ளம் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்டது ஹிந்தி சினிமா உலகில் பலத்த அதிர்வையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவரின் வளர்ச்சியைப் பிடிக்காத சீனியர் நடிகர்களின் அரசியல் செல்வாக்குதான் சுஷாந்த்தை காவு வாங்கிவிட்டது என ஹிந்தி பிரபலங்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இதேபோல் கடந்த மே 26-ஆம் தேதி பிரக்ஷா மேத்தா என்ற இளம் ஹிந்தி நடிகை தற்கொலை செய்துகொண்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர், மும்பையில் தங்கி ஹிந்தி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார். "க்ரைம் பேட்ரோல்' என்ற சீரியல் இவரை பளிச்சென அடையாளம் காட்டியதால் ஹிந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

இந்த நிலையில்… லாக்டவுன் வந்ததால் சினிமா சான்ஸும் சீரியல் சான்ஸும் இல்லாத மன அழுத்தத்தால் விரக்தியடைந்து இந்தூரில் உள்ள தனது வீட்டில் ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

tt

Advertisment

மன அழுத்தம்!

இரண்டு வருடத்திற்கு முன்பு "மீ டூ' பூகம்பம் ஏற்பட்டு ஹாலிவுட் சினிமா தொடங்கி நம்ம கோலிவுட் வரைக்கும் கிடுகிடுக்க வைத்தது. அந்த மீ டூ’தான் இப்போது மன அழுத்தம் என்ற பெயரில் வெடித்துக் கிளம்பி பல நடிகைகளை ஓபனாகவே பேசவைத்துக் கொண்டிருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்செல் என்ற இசைக்கலைஞரை தீவிரமாக காதலித்தார் ஸ்ருதிஹாசன். அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து தனது அப்பா கமலஹாசனிடம் அறிமுகப்படுத்தினார். சின்ஸியராகப் போய்க்கொண்டிருந்த இவர்களது லவ் திடீரென பிரேக்அப் ஆனது. இதனால் பெரிதும் அப்செட்டான ஸ்ருதி வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.

பின்னர் சுறுசுறுப்பாகி தெலுங்கு, தமிழ்ப் படங்களை வரிசையாக கமிட் பண்ணினார். 3 வருடங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன் என ஓபனாக சொன்னார் ஸ்ருதி. “""இந்த லாக்டவுன் காலம் என்னை பல வகையிலும் மாற்றியிருக்கிறது. பழைய விஷயங்களை மறக்கச் செய் திருக்கிறது. என்னைப் புரிந்துகொள்ளும் ஒருவரின் நட்புக்காக காத்திருக் கிறேன்''’ என்கிறார் ஸ்ருதிஹாசன். இதேபோல் நடிகை ஆன்ட்ரியாவும் மன அழுத்தத்திற்காக ஒரு வருடம் சிகிக்சை எடுத்திருக்கிறார்.

தெலுங்கில் பிரபல நடிகையான பாயல்கோஷ் ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்ததாக கண்ணீர் வடிக்கிறார். ""வாழப் பிடிக்காமல் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. இந்த நேரத்தில் சுஷாந்த்சிங்கின் தற்கொலை, என்னை நிலைகுலைய வைத்துவிட்டது''“ என்கிறார் பாயல்கோஷ்,

“இவரின் இந்த நிலைமைக்கு காரணம், எவ்வித காரணமும் சொல்லாமல் பல டைரக்டர்கள் தங்கள் படங்களிலிருந்து நீக்கியதுதான். பாயல்கோஷ் போல பல நடிகைகளுக்கும் இதே நிலைதான்“ என்கிறார் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவர்.

சமீபத்தில்கூட நடிகை த்ரிஷா, சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு காரணம் சில சம்பவங்களை மறப்பதற்குத்தான் என்கிறார். த்ரிஷா மறக்க நினைப்பது மூன்று சம்பவங்களைத்தான்.

1. தெலுங்கு ஹீரோவான ராணா டகுபதியுடனான லவ் பிரேக்அப் ஆனது.

2. தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இவருக்கும் நிச்சயமான திருமணம் நின்றுபோனது.

3. கடந்த மே 21-ந் தேதி ராணா டகுபதிக்கும் மிஹுகா பஜாஜ் என்ற இளம் தொழிலதிபருக்கும் நடந்த நிச்சயதார்த்தம்.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத்தான் ‘மறதி’ என்று வார்த்தையால் மறைக்கிறார் த்ரிஷா.

tt

Advertisment

அரசியல் செல்வாக்கு!

ஹிந்தி சினிமாவைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகளைவிட டான்கள், மாஃபியாக்களின் ஆதிக்கம்தான் அங்கே உள்ள நடிகை-நடிகர்களை அலற வைக்கும். பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருக்கும் மும்பை டான் தாவூத் இப்ராஹிமின் பல நூறு கோடிகள் இப்போதும் ஹிந்தி சினிமாவில் புழங்குகிறது. அவரின் சிஷ்யர்கள் முன்னணி நடிகர், நடிகைகளை ‘ஆபரேட்’ பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தவரை என்.டி.ஆரின் வாரிசுகள்தான் தெலுங்கு சினிமாவில் பராக்கிரமசாலியாக இருந்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு பாலகிருஷ்ணாவின் வயது குறித்து நடிகை ஸ்ரேயா ஏதோ சொல்லப்போக, கொலை மிரட்டலுக்குள்ளாகி குலை நடுங்கிப் போனார் ஸ்ரேயா. இப்போது தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ்வும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் முதல்வர்களாக இருப்பதால் கப்சிப்பாகிவிட்டார்கள் என்.டி.ஆரின் வாரிசுகள்.

நடிகை பூனம் கவுர், அரசியல் செல் வாக்கு மற்றும் மாஃபியா தொடர்புள்ள பிரபல டைரக்டர் ஒருவரைப் பற்றி கடந்தவாரம் பகீர் கிளப்பியுள்ளார். தமிழில் ‘பயணம்’ படத்தில் விமானப் பணிப் பெண்ணாகவும், ‘வெடி’ படத்தில் விஷாலின் தங்கை யாகவும் நடித்தவர் இந்த பூனம் கவுர்.

""எனக்கு உடல்நலம் சரி யில்லை என தெரிந்தும் என்னை அவாய்ட் பண்ண ஆரம்பித்தார் குருஜி. வேறு நடிகைக்கு சான்ஸ் கொடுத்தார். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு "தற்கொலை செய்யப் போறேன்' என போனில் அவரிடம் சொன்னபோது, "நீ சாகும் செய்தி நல்ல செய்தி' என்றார், அரசியல், மாஃபியா தொடர்புள்ள சக்திமிக்கவராக அவர் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை'' என தனது டுவிட்டரில் வெடித்திருக்கிறார் பூனம் கவுர்.

‘குருஜி என பூனம் கவுர் குறிப்பிடும் டைரக்டர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாசனைத்தான் என்கிறார்கள்’ பூனம் கவுரின் தோழிகள். சிலரோ ‘ராம்கோபால் வர்மாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

“திரிவிக்ரம் மிகவும் கண்ணியமான டைரக்டர். எதிர்பார்த்தது கிடைக்காத கோபத்தில் அவரைப் பற்றி அவதூறு கிளப்புகிறார் பூனம் கவுர்’என்கிறார் தெலுங்கு படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிடும் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

இங்கே நம்ம தமிழக அரசியலில் பவர்ஃபுல்லாக இருக்கும் ஒரு கட்சித் தலைவரின் சினிமா வாரிசு ஒருவர், நடிகை ஆன்ட்ரியாவுடன் பழகி கழற்றி விட்டார். ""அவருக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் நெருக்கமாகப் பழகினேன். ஆனால் திடீர்னு என்னை அவர் உதாசீனப்படுத்தியதால் மன அழுத்தம் ஏற்பட்டு ஒன்றரை வருடம் ட்ரீட்மென்ட் எடுத்தேன்''’என ஆன்ட்ரியாவே ஒத்துக்கொண்டார். இந்த கொரோனா காலத்தில் பலவகை கேக்குகள் செய்து பொழுதை போக்கிக்கொண்டிருக்கிறார் ஆன்ட்ரியா.

ஆனால் நடிகை அஞ்சலியோ, டைரக்டர் ஒருவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் சினிமா தயாரித்த மூத்தவரின் மருமகனுடன் வலியப்போய் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

எல்லா மனிதர்களும் போலவே நடிகைகளுக்கும் பலம்-பலவீனங்கள் உண்டு. அவற்றை அறிந்திருக்கும் திரையுலகப் புள்ளிகள் பலரும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுடனும், அவர்களின் நிழலாக உள்ள மாஃபியாக்களுடனும் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தத் தொடர்பு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பவர்ஃபுல்லாக இருக்கிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள் நடிகைகளின் மனதை பாதிப்பதுடன், சில வேளைகளில் உயிருக்கும் வேட்டு வைத்து விடுகின்றன.

-ஈ.பா.பரமேஷ்வரன்

___________

ஏம்மா இப்படி?

“நான் தமிழச்சியாக இருப்பதால்தான் அவ்வளவாக சான்ஸ் கிடைப்பதில்லை’’ என புலம்பு பவர் "மேயாத மான்' படத்தில் அறிமுகமான இந்துஜா. இந்த ஊரடங்கு காலத்தில் பல நடிகைகள் கவர்ச்சி ஸ்டில்களை ரிலீஸ் பண்ணுவதைப் பார்த்து அதிரிபுதிரியாக ஸ்டில்களை இந்துஜாவும் ரிலீஸ் பண்ணி விட்டார்.

இதேபோல் கவர்ச்சிக் கோதாவில் குதித்திருப்பவர் டிவி. சீரியல் நடிகையான வெண்பா என்கிற ஆசாத் பரீதா. இவர் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர்.