ஆனால், இந்த ஆண்டு நிலைமை சற்று மாறி யிருக்கிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் புடைசூழ தி.மு.க. தலைவர் ஸ்டாலினே இமானுவேல் நினைவிடத் திற்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தமி ழகத்தின் அனைத்து முக்கிய கட்சிப் பிரமுகர்களும் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

""அண்மையில் கட்சி ஆரம்பித்த தினகரன்கூட கடந்த ஆண்டும் இவ்வாண்டும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி னார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், தங்களது சமுதாயத் தலைவர் நினைவிடத்திற்கு வருவதில்லையே என்ற பெரும் குறை தேவேந்திர குல மக்களிடம் இருந்தது. இந்த ஆண்டு அந்த குறையை நிவர்த்தி செய் திருக்கிறார்'' என தங்களுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர் நினைவிடத்தினில் இருந்த கீழகன்னிச்சேரி, வீரம்பல், வாத்தியனேந்தல் உள்ளிட்ட கிராம மக்கள்.

தேவேந்திரகுல சமூகத்தை சேர்ந்த சிலரோ, ""நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியே இதற்குக் காரணம். குறிப் பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், ஒட் டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கள் வெற்றிக்கு தேவேந்திரகுல சமூகத்து மக்களின் ஓட்டுக்களே காரணம் என தி.மு.க. கருதுகிறது. அதேநேரத்தில் பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், சாத்தூர், நிலக்கோட்டை சட்ட மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சொற்ப ஓட்டுக் களில் தோற்றதற்கும் இந்த மக்களே காரணம் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த 5 தொகுதி களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் தேவேந்திர குல மக்களே. ஒருவேளை இந்த 5 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தால், தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும்'' என்று குறிப்பிட்டனர்.

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட நாகலா புரத்தைச் சேர்ந்த தேவேந்திர குல இளைஞர் கார்த்திக் நம்மிடம் ""தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவேந்திரகுல மக்கள் அதிகம் வசிக்கும் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச் செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் தமிழிசையை விட கூடுதலாக தலா 60 ஆயிரம் வாக்குகள் கனிமொழி பெற்றார். அதேபோல், ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கும் இந்த சமூகத்தினரின் வாக்குகள் காரணமாக இருப்பதை தி.மு.க. உணர்ந்திருக்கிறது'' என்றார்.

அவரே தொடர்ந்து... ""அருந்ததி இன மக்களின் தலைவராக விளங்கும் ஒண்டிவீரன் நினைவு தினம் கடந்தமாதம் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது. சபாநாயகர் தனபாலுக்குப் பதிலாக இந்த முறை ஓ.பி.எஸ். வந்தார். அதனால் முதல்முறையாக மு.க. ஸ்டாலினும் நெல்லை வந்து ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத் தினார். அப்போதே தேவேந்திர குல மக்களிடம் முணுமுணுப்பு எழுந்தது. அதைச் சரிசெய்யும் வகையிலே இன்றைய தினம் பரமக்குடிக்கு வந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது'' என்கிறார் அவர்.

பரமக்குடி செல்வதற்காக ஸ்டாலின் மதுரை வந்திருந்தபோது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து ஆச்சர்யப்படுத்தி னார்.

இதற்கிடையே மு.வீரப்பெருமாள் தேவரை நிறுவனத் தலைவராகக் கொண்ட முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் வெளி யான அறிக்கை யில், இமானுவேல் சேகரன் நினை விடத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்த செல்ல வேண்டாம் என பணிவுடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

-நாகேந்திரன்

nkn170919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe